தலைப்புச்செய்தி : சென்னையில் முக்கிய நபர் கைது!
"அடப்பாவிகளா, இதுக்கெல்லாமா கைது பண்ணுவானுங்க?!" என்று நண்பன் வெள்ளந்தியாக கேட்டபோது சிரிப்பு வந்தது; தமிழ் தேய்ந்தாலும் நகைச்சுவை வளர்க்கத்தானே என்று மனதை தேற்றிக்கொண்டு, தமிழில் எப்படி இதற்கான சொல் இல்லாமல் இருக்கும் என சிந்திக்கத்தொடங்கினேன். சொற்களும் வரிசையாக நினைவில் வரத்தொடங்கின...
முக்கியத்திலிருந்து முக்குவோமே!
பெரிய மனிதர், முதன்மையானவர், மதிப்பு மிகுந்தவர் போன்ற சொற்கள் முக்கியவரை சிறப்பு செய்வன, தமிழில் :-)
யோசனை - சிந்தனை
பரவாயில்லை - அதனாலென்ன
சி்ரமம் - கடினம்
சுலபம் - எளிது
சரி. இன்னொரு முக்கிய சொல்லுக்கு வருவோம்:
லாபம் - தமிழ்க்கம்பு சுற்றி இந்த சொல்லை உரியடி அடித்து "மகிழ்மதி்யை" வெல்லப்போகும் வாசகர் யார்? யார்? யார்?
ஹலோ!, ஆதாயம் என்பது சரியான சொல் அல்ல. அது benefit ஐ குறிக்கும், profit ஐ அல்ல :-)
ஹலோ!! மகி்ழ்மதி பொண்ணு பேரோ ரியல் எஸ்டேட்டோ இல்லை. மகிழ்வான மூளை!!
கருத்துகள்
கருத்துரையிடுக