கற்பு காப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
அச்சமோ அச்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
கற்பை பறித்து வாழ்வார் - இவர்
பறிக்காத பெண்ணில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுத்துவார் சொல்லிப் பயப்படுத்துவார்
பின்பு சுயங்காட்டுவார். (நெஞ்சு)
எண்ணிலா மனநோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலா
பேரிளம்பெண்ணையும் விட்டு வைக்கார்
செவியிலாக் குழந்தை களையும்
மிச்சம் வைக்கார் மார்தட்டுவார்.
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற பெண்களையே விலங்குகள்
போலே வேட்டையாடி வாழ்வார். (நெஞ்சு)
வாரி வழங்கும் மண்ணையும் பெண்ணையும் நித்தம் நித்தம் 'மிதித்து' கடக்கும் ஒரு கூட்டத்தையே கடமையாய் செதுக்கிக்கொண்டிருக்கும் சமுதாய சிற்பிகள் காது கேளாத பெண்ணை சோதிக்க 'நானும் ரவுடிதான்' எனத்திரியும் கதாநாயகன் கெட்ட வார்த்தைகள் கூறி அவளை திரும்பக்கூறச்சொல்ல, அவள் ஓஜா... ஒமாலா... என அவளை சொல்ல வைத்த இயக்குநர், அவளது எதிர்காலக்கணவராகலாம். இந்த காட்சிக்கு திரையரங்கு குலுங்க ஆர்ப்பரித்த இளைஞர்கள்...
சட்டியிலுள்ளதுதானே அகப்பையில் வரும்?
தீதும் நன்றும் பிறர்தர வாரா...
கருத்துகள்
கருத்துரையிடுக