முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறிய நூல்... பெரிய்ய்ய்ய புரட்சி!


இது கமெண்ட் / லைக்குகளுக்காக பகிர்ந்த பதிவு அல்ல. முழுதாய் படிப்பவருக்கு மட்டுமே சொர்கத்தில் இடம் :-)

ஒரு நூல் என்ன செய்யும்?
_----+++++-----------+++++++----

அச்சில் மை கோர்த்து எண்ணங்களை நெசவு செய்பவர் எதை வேண்டுமானாலும் நெய்து தரலாம், புத்தகமாய். 

புத்தகங்களும் ஆடைகள் போலவே; அழகாக, எடுப்பாக, வெளுப்பாக, அளவாக, கச்சிதமாக என தேடித்தேடி நாம் வாங்குபவை நம்மோடு ஒட்டி உறவாடி களிப்பில் ஆழ்த்தி, பழையதாகி, சாயம் போய், நைந்துபோய்... இதற்குமேல் பயன்படுத்த முடியாது என நம்மை ஏங்கவைப்பவை நல்ல ஆடைகள். ஒன்று கவனித்தீர்களா, ஆடைகளின் அடிப்படைப்பயனான 'மானம் காத்தல்' என்பதை நானும் குறிப்பிடவில்லை, நீங்களும் கவனிக்கவில்லை!

ஏன் தெரியமா?

ஆடை என்பது மானம் காப்பது என்ற அடிப்படை உணர்வு, புரிதல், sub conscious thing. இதை நிறைவேற்றாத எந்த ஆடையையும் நாம் விரும்புவதில்லை.

புத்தகங்களும் அவ்வாறே!

எனக்குப்பிடித்த விற்பன்னர்கள் எழுதிய அனைத்துப்புத்தகங்களையும்விட (பல துறைகளிலும்) என்னை வாசித்த புத்தகங்கள் மிகச்சில. அவற்றுள் தலையாய ஒன்று, வெறும் அச்சிட்ட எண்ணங்களின் கோர்வையல்ல; the one woven with wisdom that shines THE eternal light to illuminate the path, THE path we all must walk...

காலங்களின் ஊடாக நாம் நடக்கவேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக்காட்டும் ஆன்ம ஞானம்.

"ஒற்றை வைக்கோல் புரட்சி / One Straw Revolution"

ஊதியத்துக்காக ஓடி உழைத்து / தொழில் செய்து, களைத்து, ஓய்வு நாடும் அநேக மனங்களின் முதல் சிந்தனை, 'பேசாம விவசாயம் பாக்க போய்டலாம், நிம்மதியா'. இது தற்செயலான சிந்தனையல்ல, நம் மண்ணுடனான தொப்புள் கொடி உறவின் அதிர்வு.

'ஊர் பக்கத்தில சின்னதா ஒரு நிலம், காணி நிலம் போல' என தொடங்கும் இத்தேடல், 
'எந்த முறையில் விவசாயம் செய்வது? ஆர்கானிக்கா, இயற்கையா, செயற்கையா?நிலத்தில என்ன கேஷ் க்ராப் போட்டா சீக்கிரமா எதில, என்ன லாபம் கிடைக்கும்? மார்க்கெட்டிங் பொடென்ஷியல் எப்படி? மிடில் ஈஸ்ட்டுக்கு தேங்கா, முருங்கை இலைல்லாம் நல்லா எக்ஸ்போர்ட் ஆறதாமே?! ஹௌ அபௌட் பால் பண்ணை?' என கனவுகளில் கண்கள் விரியும்போது நம் பண்பாடு தடம் புரள்கிறது...

அக்ரி கல்ச்சருக்கும் (பண்பாடு) 
அக்ரி பிசினெசுக்கும் உள்ள கடலளவு இடைவெளியில் காணாமல் போனவர்களையும், அதன் விளிம்பில் நின்று எட்டிப்பார்ப்பவர்களையும், அன்போடு அணைத்து, 
'எது விவசாயம், யார் விவசாயி? ' என ஒரு புதிய (பழைய!) வாழ்வியலுக்கு உன்னதமாய் இட்டுச்செல்லும் 
'இவ்ளோ சின்ன புத்தகத்துக்கு இவ்ளோ கனமான முன்னுரை' மிகையல்ல!

