ஒவ்வொரு விதையிலும் ஒரு பெயர்...
நாம் உண்ணும் ஒவ்வொரு தானியத்திலும் பெயர் ஒன்று எழுதப்பட்டிருக்கிறதாம்.
அது கால காலமாக நிகழ்ந்துவரும் பேரற்புதமாம்.
ஒரு முறை கூட இதில் பிழை ஏற்பட்டதில்லையாம்.
அது உண்பவர் பெயரில்லையாம், விதைத்தவர் பெயராம்.
மனிதர் விதைத்தது போல பலமடங்கு ஏனைய உயிர்கள் விதைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றை உண்பதை குறைத்துக்கொண்டோம் / நிறுத்திவிட்டோம்.
விதை சுமக்கும்/பரப்பும் பறவைகளும் ஏனைய உயிர்களும் மனிதர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் கேட்பது ஒற்றைக்கேள்வி மட்டும்தானாம்;
'ஏனிப்படி ஆச்சி??'.
தானாய் கிடைத்த உணவை உண்டு மகிழ்வாய் வாழும் பல்லுயிர்க்கிடையில் 'இதைத்தான் உண்பேன், நோயில் வீழ்வேன்' என ஒற்றைக்கூட்டம் மட்டும் தடம் மாறிப்போன புள்ளியில் தொடங்கிய அவற்றின் ஒற்றைக்கேள்வி இன்று வரை இக்கூட்டத்தின் 700 கோடி காதுகளில் விழவே இல்லையாம்.
'ஏனிப்படி ஆச்சி??'.
தானாய் கிடைத்த உணவை உண்டு மகிழ்வாய் வாழும் பல்லுயிர்க்கிடையில் 'இதைத்தான் உண்பேன், நோயில் வீழ்வேன்' என ஒற்றைக்கூட்டம் மட்டும் தடம் மாறிப்போன புள்ளியில் தொடங்கிய அவற்றின் ஒற்றைக்கேள்வி இன்று வரை இக்கூட்டத்தின் 700 கோடி காதுகளில் விழவே இல்லையாம்.
விதை விதைப்பதோடு சேர்த்து இந்த கேள்வியை விதைப்பதையும் கடமையாக கொண்டிருக்கும் இவ்வுயிரனைத்தையும் 'எங்க ஏரியா! உள்ளே வராதே!!' என துரத்தும் மனிதக்கூட்டத்தை இனி எப்படி அணுகுவது என்ற கவலையோடு அவை மஜூலி கானகத்தின் மீது பறக்கையில் அங்கு அந்த கானகத்தை உருவாக்கிய ஒற்றை மனிதன் இன்றும் மரங்கள் நடுவதை கண்டு மகிழ்ந்து
தம் முயற்சியை தொடர்கின்றனவாம்...
(அசாமில் தனி மனிதரொருவர் முப்பது ஆண்டுகளாய் மரங்கள் நட்டு பல நூறு ஏக்கர் காடுகள் வளர்த்து, அது மஜூலி கானகம் என்று அறியப்பட்டது. அங்குள்ள பல்லுயிர் பெருக்கத்தை உலகமே கொண்டாட, விரைந்து அங்கு குடியேறிய நம் கூட்டம், விலங்குகள் தொல்லை அதிகமென வாளேந்துவதும், அதை ஒற்றை மனிதர் தடுக்க முயலும்போதெல்லாம் அவரை உதைப்பதும் வாடிக்கையாகிப்போனாலும் அதை பறவைகள் காண முடியாத அளவுக்கு அங்கு மரங்கள் கூடாரமாய் இன்றும் மறைத்திருக்கிறதாம்...).
கருத்துகள்
கருத்துரையிடுக