உலகின் ஆதி தொட்டில் கடல். ஓயாது தாலாட்டும் இந்த தொட்டிலில் வளர்ந்து கரையேறிய எண்ணற்ற உயிரினங்களின் நீட்சியில் ஒரு கிளையின் இலை நான்.
தொப்புள் கொடி உறவு என் ஒவ்வொரு அணுவிலும் (செல்லிலும்) அலையென ததும்பி, என் எண்ணக்கரை மீறுகையிலெல்லாம் கடல் உப்புத்துளியாய் இறங்கும் இரு விழி வழியே.
கடலை விட்டு நான் ஒருபோதும் விலகியதில்லை. கடலும் என்னை விட்டு ஒரு போதும் விலகியதில்லை.
எதிர்காற்று முகத்தில் மோத நான் பயணம் செய்த நில, ஆகாயப்பரப்புகள் அனைத்தையும் கடல் நனைத்தவண்ணமே இருந்தது என் விழி வழியே, விழி வழிய...
ஆனால் அந்த தொட்டிலின் தாலாட்டில் கால் நனைத்து எனை மறந்து நான் நிற்கும் நொடிகளில் மட்டும் என் விழி்வழி கடல் (தரை) இறங்கியதே இல்லை!
அந்த முதுபெருங்கிழவியின் கருணை, உப்புக்காற்று வழியே என் விழிகளுள் இறங்கும் நொடிகளில் அணுக்கள் அனைத்தும் ஆடும் நடனம்... அதுவே சிவம்!
கருத்துகள்
கருத்துரையிடுக