உள் நுழைந்து இன்று வரை அது இட்ட வெளிச்ச வெளியில் பயணித்து நான் உணர்ந்த செல்வங்களை பகிர்வதில் மகிழ்கிறேன்:

"விவசாயத்தின் உச்ச இலக்கு பயிர் வளர்ப்பதல்ல, மானுடத்தை, மனி்தத்தை செம்மையாக, முழுமை நோக்கி (perfection) வளர்ப்பதே'
"
'புதிய அறிவியல் இயற்கையை சிறு துண்டுகளாக்கி ஆய்வு செய்து இயற்கையோடும் அனுபவ அறிவோடும் ஒவ்வாத ஆய்வு முடிவுகளை தன் ஆய்வு வசதிக்காக கோர்வைப்படுத்துகிறது, விவசாயிக்காக அல்ல'

"உணவு வேறு மருந்து வேறல்ல. அவை நம் உடலின் முன்பக்கமும், பின்பக்கமும் போல ஒன்றின் இரு பகுதிகளே".
...
'சற்றே சுருங்கிய / வதங்கிய நிலையில் உள்ள பழங்கள், தியான / நோன்பு நிலையில் உள்ள மனிதர்கள் போல. தியானத்தில் / உண்ணா நோன்பில் நம் ஆற்றல்-தேவை மிக மிக குறைந்துவிடுவதுபோல இப்பழங்கள் உயிர்வாழ தேவையான ஆற்றலை குறைத்துக்கொண்டு தம் "பயன்தரும் உணவு மதிப்பு" சற்றும் குறையாது  நீண்ட நாட்கள் வாழத்தயாராகின்றன. (எனவே வதங்கிய, சுருங்கிய பழங்களை ஒதுக்கவேண்டாம்)'.

"பழகிய பொருட்களை நாம் நன்கு புரிந்து கொண்டதாய் தவறான கற்பிதத்தில் வாழ்கிறோம். வானியல் நிபுணருக்கு நட்சத்திரங்கள் பெயர்கள் போல, உயிரியலாளருக்கு தாவரங்களின் குழு தொகுப்புகள் போல, ஓவியனுக்கு வண்ணங்கள் பெயர்கள் போல (அவரவரின் புரிதலுக்கு அவரவரின் மூளையே/அறிவே எல்லை). இயற்கையை அறிவின் வழியே அறிந்து கொள்ள நாம் முயலும் அளவுக்கு இயற்கை வாழ்விலிருந்து விலகிக்கொண்டே இருக்கிறோம்."

'குழந்தைகள் வெறும் விளையாட்டுகளிலோ, ஏன், ஒன்றுமே செய்யாமலிருக்கும்போதுகூட மகிழ்வாகவே இருக்கிறார்கள். வயதிலும் அறிவிலும் வளர்ந்த மனிதர்களோ, மகிழ்ச்சி என்றால் என்ன என வரையறை செய்து அந்த வழையரையோடு அவர்களின் செயல் பொருந்தும்போது மட்டுமே மகிழ்கிறார்கள்'.
...
"தொடக்கத்தில் மனிதனுக்கு வாழ்வதற்கு காரணங்கள் எவையும் தேவைப்படவில்லை. ஆனால் இன்றோ நாமாகவே கற்பிதம் செய்துகொண்ட காரணங்களை நோக்கி, வாழ்வின் பொருள் அறிய இடையறாது ஓடுகின்றனர், தன்னோடே மல்யுத்தம் செய்யும் ஒற்றை வீரனைப்போல.

குழந்தைகளை கேட்டுதான் பாருங்களேன், இலக்கற்ற, தேடுதலற்ற வாழ்வு மகிழ்வளிக்கிறதா இல்லையா என்று?!"

