பெயர்: ராம் மொகம்மத் சிங் ஆசாத்
மதம்: இந்தியன்
நான் சிறுவன். ஊர் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் குழுமிய எம் மக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் சுமந்து ஊடாடிக்கொண்டிருந்தேன். ஒரே நுழைவாயில், திடீரென அடைக்கப்பட்டது ராணுவத்தால். என்ன நடக்கப்போகிறது என உணர்வதற்குள் 1650 தோட்டாக்கள்... கொத்துக்கொத்தாய் என் நட்பும் உறவும் என் கண் முன்னே குருதியில் வீழ்ந்ததே...
எய்தவனா அல்லது அம்பா என்றெல்லாம் குழப்பமில்லை. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன்.
இருபத்தொரு ஆண்டுகள், மைதானக்குருதியை மனதில் சுமந்தேன். புரட்சிக்குழுக்களுடன் இணைந்தேன். அடக்குமுறை கெடுபிடிகளின் கண்களில் மண்ணைத்தூவி, என் இலக்கு நோக்கிய நெடும்பயணம்... காஷ்மீர், அங்கிருந்து ஜெர்மனி, அங்கிருந்து எங்கெங்கோ அலைந்து அவன் இருக்கும் நாடு அடைந்தேன். அணுக முடியவில்லை. காத்திருந்தேன், இருபத்தொரு ஆண்டுகள்... நான் சிலபொழுது தங்கியிருந்த பன்றிக்கொட்டகைகள்கூட குருதி மணத்தை என் நாசியிலிருந்து அகற்றமுடியாது தோற்றன.
இருபத்தொரு ஆண்டுகள் - வளர்த்தேன் வன்மத்தை. இதோ, இந்த வாரம் அவனை அணுக வாய்ப்பு!
தயாரானேன். கள்ளத்துப்பாக்கி மலிவாக இலகுவாக கிடைத்தது. இன்று அவன் என் கண் முன்னே மேடையில்.
அவன் அன்று என் மண்ணில் சிந்திய இந்திய ரத்தம், இன்று அவன் மண்ணில் அவனது ரத்தத்தினால் சாந்தியடையட்டும் என அனுப்பினேன் இரண்டு தோட்டாக்கள்... முதல் தோட்டா, 21 வருட ரௌத்திரம், இதயத்தை துளைத்து நுரையீரலையும் பொத்தலிட்டு வெளியேறியது. கொத்தாய் வீழ்ந்து என் கண் முன்னே மாண்டான். இரண்டாவது தோட்டாவும் யாருக்கோ சேதாரம் செய்ததாம். செய்யட்டுமே... கொஞ்சமா இழந்தோம் நாம்?
அவர்களால் தூக்குக்கயிறால் என் கழுத்தை மட்டுமே முறிக்கமுடிந்தது. என் ஆன்மாவை அல்ல.
ஜாலியன்வாலாபாக் வந்தால் நீங்கள் இன்றும் என்னை சந்திக்கலாம்.
ராம் மொகம்மத் சிங் ஆசாத் ஹை நாம் மேரா.
ஹிந்துஸ்தானி ஹை தர்ம் மேரா.
என் மதத்தின் நிறம்: பன்னெடுங்காலமாய் வெண்மை. இடையில் முன்னூறு ஆண்டுகள் செங்குறுதி. அதன் பின்...
தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை? சர்வேசா! கண்ணீரால் காத்தோம்... இன்று கருகத்திருவுளமோ?????
எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப்பெரின். எண்ணித் துணிந்து பயணம் தாெடங்கியாகிவிட்டது:வெற்றி கிட்டட்டும்!
பதிலளிநீக்குசிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
பதிலளிநீக்கு