முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொட்டை


பாலியல் வன்புணர்வு நமக்கு புதிதா என்ன?

சில மாத குழந்தைகளிலிருந்து 80 வயது பேரிளம்பெண்வரை... நாம் அவ்வப்போது பொங்குவோம். அதன்பின் அரசியல் சமூக தர்க்கநியாயங்கள் பேசி அலுத்து உண்டு உறங்குவோம். 

முகநூல் தளத்தில் பெண் குழந்தைகளை 99.99 சதம் வக்கிர ஆண்களிடமிருந்து எப்படி காப்பது என கவலையோடு கருத்து கேட்போம், #metoo போன்று பாதிப்புகளை பகிர விழைவோம்.

ஆனால் யாரும் அடிப்படை சிக்கல் என்ன என்று சிக்கலின் நுனி தேடமாட்டோம், ஏனெனில் அது நமக்கு நன்றாக, மிக நன்றாக தெரிந்ததுதானே!

முதலில் பெண்களை எப்படி இன்னும் பொத்திப்பாதுகாப்பது என சிந்திப்போம்:

1. பல நூறு ஆடைகளை ஒன்றன்மேல் ஒன்றாய் அணியச்செய்வோம். களைவதற்கு முன் காமுகர்கள் களைத்துப்போவர்.

2. Chastity Belt போட்டு பூட்டி சாவியை நேரம் கூடி வரும்போது  எதிர்கால / நிகழ்கால கணவனிடம் ஒப்படைப்போம்.

3. கள்ளிப்பால் கொடுத்து மொத்தமாய் கொன்றுவிடுவோம். ஒரே ஒரு முறை அதிர்வோடு நாம் கடந்துபோக இலகுவாக இருக்கும்..

ஆதிகாலம் தொட்டு நமது மத, பண்பாட்டு ரீங்காரங்கள் நம்முள் ஆழப்புதைத்த கோட்பாடுகள்

'ஆண் அரசாளுவான். பெண் ஆணின் அடிமை'

'ஆண் கடவுள் பலதாரதாரியாகலாம். பெண் கடவுள் பத்தினியாயிருக்கவேண்டும், ஐவரை மணந்தாலும்'

'பெண் போகப்பொருள், உடைமை. நிலம் வளைக்க தாரமாக்கலாம்,  அறுபதினாயிரம் தாண்டலாம், நுகர்ந்தபின் நசுக்கி எறியலாம், சூதில் பணயமாக்கலாம், நெருப்பில் உரசிப்பார்க்கலாம்...' - என்னதான் படிப்பினைக்காக என்றாலும் கால காலமாய் ஏன் பெண் மட்டுமே பலியாகி?

பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

பேய்கள் நீதி செய்தால் பெண் தின்னும், (நீதியை) எழுதிய குறிகள்.

நம் தின வாழ்வில் பெண் பிம்பம் விற்காத ஏதாவது ஒரு பொருள் உண்டா?

நம் விழியில் கடை விரிக்கும் ஊடகங்கள் சதை காட்டி விற்பதை நாம் தலையாட்டி ரசிப்பதை யார் சொல்லி நிறுத்துவோம்?

குடும்பத்தோடு நடு வீட்டில் நாம் ரசிக்கும் பாலியல் வக்கிரங்கள், குழந்தைகளை பாதிக்காதா?

என்ன சொல்லி வளர்க்கிறோம் நம் ஆண் சிங்கங்களை?

'பொட்டப்புள்ள மாதிரி ஏன் அழுவுற?'

'பொண்ணுங்க வீக்கர் செக்ஸ். வீட்டு வேலைக்குதான் லாயக்கு'

'எப்ப பாத்தாலும் ஏன் பொட்டப்புள்ள மாதிரி வீட்டுக்குள்ள அடஞ்சி கிடக்கே?'

பொட்டை.
பொட்டை.
பொட்டை.

காணும் சினிமா அனைத்திலும் பெண்களை டார்ச்சர் செய்தால் காதல் வந்தே தீரும், வராவிட்டால் கத்தியால் குத்தலாம் என போதனை.

பல நண்பர்கள் இருக்கும் பெண் 'கேசு'.

