முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்னும் நீங்க வாங்கலயா!

  மூக்கு க்ளிப்பு! ஒரு ஊருல பரம்பர பரம்பரயா அம்புட்டு சனங்களும் மூக்குல கிளிப்பு மாட்டிகிட்டு வாழ்ந்துதாம். பொறந்ததலந்து சாயறவரைக்கும். ஊரு நாத்தம் அப்புடி... ஆரம்பத்துல கம்பிய வளச்சு கிளிப்பா பயன்படுத்த, அது மூக்கில குத்தி செப்டிக்காயி கொஞ்சம் மக்க மாண்டாக. ஒடனே ஊர் பெருசுக கூடி 'ஆபத்தில்லாத கிளிப்பு வோணும்'னு தீர்ப்ப எழுதி, பெருசுங்களுக்கு வேண்டப்பட்ட வியாபாரிங்கள தரச்சொன்னாக. மரம், செம்புன்னு என்னென்னமோ ட்ரை பண்ணி ப்ளாஸ்டிக்கு பெஸ்ட்டுன்னு முடிவு பண்ண அது ஆச்சு அம்பது வருசம். நாத்தத்துலயே பொறந்தவங்களுக்கு ஒரு கட்டத்துல நாத்தம்னா என்னான்னே தெரியாம்ப்போயி ஆனாலும்  பளக்க தோசத்துல கிளிப்ப மாட்டிகிட்டு சுத்துனாய்ங்க. இன்னொரு இருவது வருசம் செண்டு தொலவுலேந்து ஒரு பெரியவரு வந்தாரு. அவரு மூக்கில கிளிப்பு இல்ல. இந்த ஊரை சுத்திப்பாக்க வத்தவரு எல்லையில மூக்க பொத்தி நிக்க, வரவேத்த உள்ளூர் பெருசுங்க சால்வ போத்துற சாக்குல அவருக்கும் கிளிப்பு ஒண்ண மாட்டிவுட, அவரு சொஸ்தாயி, 'இன்னாபா இது?' ங்கவும், பெருசுங்கல்லாம் தல புராண மகிமய அள்ளி வுட்டுதுங்க. அ

நழுவும் மொழி - இவர் யாரென்று தெரிகிறதா!

" அந்தியிறங்கி ஒருவருக்கொருவர் முகம் மறையுமளவிற்கு அறையிருண்டு விட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை. பேசிக் கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக எங்கள் பேச்சைத்தான் சுழற்றிக் கொண்டது. எப்போது மௌனமானோம? ஏதோ ஒரு உள் நிறைவின் பொங்கலில் எங்களைப் பூரா வியாபித்துக் கொண்ட இருளின் இதவில் ஒரு சின்ன சம்புடத்தில் உருளும் இரு ஜின்டான் மாத்திரைகள் போல. ஒரே கோசத்தில் இரண்டு உயிர்த்தாதுக்கள் போல. கூடில் இரு குஞ்சுகள் போல் எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில் ஒரு தனிக் கதகதப்பில் அது தந்த மகுதான்மத்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தோம். இந்நிலை எங்கள் நட்பின் தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை. சிருட்டியின் ஆயாத நூற்பில் இரண்டு இழைகளாக இழைந்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத்தில எங்களை இழைத்துவிட்டது என்று சொல்லட்டுமா? " 1984 ஆம் ஆண்டு. கோடை விடுமுறை. கிராமத்து வீடு. மதியம் வரும் ஒற்றை நாளிதழ், தினமணி. ஞாயிறானால் மகிழ்வாக தயாராவோம்; தினமணியில் 'கதிர்' வரும் நாள். பதின்ம வயதில் அந்த ஞாயிறு இதழின் சில பக்கங்களை, சக வயது உறவுகளுக்கு முன்பு