'பள்ளி செல்லும் அந்த முதல் நொடியிலேயே குழந்தைகளை துயரம் கவ்விக்கொள்கிறது.
இயல்பிலேயே மகிழ்ச்சியாய் வாழ்ந்த மனிதன் தன் கற்பிதத்தில் கடினமான உலகைப்படைத்து அதை உடைத்து வெளியேறத்தவித்து இடையறாது முட்டி மோதிக்கொண்டிருக்கிறான்'.

"பிறப்பும் இறப்பும் இயற்கையானது. இயற்கை இன்பமானது. மனித சமுதாயத்திலும் பிறப்பும் இறப்பும் உண்டு. ஆனால் மனிதர்கள் துயரத்தில் தோய்ந்த வாழ்வு வாழ்கிறார்கள்".

'இயற்கை அன்னையை நாம் ஜன்னல் வழியே வெளியில் தூக்கியெறிந்தால் அவள் கையில் சூலத்தோடு நம் கதவை உடைத்து மீண்டும் உள்நுழைவாள்!'

If we throw mother nature out the window, she comes back through the door with a pitchfork!

உங்களில் சிலர் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய விரும்பலாம், உங்களில் உறவில், நட்பில் இளைஞர்கள் பலர் உடனடியாக விவசாயத்தற்குள் நுழைய திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கலாம். இந்த நூலைப்படித்தபின், பகிர்ந்தபின் தொடங்குங்கள். வாழ்வே தவம், ஒற்றை வைக்கோல் புரட்சி உங்கள் யாக குண்டம். வாழ்த்துக்கள்!

ஆங்கிலத்தில் இந்த நூலின் ஆசிரியர் ப்ளஸ் இந்த புத்தகம் குறித்த தகவல்கள் கீழே!

+++++++++++++++++

A farmer in a nondescript village in a Japanese Perfecture shook the conscience of the nation when words spread that his farm yields were consistently better than the best yields of scientifically/ chemically  farmed fields in Japan. What stunned them most was the information that he neither used fertilizers nor machines!!!

People from all walks of life, particularly sceptical scientific community, started forming a bee-line to his farm to try and understand the man and his concepts. They all went back more than convinced that his technique was far superior than all that science could offer.

What was that he did so extraordinarily well that stumped even the most sophisticated agro scientists world over?

He didn't do anything extraordinary. In fact he didn't do 'anything at all'!!!

A trained plant scientist, he had an epiphany one night that we the world didn't know anything. That we would never be able to understand nature from within it. Complicated stuff, right? 

Let me simplify it.

He started questioning conventional wisdom and practices and started wondering 'what if I don't do this? What if I don't do that?'.

He stopped tilling, fertilizing and deweeding!!! 

'Absolutely crazy! How cld we ever farm without doing these?!' 

'Can any sane farmer commit more blunders than this? Ever?!'

But the results were stunning and was there for all to see. 

Masanobu Fukuoka practiced 'Do Nothing' farming for 50 years, working 'one with nature', observing and learning all the time. His vision was simple; the only purpose of human beings is to be 'one with nature' and as a natural consequence, 'be happy like children'.

He lived for 95 years - 30 of which were spent in near-isolation as he withdrew from the scientific world and spent his life observing nature. His diet was simple rice soup, veggies and fruits, all from his farm. He lived healthy right through on those simple pleasures inspite of what the scientific world funded by mega business made us believe till today about the need for 'good, balanced, nutritious, fortified food'...

He is hailed as the Father of Natural farming.

He visited India in the 80s and likened his philosophy with that of another great soul, M.K. Gandhi.


He passed away in 2008, the year I decided that I should return to my green roots!


Here is one of his profound quotes:

"
The ultimate goal of farming is not the growing of crops, but the cultivation and perfection of human beings.
"

I shall write a separate series of posts on the man and his observations / practices. Have you read 'One Straw Revolution' by the way? This book has singularly redefined the concept of Natural Farming forever. For those who can't wait for my series, here is the book.


(http://www.arvindguptatoys.com/arvindgupta/one-straw-revolution.pdf)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்