முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடல்லயே இல்லயாம்!

சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வரப்போகுதுன்னு அப்பப்ப வர்ற நியூஸ்லாம் 'ஜூஜூபி மேட்டர்', 'ஆச்சின்னா பாத்துக்கலாம்' னு அசால்ட்டா சுத்துவமுல்ல. பல கோடி டூரிஸம் வருமானம் வருகிற தென் ஆப்பிரிக்காவின் கேப் டௌன் மாநகரில் இந்த ஆண்டு ஏப்ரல் 12 இலிருந்து குழாயில் காற்று மட்டுமே வரும் என்ற அரசு அறிவித்துள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மக்களை வலியுறுத்தி  Dos and Dont's லிஸ்ட்டெல்லாம் அரசு அனுப்பிகிட்டிருக்கு. பாத்து வச்சிக்கிங்க. சீக்கிரமே நமக்கும் யூஸ் ஆகும் :-) " ஷவர்ல குளிச்சா கைது! 2 லிட்டர் தண்ணில குளிச்சிக்கோ! ஸ்விம்மிங் பூல் தண்ணிய வடிச்சி டாய்லட்டுக்கும் தொவைக்றதுக்கும் யூஸ் பண்ணு. மூணு நாளைக்கொரு தபா ட்ரெஸ் மாத்தினா போதும். நாறிச்சின்னா சென்ட்டு அடிச்சிக்கோ! உச்சா போனா ஒடனே ஃப்ளஷ் பண்ணாத. மூணு உச்சாக்கு (இல்லாங்காட்டி மூணு பேருக்கு ஒரு தபா) ஒரு ஃப்ளஷ் மட்டும். கக்கா போனா 2 தபாக்கு ஒரு ஃப்ளஷ் போதும். டயரியா / ரொம்ப கலீஜ்னா மட்டும் ஒடனே ஃப்ளஷ் பண்ணு. முஸ்லீம் சகா, கால் கழுவாதே! கஷ்டத்த புரிஞ்சுக்கோ! குடிமகன்களுக்கு: விஸ

வாலு போயி ரெக்கை வந்தது டும் டும் டும் டும்

Venus and Mars by Geraldine Arata பறவை, வானரம், மொழி... இறகு சுமக்கும் பறவைகளை என்றும் சுமப்பதென்னவோ இறகுகள்தான்.  வால் சுமக்கும் வானரங்களை வால் சுமப்பதும் உண்டு. இறகு உதிர்த்த பறவைகள் சில தேவதைகளாய் மண்ணிலிறங்கி உதிர்ந்தவை மேல் கால் வைத்து நடந்த பரப்பெல்லாம் தடம் தோன்றி அதில் முளைத்ததெல்லாம் அற்புதம், அற்புதம் அன்றி வேறொன்றுமில்லை. புவியெங்கும் பரவி அற்புதங்கள் செய்பவரை மரத்தில் இருந்து வேடிக்கை பார்த்த வானரங்கள் தாமும் வால் உதிர்த்து மண்ணிறங்கி கால் பதித்த இடமெங்கும் அழிவுக்கோலம்... திகைப்புடனே தேவதைகளை துரத்தி துரத்தி அற்புதங்களின் 'மூலம்' அறிய அவை வேண்டின. மொழியற்ற மொழியொன்றில் தொடங்கிய கருத்து யுத்தம் எண்ணற்ற மொழிகளிருந்தும் இன்றளவும் அடைபடாமலே சுற்றிக்கொண்டிருக்கிறது காற்றைப்போல. புரிதல் இல்லாதுபோயின் விளைவதென்னவோ சந்தேகம் மட்டும்தானே. தேவதைகளுக்கு இது போதுமென கூண்டிலடைத்து சாவியையும் தூக்கி எறிந்து... அது ஆச்சி நெடுங்காலம். வேடிக்கை என்னவென்றால் அற்புதங்கள் நிகழ்வது நின்றுபோன உலகில் இன்றளவும் விடுபட இயலாத மனக்கூண்டுகளில் சினத்தோடு சுழ

கனவு மெய்ப்படும்!