சங்கீத ஜாதிமுல்லை

#onemoresong பார்வையற்ற பாடகன். அவனிடம் மையலான கொலுசுப்பெண். அவள் கொலுசொலி அவன் வாழ்வின் ஒலி, தனித்துக்கேட்கும் அவன் காதில். வில்லி அம்மா; வில்லன் சிங்கப்பூர் மாப்பிள்ளை. பாடகனை வில்லன் நெருப்பில் தள்ள, சலங்கை காப்பாற்ற, காதலர்கள் ஊரை விட்டே ஓடிவிடுகிறார்கள். வேறூரில் வாழ்வு சிறக்க, ஆற்றங்கரையில் மோகனமாய் காதலர்கள். கஞ்சா கூட்டம் அவளை கடத்த, ஊர்க்காரன் மீட்டு வீடு சேர்க்கிறான். வீடு ஒரு செட்டியாருக்கு அவளை 'கட்டி' வைக்கிறது. பாடகனுக்கு ஒரு வசதியான குரு கிட்ட, இசை வளர்கிறது. பார்வையும் சிகிச்சையினால் கிட்டுகிறது. சலங்கையை தேடுகிறான், பாடும் ஊரெல்லாம், இடமெல்லாம். காணவில்லையே. இன்னும் ஒரே ஒரு கச்சேரி. அதன் பின் பாடப்போவதில்லை என அவள் ஊரின் அழைப்பை ஏற்று வருகிறான். கொலுசு வீட்டிலேயே விருந்தினனாக. கொலுசு அவனை பார்த்த நொடியிலிருந்து மௌனமாய் அதிர்கிறது, அலறுகிறது.  கோவிலில் கச்சேரி. மேடைக்கு எதிர்மேடையில் கொலுசும் செட்டியாரும். வழக்கம் போல அங்கும் பாடல்வழியே அவளை தேடுகிறான். பாடலின் ஈர்ப்பில் கொலுசின் தளைகள் உடைய, கொலுசுக்கால் தா

Mortals of Meluha / நாம் திருநீலகண்டமல்ல!

#WAKEUPiNDIA! அவசரம்! ஆபத்து! ஆகாரம் விஷம் குலநாசதே!! If You kill 'seeds' in the labs, it KILLS YOU BACK! விநாச காலே விபரீத நாஷ்டா! 'வச்சு செய்யும்' விஷ விதைகள்!  The top six diseases in the below 'healing ad' are fertility related. Diabetics and Hypertension are pushed back! ,

பேய்மழை, நிற்கவில்லை இன்னும்.

ஒரு பெருமழைக்காலத்தின் முதல் நாளில் மரித்துப்போனான். அதற்கு முந்தைய நாட்கள் விரைவாகவே, அடர்த்தியான வேலைகள் கொண்டதாகவே அமைத்துக்கொண்டான். பேர் தெரிந்த தெரியாத செடி கொடிகள் புல் பூண்டுகள் குட்டை மரங்கள் நெட்டை மரங்கள், வாத்துகள், கோழிகள், புறாக்கள், ஆடுகள், மாடுகள், கிளிகள், அணில்கள்... காக்கை, குருவி, வண்ணப்பூச்சி, செம்போத்து, மயில், மரங்கொத்தி, இரட்டைவால் குருவி, தவிட்டுக்குருவி, தேன்சிட்டு, கொசுத்தேனி, கொட்டும் தேனி, மரவட்டை, வெட்டுக்கிளி, இலையுண்ணும் கம்பளிப்பூச்சி, பழந்திண்ணி வவ்வால், கும்பிடு பூச்சி, தாழப்பறந்த தட்டான்கள், கறுப்பெறும்புகள், வண்டுகள் என தன் வாழ்வை மகிழ்வித்த அனைத்துயிரிடமும் உரையாடிய வண்ணமே அப்பொழுதுகள் கழிந்தன.  'நீங்கள் பறந்து, ஊர்ந்த காடுகளை நான் காணுவது சாத்தியமில்லை. உங்கள் இறகின் நிழல் பட்ட மலைகள் அனைத்தையும் நான் கண்டிருக்க வாய்ப்பில்லை. உங்கள் விதைகள் பயணம் செய்த பாதைகளை நான் கற்பனையில்கூட பார்த்ததில்லை... மரித்தபின் புதைக்கச்சொல்லியுள்ளேன். என் இனத்தில் சிலராவது, எனது ஆன்மாவிற்கு அருகிலிருப்பவர்களாவது அதை நிறைவேற்றுவார்கள் என

போகுமிடம் எங்கேப்பா?