இதெல்லாம்தான் நம் தலைமுறையினரை, உங்களை, என்னை வளர்த்த ரீங்காரங்கள்... நம் ஆண் குழந்தைகள் காதிலும் நாம் இதைத்தானே திணிக்கிறோம்?

ஆண் தவறு செய்தால் பேராண்மை. பெண் தவறு செய்தால் / அவளது கற்புக்கு கலங்கம் நேர்ந்தால் குலக்கேடு.

ஆண்கள் கற்பு விற்கலாம். ஆனால் அவர் வீட்டுப்பெண்டிர் மட்டும் பத்தினிகளாக இருக்கவேண்டும். தசரதன் காலம்தொட்டு மாறாத இந்த வன்முறை நீதி, தொழில் நுட்பத்தின் மலக்குடலான போதைப்பொருட்கள், சதை வணிகம், கைக்குள் உலகம்... இத்தனையும் சேர்ந்து செய்த கலவையாய் பெரும்பான்மை ஆண்கள். நுகர்வுக்கலாசாரம், வளர்ச்சி மோகத்தில் தன் எலும்புகளையே சுவைக்கும் நாய்களாய்...

லட்சம் வன்புணர்வுகள் நிகழ்ந்தால் ஆயிரக்கணக்கில் மட்டுமே தண்டனை வழங்கும் நீதி, பெண்கள் மேல் மரியாதை / அச்சத்தை ஏற்படுத்துமா வன்புணர்வை வளர்க்குமா?

ஒரு தலைவனோ நாயகனோ இறந்தால் துக்கத்தில் நாள்கணக்கில் முழுகும் நாம், நம் குலக்கொழுந்துகள் இப்படி தொடர்ந்து வேட்டையாடப்படும்போது ஏன் பொங்கி தணிந்து வேறொன்றும் செய்யாமல் நகர்கிறோம்?

சட்டங்கள் வலிவற்றவை என்றால் அவற்றை இயற்றுபவர்களை ஏன் நாம் இத்தனைக்குப்பின்னும் ஆதரிக்கிறோம்?

நம் இருப்பிடத்தில் இதுபோல நிகழாதிருக்க எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்?

எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியை / வேதனையை பகிற நேரம் தருகிறோம்? 

மனமும் உடலும் நலமாய் நம் குழந்தைகளை எதிர்காலத்திற்கு இட்டுச்செல்வதைவிட வேறு என்ன பெரிதினும் பெரிது நமக்கு?

இந்தக்குழந்தைகளின் எதிர்காலம் நம் கையில் அல்லவா? 

நம் முன்னோர்கள் நமக்கு சொன்னது 'எதை விதைக்கிறாயோ அதை அறுப்பாய்'.
'We reap what we sow'.

முட்டாள்தனமாக நாம் புரிந்து கொண்டது 'We Rape what we sow'

அறுத்துக்கொண்டிருக்கிறோம் யார் பெண்களையோ அணு அணுவாய், நம் பாதிப்பற்ற மனநிலையால். அறுத்து முடித்தபின் எஞ்சியிருக்கலாம் நம் வீட்டுப்பெண்கள், வேறு யாரும் அறுக்காதிருந்தால்...

தனக்கு வராத தலைவலிக்கு யாரேனும் மருந்து தடவுவார்களா என நகைப்பதைத்தாண்டி என்ன செய்யப்போகிறோம் நாம்?

ஆயிரம் கண்ணுடைய கடவுளின் கவனிப்பில் பொட்டை யார்?

கருத்துகள்

  1. With all the reactive opinions what is ignored is the responsibility of the parents who have been ignorant for 7 months , how did they not notice any signs from this disabled girl. I am inclined to think that with most of the urban population outsourcing childcare to all manners of strangers , not taking ownership even to feed or clean their own kids - I would attribute this failure as the foremost cause for such incidents.

    Why do they need servants ? Why can’t they feed them themselves? Why can’t they drop them in schools and pick them up from schools ? Why can’t they talk to the kids openly just even asking daughters if some one is cat calling them on the streets would have been a simple task... excuse is work ... mhmm both of them are working all of them are working ... for what? For their children to be left in such conditions where anyone could prey on them for months ... punish that parents for negligence I say... they are co conspirators for their negligence.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்