போர்க்களத்தில் வெட்டுப்பட்டு உயிர் தப்பி யுத்த செய்தி சுமந்து விரைந்து ஊர் திரும்புகிறான் வீரன்.
அவனை எதிர்பார்த்து காத்திருந்த மன்னன், வாயிலில் தடுமாறி விழுந்த வீரனை ஓடிச்சென்று வாரியெடுத்து கைகளில் ஏந்தி அரண்மனைக்குள் கொண்டுசென்று அடுக்களை டைனிங் டேபிளில் அமர்ந்து எதிரில் பரப்பி கையில் காபி கோப்பையுடன் படிக்க ஆரம்பித்தானாம், வீரனது உடலில் ஒட்டியிருந்த புழுதித்துகள்களை!
தினம் தினம் காலையில் நம் வீட்டு வாசலில் வந்து விழுவது ஏராளமான வடு சுமந்த, என்றோ வெட்டுப்பட்ட மரமொன்றின் வேராகவோ, கிளையாகவோ, தண்டாகவோ இருக்கும்...
அது அனுதினமும் சொல்ல முயலும் செய்தியை அதன் வெளிப்புறத்தில் ஒட்டியிருக்கும் உப்புப்பெறாத செய்திகளில் மூழ்கி நாம் கவனிக்க மறந்துபோகலாம்... இதென்ன கிறுக்குத்தனமான பதிவு என நீங்கள் தலையைக்கூட சொறியலாம்...
வெட்டுண்ட மரத்தின் இதழ்கள் உங்கள் வீட்டில் தன் மக்களை கதவாகவோ / நிலையாகவோ / ஜன்னலாகவோ / டைனிங் டேபிளாகவோ கண்டு அவற்றோடு தன் காட்டின் கதைபேசி சலசலத்துக்கொண்டிருந்தால் என்ன போச்சு இப்போ? நீங்கள் செய்தி வாசிப்பதை நிறுத்தவேண்டாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக