முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாத்யாரே, நீ காலி! / You are Screwed, Mate :-)



#brainynation
#brainyworld

"பால எதுக்கு ரோட்டுல கொட்டி போராடுறீங்க?"

'வெல கெடைக்கல சார்'

"அப்படீன்னா ஏன் நிறைய உற்பத்தி பண்றீங்க?"

'நாங்க எங்க பண்ணுறம். அதுங்க குடுக்குதுங்க. நிறுத்த முடியுமா?'

"அப்ப அதுங்கள ஏங்க பெருக்கறீங்க?"

'இந்த லோலாயி எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்! சிவனேன்னு சுத்திகிட்டிருந்த எங்க நாட்டு மாடெல்லாம் புடிங்கிட்டு பாலாறா கறக்கிற வேத்து மாட்டெல்லாம் வளக்கச்சொண்ணீங்க. வளத்தோம். பால் பத்தாது இன்னும் வேணும் இன்னும் வேணும்னீங்க, பெருக்கினோம். இப்ப விலை இல்ல. நாங்க இந்த சீவனுங்களுக்கு தீனி வாங்க என்ன செய்வோம்? வித்தா முச்சூடும் வெட்டுக்குதான் போவும். அதுவும் கூடாதுன்றீங்க. நீயா மேஞ்சி உசிர காப்பாத்திக்க ன்னு அவுத்து பத்தி உட்டா, சாலைகள்ல மாடுகள் நடமாட்டம் அதிகமாச்சி, சாணம் போட்டு அசிங்கம் பண்ணுதுன்றீங்க. நாலு மாடு ஒரு பெரிய மனுசன் எடத்துல மேஞ்சிடுச்சின்னு போலீசு ஸ்டேசன்லல்லோ கட்டி வச்சீங்க? 

நாங்க என்னதான் பண்ணுவம் சொல்லுங்க!

நாட்டு மாடை வீட்டுக்கொண்ணு குடுத்துட்டு இங்க திரியிற வேத்து மாடு அம்புட்டையும் புடிச்சிட்டு போயி... அதான் அந்த ஆப்பிரிக்க நாடுகள்ல குளந்தைகள்லாம் பட்டினியால சாகுதாமே அதுங்க வீட்டுக்கு அன்பளிப்பா குடுங்க உங்களுக்கு புண்ணியமா போவும்... நாங்க பழையபடி நாட்டு மாட வச்சி விவசாயம் பண்ணி வவுறு வளத்துக்குறம்!' 

---+++----

"Why is there so much of surplus milk in our country today?"

'Because we are overproducing milk.'
..
https://m.rediff.com/business/interview/why-indias-milk-producers-are-angry/20180717.htm

Snippets:

Why are we overproducing things? We are also overproducing farm products when there are no buyers.

The glut started from 2014-2015.

In Maharashtra, you can see now that milk is costing less than a bottle of water.

In North India, you get cow milk for Rs 19 to Rs 21 a litre while bottled water is more expensive than that.

The entire dairy industry in the world is struggling for survival and this situation has aggravated in the last four years.

I have been quoting that in the USA over 17,000 small dairy farms have closed down in the last decade.

In Europe, more than 1,000 dairy farms have closed down in the last three years.

In Australia, milk prices are on a downward spiral forcing the biggest cooperative giant, Murray Goulburn, to sell (its business) to Saputo in Canada.

This was the biggest cooperative dairy in Australia which was sold because they could not pay prices to their farmers.

In New Zealand, which is known for its very efficient dairy industry, farmers continue to suffer heavy losses.

So the problem is not restricted to India alone.

This is a worldwide problem because of the eclipse of small dairy farms and the rise of mega dairy farms.

Many years ago in the USA, at the time of President (Richard M) Nixon, the then US agriculture secretary Earl Butz had said 'get big or get out' and this is the trend which is going on globally.

Is the same thing happening in India?

Yes. the trend is catching up.

Small farmers are being driven out. Agriculture policy is favouring large producers.

India has already allowed 100 per cent FDI in animal husbandry.

Dairy giants like Fonterra of New Zealand, French cheese maker Fromageries Bel, Denmark's Arla, Dutch dairy cooperative Friesland Campina, Mexico's Grupo Lala, and Germany's Hochland Group have been reported to be looking for opportunities to set up own units or to partner with local players.

But the ban on cow slaughter may come in the way.

In the USA, Walmart is the latest to have entered the dairy business.

In India, 80 million women are engaged in the dairy farm activities and it is a question of livelihood for the poor in India.

It is generally believed that farmers who integrate dairy with farming do not commit suicide because small dairy operations supplements their incomes.

Now that sector, which was a saviour of agriculture, is also in bad shape.
...

 What about cooperatives like Amul? Are they doing well?

How can they do well?

They too are in crisis.

The Gujarat Cooperative Marketing Milk Federation is collecting milk from farmers once a day. Earlier, they used to collect twice a day.

Many dairies in Maharashtra do not buy cow's milk because it has less fat compared to buffalo milk.
...

What future do you foresee for the dairy industry?

There seems to be no good news on the horizon.

FAO has recently stated that international commodity prices, including for milk, will remain low for the next decade.

I don't see a bright future for the dairy sector in India.

We will see more and more small farmers getting out of the dairy business in the years to come.

Policy-makers are keen to bring in big dairy giants into India, go for industrial scale dairy farms.

Our entire economic thought is in that direction.

The same thing is being said about the farming sector too.

Yes, the entire effort is push small farmers out of agriculture, to bring them into cities which are in need of cheaper labour.

Corporate agriculture is being strengthened. Model law for contract farming has already been circulated among states. Marketing infrastructure is also being strengthened in the same direction.
....

Why are farmers still producing milk? Have they no idea where the dairy business is going?

What do you expect farmers to do?

They are hurt by low prices. They are protesting in various states.

After recent protest by dairy farmers in Maharashtra, the state had fixed a higher procurement price. But milk plants are unable to pay that high a price.

Himachal farmers have now threatened to hold a massive state-wide protest if the government does not provide them with higher milk prices.

#brainyUs

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்