காலையில் சாலை மரங்களோடு பேசிக்கொண்டே நீரூற்றிக்கொண்டிருந்தேன். எதிர்வீட்டு நண்பர் யாரிடமோ தான் உதவ இயலாது என்பதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். உதவியென்று யார் கேட்டாலும் மறுக்காதவராச்சே...என எண்ணி திரும்புமுன் அந்தக்குரல் அழைத்தது, 'சார்...'. திரும்பினேன். எ.வீ. நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மனிதர் இப்போது என்னிடம். தூக்கமிழந்த கண்கள், உயிரோற்றமற்ற முகம், மத்திய வயது, தயங்கிய குரலில் மீண்டும் அழைத்தார், 'சார்...' 'என்ன வேணுங்க?' என்றேன். 'சார், என்னை கொஞ்சம் வீட்டில கொண்டு விட முடியுமா?' உடல்நலம் சரியில்லாதவர் என உள்ளுணர்வு சொல்லியது. 'அட்ரஸ் சொல்லுங்க. இந்த ஏரியால நான் உங்கள பாத்ததில்லையே...' என நான் வினவ அவரது பதில் முகத்தில் அறைந்தது; 'வீடு அட்ரஸ் தெரியல சார்'. குடித்திருக்கிறார் என்பதை குடிப்பவர்களும், குடிப்பவர்களோடு பழக்கம் இருப்பவர்களும் நொடியில் அறிந்திருப்பார்கள்... எனக்கு தெரியாது போயிற்று. 'இல்லைங்க, அட்ரஸ் தெரியலன்னா நான் உதவி செய்ய முடியாதே' என்றேன். கண்

நில்லென்று சொல்ல யாருமில்லை...

வேடன். விலங்கு வேட்டையாடி, காட்டுப்பூ தலையில் சூடி, அருவி நீர் வாயில் நிரப்பி, கானகத்துள் வாழ்வாங்கு வாழ்பவன். இறையென்று அந்தணர் ஒருவர் வணங்கும் சிலை கண்டான், அவனறியா பக்தி கொண்டான். எச்சில் நீர் உமிழ்ந்து இறையின் சிரம் துடைத்து தன் தலைப்பூவை இறைக்கு சூட்டி, தான் உண்ட மாமிசத்தை பேரன்போடு படைத்து, செல்கிறான். அந்தணன் வருகிறான், கண்டதும் மருள்கிறான். காட்டுவாசி மூடன் எவன் என தேடி சலிக்கிறான். தன் வேத விதிப்படி இறை தீட்டு கழித்து பூசித்து நிம்மதியாய் நீங்குகிறான். மாமிசமும் மரக்கறியும் மாறி மாறி உண்ட இறை, அந்தணன் கனவில் 'கோபம் வேண்டாம். நாளை நிகழ்வதை பார்' என்று மறைகிறது. அந்தணன் முன்னரே வந்து ஒளிந்து நோக்க, வேடன் வருகிறான்.  இறை கண்ணில் குருதி கண்டு பதறி கானகத்திடம் வேண்டி பச்சிலை பெற்று (மனிதர்கள் மட்டுமே உடைத்துப்பறிப்பர். வேடுவர் வேண்டிப்பெறுவர்...) இறை கண்ணில் பிழிய... உறைய மறுக்குது குருதி. அம்பு ஒன்றை உருவி நொடியில் இளநுங்கு சுளை போல் தன் ஒரு கண்ணை விடுவித்தெடுத்து இறை கண்ணில் அப்ப, நிற்கிறது குருதி. தொடர்கிறது இன்னொரு கண்ணில்! வேடன

புலி வருது புலி வருது... வந்துருச்சி!

