காலையில் சாலை மரங்களோடு பேசிக்கொண்டே நீரூற்றிக்கொண்டிருந்தேன்.
எதிர்வீட்டு நண்பர் யாரிடமோ தான் உதவ இயலாது என்பதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.
உதவியென்று யார் கேட்டாலும் மறுக்காதவராச்சே...என எண்ணி திரும்புமுன் அந்தக்குரல் அழைத்தது, 'சார்...'.
திரும்பினேன்.
எ.வீ. நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மனிதர் இப்போது என்னிடம்.
தூக்கமிழந்த கண்கள், உயிரோற்றமற்ற முகம், மத்திய வயது, தயங்கிய குரலில் மீண்டும் அழைத்தார், 'சார்...'
'என்ன வேணுங்க?' என்றேன்.
'சார், என்னை கொஞ்சம் வீட்டில கொண்டு விட முடியுமா?'
உடல்நலம் சரியில்லாதவர் என உள்ளுணர்வு சொல்லியது.
'அட்ரஸ் சொல்லுங்க. இந்த ஏரியால நான் உங்கள பாத்ததில்லையே...' என நான் வினவ அவரது பதில் முகத்தில் அறைந்தது;
'வீடு அட்ரஸ் தெரியல சார்'.
குடித்திருக்கிறார் என்பதை குடிப்பவர்களும், குடிப்பவர்களோடு பழக்கம் இருப்பவர்களும் நொடியில் அறிந்திருப்பார்கள்... எனக்கு தெரியாது போயிற்று.
'இல்லைங்க, அட்ரஸ் தெரியலன்னா நான் உதவி செய்ய முடியாதே' என்றேன்.
கண்களில் வேதனை தெரிந்தது. மௌனமாய் தலையாட்டி வேறு திசையில் குத்துமதிப்பாய் நகர்ந்தார்.
'யாருடைய கணவனாகவோ, தகப்பனாகவோ, மகனாகவோ, உறவினராகவோ இருக்கலாம். என்ன வேதனை இவரை தன்னிலை மறந்து குடிக்கத்தூண்டியது? இவர் எத்தனை நாட்களாய் அட்ரசை மறந்து இப்படி? தொலைதூர ஊர்க்காரராக இருக்கவும் வாய்ப்புள்ளதே. இவருக்காக காத்திருக்கும் மனைவிக்கு / மகளுக்கு இவரது நிகழ்காலம் தெரியுமா? போகும் வழியில் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆனால் என்ன ஆகும் அவர்களுக்கு?...' என கேள்விகள் அலையடிக்க, என் பச்சாதாபம் சமுதாயக்கோபமாக, அரசின்மீது கோபமாக...இன்னும் என்னவெல்லாமாகவோ உருமாற, சட்டென்று உறைத்தது புத்தியில்;
'நம் தேசமும் இப்படித்தானே!'
'நம் தேசமும் இப்படித்தானே!'
போகுமிடம் எங்கேப்பா? போனப்புறம் சொல்றோம்ப்பா!
Yenru thanium indha -----dhagham?? ?? ?
பதிலளிநீக்குதெளிய வைத்து தெளியவைத்து அடிப்பது மட்டுமே யாம் செய்வோம் என ஒரு தேசமே...
நீக்கு