"சட்டம் தன் கடமையை செய்யும்."
"சட்டத்திற்கு கண்ணில்லை."
"சட்டத்தின்முன் அனைவரும் சமம்."
நம் சமுதாயத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நம் சட்டங்கள் உதவுகிறதா?
நாம் உருவாக்கிய சட்டங்களில் ஒன்றையாவது இன்றுவரை நாம் உடைக்காமல் இருந்திருக்கிறோமா?
அப்படியென்றால் சட்டங்கள் உடைப்பதற்காகவேதானா?
உடைத்ததை ஒட்டவைக்க, ஓட்டையை அடைக்க என சட்ட திருத்தங்கள் கொண்டுவருவது நமக்கு முடிவற்ற பணியானது எதனால்?
சட்டத்தினால் மக்களை ஒரு கடவுளை மட்டும் வணங்கவைக்கமுடியுமா? அல்லது ஒரு கடவுளை வணங்குவதை தடை செய்வதோ, வழக்கத்தில் இருக்கும் தடைகளை (கட்டுப்பாடுகளை) உடைக்கத்தான் முடியுமா?
மாற்றங்கள் நம் மனங்களிலிருந்தே வருபவை. மனங்களில் இருந்து மட்டுமே வருபவை.
நம் சமுதாயத்தில் உடைக்க முடியாத சட்டங்கள் முன்னொரு நாளில் இருந்தன. உடைத்தவர்களை, முயல்பவர்களை உடனே வெளித்துப்பி, வாழ்வை காத்துநின்ற சட்டங்கள் அவை. நம் தினவாழ்வில் இன்றளவும்கூட நாம் அதில் சிலவற்றை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். நமக்கு பிடிக்காததை முனைந்து செய்பவரிடமிருந்து விலகியிருத்தல் அவற்றில் முதன்மையானது.
அவற்றை அடிப்படையாகக்கொண்டு சட்டங்கள் செய்தால் மட்டுமே நம் சமுதாயம் பலப்படும்; நம்மை ஆண்டவர்களின் சட்டங்களை பிரதி எடுப்பதால் அல்ல...
சிங்கப்பூரில் குற்றங்கள் குறைவு என பல ஆண்டுகளாக செய்திகேட்டு என் சிங்கை நண்பனை தொடர்புகொண்டு கேட்டேன். அவன் சொன்ன பதில் இதுதான்; 'குற்றங்களின் தண்டனைகள் கடுமையானவை. தவறு செய்தவனுக்கு மறுமுறையும் செய்யலாம் என்ற எண்ணமே வராத அளவுக்கு கடுமையானவை. அதனால்தான்' என்றான்.
சிந்திப்போமா?
கருத்துகள்
கருத்துரையிடுக