வீரிய விதைகளும் மலட்டு தேசங்களும் வீரிய விதை - விளைச்சல் பெருக்கும். மறுபடி ஊன்றினால் முளைக்காது! ஒரு பழத்தில் அடங்கியுள்ள விதைகளை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு விதையில் அடங்கியுள்ள பழங்களை எண்ணவே முடியாதென்பது முதுமொழி; அனுபவ மொழி. ஒரு பருவத்தின் விளைச்சல், எண்ணற்ற சூழலியல் காரணிகளால் முடிவு செய்யப்படுகிறது; விதைகளால் மட்டுமே அல்ல. விதையின் மரபோ தொன்மையோ அறியாத நவீன அறிவியலாளர்கள், ஒரு குறுகிய கால விளைச்சல் விபரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, 'பார்! இந்த விதையின் விளைச்சல் சரிவோ சரிவு. நாங்கள் இதை நவீன 'மருத்துவமனைகளில் வாளால் அறுத்துச்சுட்டு'  விளைச்சல் பெருக்கிவிட்டோம் என மார்தட்ட, அவர்களுக்கு 'படியளக்கும்' பேராசை பெருவணிக நிறுவனங்கள், இந்த விதைகளை சந்தைப்படுத்தி ஒரு புறம் பணம் அள்ள, மறுபுறம் இந்த புதிய விதைகளின் வீரியத்தை பல்லுயிரும் பதம் பார்க்க, தொடங்குது முடிவற்ற யுத்தம்... கடுமையாய் தாக்குவது 'அ' பூச்சிதான் என ஆய்வு செய்து, இந்த முறை இன்னும் வீரியம் + 'அ' பூச்சியின் தாக்குதலை தாங்கி வளரும்; விலை சற்றே அதிகம் என அதே நிறுவனங்க

மனிதர் வாழத்தகுதியற்ற ஊரில் இறை இருக்குமா?

தேன் ஈக்கள் இயற்கையின் இயக்கத்துக்கு தம் சிறகசைவால் வலு சேர்க்கும் உன்னதங்கள். மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை என காதலி காதலனிடம் சொல்கிறாளென்றால் அது இவர்கள் இனத்தின் உரையாடலாகவே இருக்கும். வசந்தத்திற்கு சிட்டுக்குருவிகள் வண்ணம் சேர்ப்பது போல, தேனீக்கள் நம் உணவுக்கு வண்ணம் சேர்ப்பவை.  ஒரு மிக முன்னேற்றமடைந்த சமுதாய கட்டமைப்பு, பணிப்பகிர்வு, தொலைநோக்குப்பார்வை, உணவு சேமிப்பு... இவையத்தனையையும் ஒரு மரக்கிளையில் காற்றில் ஊசலாடியவண்ணம் நிகழ்த்தமுடியுமா நம்மால்? இச்சிறுபூச்சிகள் அற்புதத்தின் பெருவடிவு அல்லவா! இரு வேறு தேனீ கூட்டங்கள், உணவுக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ என்றாவது, எங்காவது சண்டையிட்டதுண்டா? நம் வீடழித்து கூடு கட்டியதுண்டா? காடழித்து கழனியமைத்ததுதான் உண்டா? தேனீக்கள் ஓரிடத்தில் கூடு கட்டினால், அந்த இடம் அமைதியான, நஞ்சற்ற, பாதுகாப்பான இடம் என்று பொருள். இன்று மலைகளில் / காடுகளில் மட்டுமே அவை கூடு கட்டுவது இதனால்தான். நகருள் இப்படி ஒரு சூழல் அபூர்வமாக அமையுமானால் அங்கும் இவை கூடு கட்டும். அந்தக்கூடு மனிதர் கண்ணில் பட்டதும் சூழல் மாறும். 'கொட்ட

