என் கதவுகளுக்கு வெளியே...
"
அழகான அழகாம்
வண்ண வண்ண மலர்களாம்
வான்முட்டும் மரங்களாம்
தங்க மணல் துகள்களாம்
பாதம் வருடும் மீன்களாம்
மெத்துமெத்து புல்வெளியாம்
அதிசயமான உயிரினங்களாம்
முகத்தில் மோதுகிற காத்தாம்
சில்வண்டு இறைச்சலாம்
வானெங்கும் ஜொலிக்குமாம்
நட்சத்திரங்கள் பறக்குமாம்
குளிர் காதை வருடுமாம்
மினுக்கு மினுக்கு பூச்சியாம்
நீருள் ஒளிரும் பாம்பாம்
நிறநிறமாய் வண்ணத்திகளாம்
பழம் பழமாய் தொங்குமாம்
சுற்றுலா கூட்டிப்போறாங்க,
நானும் போகட்டா?
"
எனக்கேட்டது பால் வெளியில்
தூரக்கிரக குழந்தையல்ல,
அடுக்குமாடி அறைக்குள்
பக்குவமாய் 'பதுக்கப்பட்டு'
வளரும் நம்
கருத்துகள்
கருத்துரையிடுக