ஒரு காடை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு சிரமப்படவேண்டும்?
Question: How difficult is it to create a forest?
சில மரக்கன்றுகள், நிறைய ஆர்வம், தேவையான அளவு உப்பு போல நம்பிக்கை, தளராத முயற்சி. அவ்வளவே காடு வளர்க்கப்போதுமானது!
நீங்களே சொல்லுங்களேன் இது எவ்வளவு கடினமானதென்று?!
Answer:
Take a bunch of saplings, add lot of enthusiasm, sprinkle some hope, persevere, persevere... and voila! You got a forest! Easy doozy :-)
இரு ஜோடிக்கரங்கள், ஆறு வருட சோம்பேறித்தனமான (ஆனால் தளராத!) முயற்சி, கண்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் அற்புதத்தை விழி கொள்ளாமல் உள்வாங்க முயலும் குழந்தை ஆர்வம், இதோ காடு ஆச்சு!
Just two pair of hands, Six years of leisurely efforts and ever growing wonderment went into making this urban patch of green (10 feet * 40 feet only!) that houses innumerable lives now :-)
நகரத்தில் வீட்டருகே 10*40 இல் சகல வசதிகளுடன் காடு ரெடி! எந்த விளம்பரமும் இல்லாமலேயே House Full :-) காக்கை, குருவி, செம்போத்து, கௌதாரி, காடை, தேன் சிட்டு, தவிட்டுக்குருவி, மனங்கொத்தி... என நீண்டுகொண்டே :-)
காடு பொங்கி வீட்டுக்குள் வழியத்தொடங்கியாச்சி என்பதை எனக்கு சொன்னது எது தெரியுமா? தாழ்ப்பாள் துளையில் முளைத்து நிற்கும் இந்தப்பூங்கொடி (rubber vine creeper)!
கருத்துகள்
கருத்துரையிடுக