மீசை

கற்பு காப்பதற் கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் அச்சமோ அச்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின் றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், கற்பை பறித்து வாழ்வார் - இவர் பறிக்காத பெண்ணில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயர்ப்படுத்துவார் சொல்லிப் பயப்படுத்துவார் பின்பு சுயங்காட்டுவார். (நெஞ்சு) எண்ணிலா மனநோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலா பேரிளம்பெண்ணையும் விட்டு வைக்கார் செவியிலாக் குழந்தை களையும் மிச்சம் வைக்கார் மார்தட்டுவார். நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்துநின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற பெண்களையே விலங்குகள்  போலே வேட்டையாடி வாழ்வார். (நெஞ்சு) வாரி வழங்கும் மண்ணையும் பெண்ணையும் நித்தம் நித்தம் 'மிதித்து' கடக்கும் ஒரு கூட்டத்தையே கடமையாய் செதுக்கிக்கொண்டிருக்கும் சமுதாய சிற்பி

பொட்டை

பாலியல் வன்புணர்வு நமக்கு புதிதா என்ன? சில மாத குழந்தைகளிலிருந்து 80 வயது பேரிளம்பெண்வரை... நாம் அவ்வப்போது பொங்குவோம். அதன்பின் அரசியல் சமூக தர்க்கநியாயங்கள் பேசி அலுத்து உண்டு உறங்குவோம்.  முகநூல் தளத்தில் பெண் குழந்தைகளை 99.99 சதம் வக்கிர ஆண்களிடமிருந்து எப்படி காப்பது என கவலையோடு கருத்து கேட்போம், #metoo போன்று பாதிப்புகளை பகிர விழைவோம். ஆனால் யாரும் அடிப்படை சிக்கல் என்ன என்று சிக்கலின் நுனி தேடமாட்டோம், ஏனெனில் அது நமக்கு நன்றாக, மிக நன்றாக தெரிந்ததுதானே! முதலில் பெண்களை எப்படி இன்னும் பொத்திப்பாதுகாப்பது என சிந்திப்போம்: 1. பல நூறு ஆடைகளை ஒன்றன்மேல் ஒன்றாய் அணியச்செய்வோம். களைவதற்கு முன் காமுகர்கள் களைத்துப்போவர். 2. Chastity Belt போட்டு பூட்டி சாவியை நேரம் கூடி வரும்போது  எதிர்கால / நிகழ்கால கணவனிடம் ஒப்படைப்போம். 3. கள்ளிப்பால் கொடுத்து மொத்தமாய் கொன்றுவிடுவோம். ஒரே ஒரு முறை அதிர்வோடு நாம் கடந்துபோக இலகுவாக இருக்கும்.. ஆதிகாலம் தொட்டு நமது மத, பண்பாட்டு ரீங்காரங்கள் நம்முள் ஆழப்புதைத்த கோட்பாடுகள் 'ஆண் அரசாளுவான். பெண் ஆணின் அடிமை&

கடவுளர்க்கு உதவி வேண்டும்!

இது வலிக்கும் நிஜம்... உரிமைகளுக்காக நம் குரல் ஓங்கி ஒலிப்பது நம் இனத்தின் அடிப்படை குணங்களுள் ஒன்றல்லவா? அந்தக்குரல் எழுப்புவது சத்தமா சங்கீதமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நேற்று ஆடி முதல் நாள். பழமைமிகு நம் மரபில் (ஆதியில் அனைவரின் மரபும் ஒன்றாய்தான் இருந்தது) இது வேளாண் பணிகளை இறை வேண்டி துவங்கும் பெருநாள். இந்த ஆடி மாத உழைப்புதான் வரும் மாதங்களில் சோறு போடக்கூடிய விதைப்பு என்பதால், புது இணை மோகம்கூட குறுக்கிடக்கூடாதென்று ஆடியில் கணவன்-மனைவி பிரிந்திருப்பது இதற்காகவேதான் (ஆடியில் கரு உருவானால் கோடையில் பிரசவம். தவிர்க்கவே பிரிவு என்பது பின்னாளில் வந்தது). நாம் ஆடிப்பிரிவை கெட்டியாகப்பிடித்துக்கொண்டது போல் நம்முடனே வாழ்ந்து அடிப்படை வாய்ப்புகள் / உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், எந்த வேற்று மதக்கதவுகளை தட்டி அடைக்கலமானாலும், இந்த ஆடி முதல் தினத்தை இன்றுவரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள், மாரியம்மனுக்கு / மேரியம்மனுக்கு கூழ் காய்ச்சி. (ஆடியில் தொடங்கும் வேளாண் பணிகள், அவர்கள் வீட்டிலும் வரும் மாதங்களில் உலை கொதிக்க உதவும்!). மத மாற்றம், அடிப்படை உரிமைகள

ஆய்!

