ஒரு ஊருல பரம்பர பரம்பரயா அம்புட்டு சனங்களும் மூக்குல கிளிப்பு மாட்டிகிட்டு வாழ்ந்துதாம். பொறந்ததலந்து சாயறவரைக்கும்.
ஊரு நாத்தம் அப்புடி...
ஒடனே ஊர் பெருசுக கூடி 'ஆபத்தில்லாத கிளிப்பு வோணும்'னு தீர்ப்ப எழுதி, பெருசுங்களுக்கு வேண்டப்பட்ட வியாபாரிங்கள தரச்சொன்னாக. மரம், செம்புன்னு என்னென்னமோ ட்ரை பண்ணி ப்ளாஸ்டிக்கு பெஸ்ட்டுன்னு முடிவு பண்ண அது ஆச்சு அம்பது வருசம்.
நாத்தத்துலயே பொறந்தவங்களுக்கு ஒரு கட்டத்துல நாத்தம்னா என்னான்னே தெரியாம்ப்போயி ஆனாலும் பளக்க தோசத்துல கிளிப்ப மாட்டிகிட்டு சுத்துனாய்ங்க.
நாத்தத்துலயே பொறந்தவங்களுக்கு ஒரு கட்டத்துல நாத்தம்னா என்னான்னே தெரியாம்ப்போயி ஆனாலும் பளக்க தோசத்துல கிளிப்ப மாட்டிகிட்டு சுத்துனாய்ங்க.
இன்னொரு இருவது வருசம் செண்டு தொலவுலேந்து ஒரு பெரியவரு வந்தாரு. அவரு மூக்கில கிளிப்பு இல்ல. இந்த ஊரை சுத்திப்பாக்க வத்தவரு எல்லையில மூக்க பொத்தி நிக்க, வரவேத்த உள்ளூர் பெருசுங்க சால்வ போத்துற சாக்குல அவருக்கும் கிளிப்பு ஒண்ண மாட்டிவுட, அவரு சொஸ்தாயி, 'இன்னாபா இது?' ங்கவும், பெருசுங்கல்லாம் தல புராண மகிமய அள்ளி வுட்டுதுங்க. அல்லாத்தையும் கேட்டுப்புட்டு அவரு செத்த யோசன பண்ணாரு.
அப்பால ஊர்ப்பெருசுல பெத்த பெருச மட்டும் தனியா கூப்ட்டு 'செத்த நேரம் கிளிப்ப களட்டி சோப்புல வச்சிட்டு நடப்போம் வாரீகளா?' ன்னு தள்ளிகினு போயி, 'இம்மா நாத்தம்... எங்கேந்து?' ன்னவும், அந்த பெருசு மையமா தலய ஆட்டி நாலு தெசையவும் கை காட்டிச்சாம்.
'சரி வாரும், போவோம்'னு பெருசு வீட்டு தெசய பாக்க எட்டி நடை போட்டாக.
போகப்போக நாத்தம் பெருசாவ, பெருசு கோவமான கோவத்தோட 'ங்கொக்கா மக்கா! இங்கணதான் எங்கயோ ஆரம்பிக்குது!' ன்னு மோப்பம் புடிச்சு போய் நின்ன எடம், பெருசோட வீட்டுக்கொல்ல சாக்கட!!!!
இவுகள வேடிக்க பாக்க பின்னாடியே வந்த கூட்டம், ஊர நாத்தம் பண்ண குத்தத்துக்காவ அங்கனயே பஞ்சாயத்த கூட்டி பெருச 'தள்ளி வக்க' தீர்ப்பு எளுதி அதோட கிளிப்பயும் புடிங்கிகிட்டு (அடையாளத்த பறிக்கறதாம்!) உள்ளூரு பெருசு இன்னொண்ண பஞ்சாயத்துல சேத்துகிட்டாக.
வேத்தூருகாரரு என்னன்னமோ சொல்லிப்பாத்தாலும் கிளிப்பு அடச்ச காதுகள்ல எதுவும் ஏறல.
அவரு நொந்து தலைய உலுப்பிகிட்டே ஊரு போயி சேர, ஒதுங்கின பெருசு அவமானத்துலயும் நாத்தத்துலயும் நாண்டுகிட்டு சாக, ஊரு கூடி எரங்கல தெரிவிச்சிட்டு, அன்னாருக்கு அஞ்சலியா ரெண்டு நிமிசம் அம்புட்டு பேரும் கிளிப்ப களட்டி வச்சிட்டு நிப்போமுன்னு முடிவு செஞ்சி, நின்னா... நாத்தம் கொஞ்சமும் கொறயலயாம்.
தப்பான ஆள தண்டிச்சிட்டமேன்னு ரெண்டு சொட்டு கண்ணுத்தண்ணியோட கூட்டம் கலஞ்சுதாம்.
கதையெல்லாம் நல்லாதான் இருக்கு. நாத்தம்தான் சகிக்கலங்கிறீங்களா?
அடடா, இன்னும் கிளிப்பு வாங்கலயா நீங்க?!
(Nose clips and face are used for illustrative purpose; no intention to demean them in any way!)
(Nose clips and face are used for illustrative purpose; no intention to demean them in any way!)
கருத்துகள்
கருத்துரையிடுக