என் விழித்திரையில் - சுடலைமாடன்!
'சே, பஸ்ச மிஸ் பண்ணியாச்சே! இப்ப என்ன பண்றது?'
காலேஜ்க்கு அடுத்த பஸ் இரண்டு மணி நேரம் கழித்து என அறிந்ததும் அருகில் இருந்த தியேட்டரில் டிக்கட் வாங்கி
('படம் போட்டு இருவது நிமிசம் ஆச்சி' என்றார் டி. கிழிப்பவர்) நுழைந்தேன். ஐந்து நிமிடத்தில் முன்கதை பிடிபட்டுவிட்டது.
ஒரு சிற்றூரில் கோயில் பூசாரியின் மகனும் அதே ஊரில் ஒரு பெரிய மனிதரின் வைப்பாக இருக்கும் பெண்ணின் மகளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். இரு குடும்பமும் கடுமையாக எதிர்க்க காதல் பற்றிப்பரவி அவள் உண்டாகிறாள். ஏராளமான அவமானங்களோடு ஊர் எல்லை தாண்டி ஒதுக்கி விடப்படுகிறாள்.
பூசாரி தந்தை ஊர்த்திருவிழாவில் சுடலைமாடசாமியாக அந்த வருடம் வரை இரா வேட்டைக்கு வழக்கமாக செல்பவர், கூடிய சபை நடுவில் கல்லூரிப்படிப்பு படிக்கும் மகனுக்கு அந்த பொறுப்பை திணிக்கிறார்.
தந்தை ப்ளஸ் ஊர்க்கட்டுப்பாடுகளை மீற இயலாத மகன் முதன் முதலாய் சுடலைமாடனாய் இரவில் வேட்டைக்கு கிளம்புகிறார். வேட்டைக்கு செல்கையில் எதிரில் எவர் வந்தாலும் கொன்று விடுவார் என ஐதீகம். எனவே ஊர் அடங்கிக்கிடக்கிறது.
ஊர் எல்லையில் 'பிறந்த குழந்தையோடு' காத்திருக்கும் காதலி, குழந்தையை சுடலை மாடனின் காலடியில் கிடத்தி நீதி கேட்கிறார்.
ஒரு ஊருக்கு சாமியாயிருப்பதை விட ஒரு ஆதரவற்ற பெண்ணுக்கு புருஷனாயிருப்பது மேல் என சுடலைமாடன் அந்தப்பெண்ணோடு ஊரை விட்டே ஓடிவிடுகிறார்!!!!?
1980-90களில் 'ரேடிகலான', டேஞ்சரான (இப்ப மட்டும் என்ன வாழுதாம்?!!) இந்தப்படம் என்னுள் எழுப்பிய அதிர்வுகள் இன்றும் ஓயவில்லை!
'நான் ஏரிக்கரை மீதிருந்து எட்டுத்திக்கும் பார்த்திருந்தேன்...'
'கோட்டைய விட்டு வேட்டைக்குப்போகும் சுடலைமாட சாமி...'
ஒரு முறையேனும் யுட்யூபில் கேட்டுத்தான் பாருங்களேன் இப்பாடல்களை! வேறு யார் இசையமைத்திருக்கமுடியும் இவ்வளவு அற்புதமாய்?! (அவரேதான்!!). பாடல்களும் அவரே எழுதினதாம்!
ஒரு ரவுடியை கிராம தெருக்கள் / சந்துகள் வழியே போலீஸ் விரட்டிப்பிடிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து பயணித்தால் எப்படியிருக்கும்?
பொறிபறக்கும் அந்தப்பத்து நிமிடங்களை நான் மீண்டும் தமிழ் சினிமாவில் இன்றுவரை கண்டதில்லை. இதற்காக மட்டுமேகூட இந்தப்படத்தை ஒருமுறையேனும் அவசியம் பாருங்கள்!
"சின்னத்தாயி" அவள் பெயர்!
கருத்துகள்
கருத்துரையிடுக