முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காட்டு மரங்கள் ஈதவை அனைத்தும்...


-----------------------------------------------------------------+
"உங்கள் தெருவில் கூட நீங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை நிச்சயமாக வரும்"
-----------------------------------------------------------------+
(மத, சக மனித) சகிப்புத்தன்மை குறைந்து வரும் இன்றைய சூழலில் நான் அடிக்கடி படிக்க/கேட்க/பார்க்க நேரிடும் வாதம் இது.

உண்மையிலே இவ்வாறு நிகழுமா?!

நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக இருக்கிறோம்?

மதம் என்பது சமுதாயத்திற்கு மிகப்பெரிய போதைப்பொருள். இந்து மதம் தோன்றுவதற்கு முன்பும் ஏதாவதொன்று இருந்திருக்கலாம். இந்து மதத்துள்ளும் சைவ வைஷ்ணவ one upmanship உண்டு, இன்றளவும். இது எல்லா மதங்களுக்குள்ளும் உள்ள அடிப்படை சிக்கல்.

When Capitalism as a religion takes root and spreads its branches anywhere in the world, all erstwhile religions neatly fold under it...

எது என்னவோ ஆகிட்டு போகட்டும். புள்ள குட்டிங்களுக்கு நேயம் சொல்லிக்கொடுப்போம். மனித நேயம் அல்ல!, just நேயம் மட்டும்!!

மனித நேயம் என்பதும் ஒரு மதமே, ஒரு போதையே! மிகப்பெரிய போதை...

மனித மதம் நம்மைச்சுற்றியுள்ள ஏனைய மதங்கள் அனைத்தின் மீதும் முடிவிலாப்போரும் அடக்குமுறையும் நிகழ்த்திக்கொண்டேதானே இருக்கிறோம்...

மரமதம், விலங்கு மதம், பூச்சி மதம், நீர் மதம், நில மதம் என்பனவெல்லாம் அழியவேண்டும். நம் (மனித) மதம் மட்டுமே பெருக வேண்டும்... பூமி நம் மதத்தால் நிரம்பி வழிந்தால் அசராமல் விண்கப்பல் ஏறி செவ்வாய்க்கு போவோம். அதுவும் நிரம்பினால்...எங்கயாவது போவோம், அங்கும் மதம் பரப்புவோம்!

Honest Question: நம் வசிப்பிடத்தில் தப்பித்தவறி நுழையும் பூரானை / தேளை இறக்கும் வரை (இறந்தபின்பும்!) ஏன் நையப்புடைக்கிறோம்? அவற்றின் வீட்டில்தான் நாம் இருக்கிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு புரிகிறது?

கொட்டடா ஜெயபேரிகை கொட்டடா
...
காக்கை குருவி துரத்தி அழித்தோம்.
நீள் கடலும் மலையும் சிதைத்து அழித்தோம்.
காணும் திசையெலாம் நாமன்றி வேறில்லை.
நோக்க நோக்ககளியாட்டம்.
கொட்டடா ஜெயபேரிகை கொட்டடா...

நாம் இப்போது வசிக்குமிடத்தில் நமக்கு முன் வசித்திருந்த காட்டினமும் ஏனைய இனமும் மீண்டும் இதே இடத்தில் வசிக்கும், நமக்குப்பின்னால்!

காட்டு மரங்கள் ஈதவை அனைத்தும் (இலை, பூ, காய், கனி, மரம்!) புல்லுக்கும், புழுவுக்கும், பல்மிருகத்துக்கும் பறவைக்கும், வல்லசுரருக்கும் தேவ கணங்களுக்கும், ஏன், மனிதர்க்கும் சேர்த்தே ஈயப்பட்டன. அவை இனப்பாகுபாடு ஒருபோதும் பார்ப்பதில்லை.

ஏனெனில் (மனிதனை தவிர) ஏனைய மதங்கள் எவையும் ஒரு பொழுதும் மதங்கள் பழகுவதில்லை...

கருத்துகள்

  1. Appattamaana unmai..aanal manidhanin suyanalam idhayellam patri sindhikkum nilayil illai, vignana munnetram endra peyaril meignanathai thaandi ethanayo oli aandugalai kadandhu vandhuvittom adippadayai unaraamal..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டுமே. Be the Change!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்