பார்வையற்ற பாடகன்.
அவனிடம் மையலான கொலுசுப்பெண்.
அவள் கொலுசொலி அவன் வாழ்வின் ஒலி, தனித்துக்கேட்கும் அவன் காதில்.
வில்லி அம்மா; வில்லன் சிங்கப்பூர் மாப்பிள்ளை.
பாடகனை வில்லன் நெருப்பில் தள்ள, சலங்கை காப்பாற்ற, காதலர்கள் ஊரை விட்டே ஓடிவிடுகிறார்கள்.
வேறூரில் வாழ்வு சிறக்க, ஆற்றங்கரையில் மோகனமாய் காதலர்கள். கஞ்சா கூட்டம் அவளை கடத்த, ஊர்க்காரன் மீட்டு வீடு சேர்க்கிறான். வீடு ஒரு செட்டியாருக்கு அவளை 'கட்டி' வைக்கிறது.
பாடகனுக்கு ஒரு வசதியான குரு கிட்ட, இசை வளர்கிறது. பார்வையும் சிகிச்சையினால் கிட்டுகிறது.
சலங்கையை தேடுகிறான், பாடும் ஊரெல்லாம், இடமெல்லாம். காணவில்லையே.
இன்னும் ஒரே ஒரு கச்சேரி. அதன் பின் பாடப்போவதில்லை என அவள் ஊரின் அழைப்பை ஏற்று வருகிறான். கொலுசு வீட்டிலேயே விருந்தினனாக.
கொலுசு அவனை பார்த்த நொடியிலிருந்து மௌனமாய் அதிர்கிறது, அலறுகிறது.
கோவிலில் கச்சேரி. மேடைக்கு எதிர்மேடையில் கொலுசும் செட்டியாரும்.
வழக்கம் போல அங்கும் பாடல்வழியே அவளை தேடுகிறான். பாடலின் ஈர்ப்பில் கொலுசின் தளைகள் உடைய, கொலுசுக்கால் தாளம் போட, சன்னதம் கொண்டு தேவியைக்காணப்போகும் வேகத்தில் அவன் குரல் உலகை, மனதை நிறைக்க... எல்லை மீறிவிடுவோமோ என கொலுசு மருண்டு மௌனமாக, காதுக்கெட்டியது கண்ணுக்கெட்டாத உணர்ச்சிக்குவியல் அவன் பாடல்களில் முழங்க, வானம் பொத்துக்கொள்ள, கூட்டம் சடுதியில் களைய, கொலுசு... பாடலுடன் இணைந்து நடனமாடத்தொடங்க, பாடகன், தேவியைக்கண்ட மகிழ்வில், தேவி இன்னொருவனின் தேவி என்ற விரக்தியில் என உணர்ச்சிக்கலவையாய் ராகம் இசைக்க, கொலுசு, கோவில் தூண்களில் விரும்பி முட்டி உயிர் கசிந்து மௌனமாக, அவள் கொலுசைத்தேடி கால்களில் சரிந்து ராகமும் மௌனமாகிறது.
என்ன பாடல் இது?!!!
10 நிமிடம் 45 நொடிகள்!
இந்த நொடிகள் அனைத்தும் உணர்ச்சிக்குவியலாய் நாமும் மாறிப்போக, நம் ஆன்மாவை அறுக்கும் குரலில் பாலு இந்த மூவர் கூட்டணியை உயர்த்திப்பிடித்த உச்சம், வேற லெவல்.
இந்தப்பாடல் மட்டுமே ஒரு முழு நீள திரைப்படம் எனும் அளவுக்கு இதில் பாடகர் பாலுவின் குரலில் வழியும் ரசம், நவரசம்.
ஆ என்ற ஒற்றை எழுத்து அவர் குரலில் காட்டும் வித்தைகள், தம் நம்த வேகம் குறைந்து மகிழ்வாய் மெதுவாய் மாறும் magical moments, பாடலின் கருத்தாழம், இசை அதை தூக்கிச்செல்லும் உயரம், இயக்குநரின் 'பார்வை' இந்த வாழ்நாள் சங்கமத்தை மொட்டவிழ்க்கும் விதம்...
'கவித, கவித, பிரமாதம்' என குணாவாய் நான்!
ஆ... ஆ....
ஆ... ஆ.... ஆஆஆ.... ஆஆஆ.... ஆ....
ஆஆஆ.... ஆ....
ஆ... ஆ.... ஆ....ஆ....ஆ....
ஆஆஆ..... ஆஆஆஆஆ..... ஆ....
தம் நம்த நம்த நம் தம்.... நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்...
என் நாதமே வா... ஆ....
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா.... ஆ....
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ...
ராக தீபமே....
எந்தன் வாசலில் வாராயோ
குயிலே... குயிலே... குயிலே குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராக தீபமே...
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே... நீதானே...
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே... நீதானே... நீதானே...
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
ராக தீபமே...
சச... சச... நிச... ரிச... நிச... நிச... நிச... பநி... சநி... ரிச... நித... பத... நிசரி...
ரிக... ரிக... சகரிக... நிசரி... நிசரி... சநிதப... தசரி... சநி...தப... மப... தப...
ச... நிச நி... நிச நி... தி சநிதப... பமத... நிச சநி... தப... மப...
சரிக... சரிக... ரிசரி கமப... கமப... கமப... மதப... மதபதநி...
நிச நிச... சநி சநி... பத நிச கமப... சநி சநி... சரி சநி... சநி சரி...
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
மகண யகன ரகன சகன... யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன... சகன தகன பகன ககன
மகண யகன ரகன சகன யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன
#onemoresong
கருத்துகள்
கருத்துரையிடுக