ஸ்வச் பாரத் ஜெய ஹோ!
பேண்டு வாத்தியங்கள் முழங்க, ராணுவ சீருடை வீரர்கள் அணிவகுத்து புடைசூழ நான் நடக்க, மேடையின் மய்யத்தில் மாண்புமிகு பாரதப்பிரதமர் கையில் தூய்மைக்காவலர்_பட்டயத்தோடு காத்திருக்க, உடலெங்கும் பட்டுப்பூச்சி பறக்கும் உணர்வோடு நான் முன்னேறுகிறேன்...
திருவிழாக்கூட்டம் போல ஒரு கூட்டம் விடிஞ்சும் விடியாம பைக்க முடுக்கி எங்க வீட்டுக்கு பக்கத்தில நிறுத்திச்சா, தூக்கம் கலைந்து எழுந்தேன்!
"ஐயோ! இவனுகளா!" என மூளை சட்டென விழிக்க, மாடிக்கு தாவி ஓடினேன்.
வீட்டின் பின்புறம் ஒரு ஓப்பன் க்ரவுண்டு, புல்லு புதர் மண்டி. அங்கே பாத்தா, வழக்கம்போல கிரிக்கெட் டீம் பொசிசன் எடுக்கிற மாதிரியே ஒரு ப்ளேயர், ஒரு விக்கட் கீப்பர், நாலு ஸ்லிப், ஒரு ஸ்கொயர் லெக், மிட் விக்கட், டீப் மிட் விக்கட் என வியூகம் வகுத்து 'குந்தி'யிருக்க, ப்ளேயர்க்கு 22 அடி தூரத்துல பௌலரும் அவருக்கு பீச்சாங்கையாண்ட அம்ப்பயரும் 'குந்தி'கினு கீறாங்கோ!!!!
"கண்ணுகளா, இது பெருநகரம். அக்கம்பக்கமெல்லாம் வீடாய்டிச்சுப்பா, மாடில பெண்டு பிள்ளைகள் நடமாடற நேரம், இப்படி குந்திகினா நியாயமா?" என (அவங்கள நேர்ல பாக்க முடியாத) ஒரு தினுசா திரும்பி நின்னு எத்தன நாளுதான் கொரல் குடுக்குறது?!
எந்திரிக்கிற நிலையில ஒரு பயலும் இல்லயே!
எனக்கு வந்த கோவத்துக்கு கண்ணு சிவக்கவும், மூளைக்குள்ள ஒரு அலாரம் சிக்னல், 'பொறுமை மனோகரா, பொறுமை'!
ஏன் இந்த அலாரம் சிக்னல்?
மும்பையில் மெட்ரோ ரயிலில் 'டிக்கட் வாங்காதோர் சங்கம்' என்று ஒன்று இருந்தது (சாமி சத்தியமா!). சந்தா கட்டி மெம்பர் ஆகிவிட்டால் வாழ்க்கை full ஆ வித்தவுட் டிக்கட்டில் பயணம் செல்லலாம். செக்கர் புடிச்சா சங்கமே fine அ கட்டிடும்!
அதுபோல 'திறந்தவெளியில் மலம் கழிப்போர் சங்கம்' ஒன்று கண்டிப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்; புலம் பெயர்ந்து கட்டிட வேலையில் காலம் தள்ளும் வடகிழக்கு மாநில மக்களுக்கு.
'வாத்யாரே! நம்பள "போவக்கூடாது" ன்னு சொல்றதுக்கு இவன் யாரு வாத்யாரே? ஏக் லீகல் நோட்டீஸ் சலோ!' என்று கூட ஆகலாம்...
என் பட்டயக்கனவு... கனவுதானா :-(
கருத்துகள்
கருத்துரையிடுக