குமார 'சம்பவம்' அல்லது "தண்ணி"யில் தள்ளாடிய மரம்! குமார் தண்ணி அடித்திருந்தான். மிக போதையில் இருந்தான். ஃபைனல் இயர் ஹாஸ்டலர்களுக்கு இது பழகிய காட்சி. ஆனால் அவர்கள் பழகாத திருப்பம் ஒன்று இந்த காட்சியை இப்போது யாருமே எதிர்பாரா விதத்தில் மாற்றப்போகிறது. குமாரின் ஊறுகாய் நண்பன், சற்று நிதானத்தில் இருந்தவன், மாடிப்படியில் குரல் கேட்டு எட்டிப்பார்க்கிறான். ஹாஸ்டல் வார்டனும் ப்ரின்சியும் இரட்டையர்போல் ஒன்றாய் கை வீசி கால் நகர்த்தி மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். 'டேய் கொமாரு! ஓடுடாஆஆஆஆஆஆ' என்ற அலறலோடு அவன் மாடியிலிருந்து கீழே குதிக்க, கீழே கிரிக்கெட் ஆட்டம் தடைபட்டு கவனம் மாடியை நோக்கி திரும்ப, குமாரு குத்துமதிப்பாய் காற்றில் கைகளால் துழாவி எதையோ பற்றிக்கொண்டிழுப்பதாய் நினைத்து எழ முயற்சிக்க, வார்டனும் ப்ரின்சியும் மாடியில் நுழைய... போதையில் மூழ்கிய குமாரின் மூளையில் எங்கோ சிவப்பு விளக்கு சுழல, அபாயம் என்ற ஒற்றை உணர்வு உந்தித்தள்ள, தன் சக்தியை ஒன்றுதிரட்டி மாடிச்சுவரின் மேல் காலூன்றி ஏறி... அருகிலிருந்த...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!