எச்சரிக்கை 1: நீள்பதிவு. எச்சரிக்கை 2: ரத்த அழுத்தம் உள்ளவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், இப்பதிவை தவிர்த்துவிடுங்கள்! ஒரு நகரம் தன் சுத்தத்திற்கு தரும் விலை என்ன தெரியுமா? சுத்தம் செய்வோர்தான் யார் என்றாவது நாம் அறிவோமா? இன்றுவரை, சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டு வரலாற்றில், இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லாதது இங்கு மட்டுமே என்றாவது தெரியுமா? சென்னையில் ஒரு அதிகாலையில் பல புற நகர் பகுதிகளில் காலை ஆறு மணிக்கெல்லாம் குளித்து உடை உடுத்தி வேலைக்கு கிளம்பும் தகப்பன்மார், தாய்மார், இளைஞர்கள், அருகிலுள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பெயரேட்டில் கையெழுத்திட்டு, தம் தளவாடங்களை சுமந்துகொண்டு குப்பை இருக்கும் இடம் தேடி விரைவர். 6 முதல் 11 வரை பணி நேரம். வாரக்கணக்கில் நாறிக்கொண்டிருக்கும் குழம்பு, கறிசோறு முதல் நிறைந்த டயாப்பர், நாப்கின்கள் வரை... கைகளில் உறை கிடையாது, முகத்தில் சுவாசத்தடுப்பு கிடையாது. மரியாதை... சுத்தமாய் கிடையாது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்பவருக்கும் இவர்களுக்கும் ஏன் இந்த பேதம்.சிறு குடலை கீறி தையலிட்டு மூடுபவர்க்கு கிட்

வாத்யாரே, நீ காலி! / You are Screwed, Mate :-)

#brainynation #brainyworld "பால எதுக்கு ரோட்டுல கொட்டி போராடுறீங்க?" 'வெல கெடைக்கல சார்' "அப்படீன்னா ஏன் நிறைய உற்பத்தி பண்றீங்க?" 'நாங்க எங்க பண்ணுறம். அதுங்க குடுக்குதுங்க. நிறுத்த முடியுமா?' "அப்ப அதுங்கள ஏங்க பெருக்கறீங்க?" 'இந்த லோலாயி எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்! சிவனேன்னு சுத்திகிட்டிருந்த எங்க நாட்டு மாடெல்லாம் புடிங்கிட்டு பாலாறா கறக்கிற வேத்து மாட்டெல்லாம் வளக்கச்சொண்ணீங்க. வளத்தோம். பால் பத்தாது இன்னும் வேணும் இன்னும் வேணும்னீங்க, பெருக்கினோம். இப்ப விலை இல்ல. நாங்க இந்த சீவனுங்களுக்கு தீனி வாங்க என்ன செய்வோம்? வித்தா முச்சூடும் வெட்டுக்குதான் போவும். அதுவும் கூடாதுன்றீங்க. நீயா மேஞ்சி உசிர காப்பாத்திக்க ன்னு அவுத்து பத்தி உட்டா, சாலைகள்ல மாடுகள் நடமாட்டம் அதிகமாச்சி, சாணம் போட்டு அசிங்கம் பண்ணுதுன்றீங்க. நாலு மாடு ஒரு பெரிய மனுசன் எடத்துல மேஞ்சிடுச்சின்னு போலீசு ஸ்டேசன்லல்லோ கட்டி வச்சீங்க?  நாங்க என்னதான் பண்ணுவம் சொல்லுங்க! நாட்டு மாடை வீட்டுக்கொண்ணு குடுத்துட்டு இங்க திரியிற வேத்த