நாளை (26 சனவரி) மற்றொரு நாளே. எனது தேசத்தில் களவில்லை, பொய் புரட்டு இல்லை, பித்தலாட்டம் இல்லை, ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதில்லை, தாழ்த்துவதில்லை, வீழ்த்துவதில்லை, அழிப்பதுமில்லை. உயிரோட்டம் நிறைந்த எனது தேசத்தில் சகல உயிரும் அண்டிப்பிழைக்கும், செழிக்கும். நாங்கள் உயிரனைத்தும் போற்றுவோம், இயற்கையை நேசிப்போம். காடு மலை மேடு பள்ளம் நதியோட்டம் மாற்ற மாட்டோம். நீர் நிலைகளையும் அவ்வண்ணமே. தேவைக்கு வாழ்வோம், தேவையறிந்து உதவுவோம், வாழ்வினை விரும்பி வாழ்வோம்... தேசம் எனும் சொல்லை 'நேசம்' எனும் சொல்லாய், செயலாய் மாற்றும் வல்லமை நம் அனைவருக்கும் இறை தந்த கொடை.  என் மனதிற்குகந்த முண்டாசுக்கவி வல்லமை தாராயோ என இறைஞ்சியது தன்னலம் பயனுற அல்ல, (மாநிலம்) நானிலம் பயனுற. அவன் நானிலம் மீது கண்டதனைத்தும் 'நமையன்றி வேறில்லை' அல்லவா!  'நமை' என்பதை மனிதர்கள் மட்டுமே என்ற தவறான புரிதலுடன் நானிலத்தின் மீது நாம் வரைந்த வெறும் காற்றுக்கோடுகள்தானே மாநில, தேசிய எல்லைகள்.... காக்கைக்கும், குருவிக்கும் ஏனைய மனிதர் அல்லா உயிர்களுக்கும் இந்தக்கோடுகள்தான்

காட்டாற்றின் கரையில் கனவு சுமப்பவன்

சுழித்தோடும் தூய நதி வானம் காட்டும் சில காலம். கரைபுரண்டோடும் சில காலம் செம்மண்ணாய்.  கதை சொல்லும் சிறு நடையாய் சுருங்குவதும் ஒரு காலம். நீரற்று மணல் புரளும் காற்றாலே சில காலம். அணையிலடங்கல்,  வாய்க்கால் வழிதல் என தளைகள் ஏதும் தாங்காது மலையிறங்கும் பேராற்றல் முன். காட்டாற்றின் கரையில் நிற்போர் அநேகர் வேடிக்கை பார்ப்பவரே, வழிப்போக்கராய் நிற்பவரே! வாழ்வெனும் பெரு நதியில் கால் நனைத்தல் சுகமெனினும் சுழி, பாய்ச்சல், பள்ளம் வீச்சென நித்தம் ஒரு யுத்தம் செய்யும் நதியில் துணிந்தவர் மட்டுமே மூழ்கி எழுவர். நேசிப்பவர் மட்டுமே கரைப்பது கரைத்து சேர்ப்பது சேர்த்து மீண்டு கரை சேர்ந்து, கனவு சுமந்து காத்தருப்பர் மற்றொரு முழுக்குக்கு. நிறைவேறலாம், வேறாமலும் போகலாம்... கனவுக்கு பஞ்சமில்லை. ஏனையோர்... விரைந்து வீடு புகுவர், கதைகள் சொல்வர், மறந்து போவர்.  பெரு நதி மட்டும் எப்போதும் போல்.  நனைத்த என் கால் சுவடு... முழுகிய என் உச்சிச்சுழி... நதி அறியும், எப்போதும் போல்.

நாச்சியார் என்கிற நான்...

நாச்சியார் என்கிற நான் பிறப்பு புதிர். என்னை துளசி செடிக்கடியில் கண்டெடுத்தவர் விஷ்ணு பக்தர். என்னை தன் குழந்தையாகவே வளர்த்தார். வீடெங்கும் சுற்றமெங்கும் வீதியெங்கும் ஊரெங்கும் பெருமாள் பக்தி கமழ்ந்தாலும் எனக்கு ஈர்ப்பு என்னவோ ஆயர்பாடிக்கண்ணனிடம். சிறு வயதில் பெருமாள் அவதாரக்கதைகளில் எல்லா சிறார்களையும்போல கண்ணன் என்னையும் ஈர்த்துவிட்டான். ஈர்ப்பு பக்தியானதற்கு வளர்ந்த சூழல் காரணமாயிருக்கலாம். எனக்கு விளையாட தோழமைகள் இன்றி / இருந்தாலும் கண்ணன் என் தோழனானான். என் கற்பனைக்கண்ணன் எனக்கு உகந்தவை மட்டுமே செய்வான், எல்லையற்ற நட்புடன். நட்பு பக்தியாக, பக்தியும் தமிழும் குழைத்து திருப்பாவை வடித்தேன், கண்ணனுக்காக, கண்ணனால். பதின் வயதிலேயே திருமணம் நான் வாழ்ந்த காலத்தின் கட்டாயம். கண்ணன் நினைவை வேறொரு ஆணுடன் பங்குபோட மனமின்றி திருமணத்தில் நாட்டமின்றி, முயற்சியெடுத்த தந்தையை தடுக்க 'கண்ணன் வசம் என் சுயம். அற்ப மானிடர்க்கல்ல' என்றேன், பிடிவாதமாய்.  வேத விற்பன்னர், சமூகம் மதிக்கும் தந்தை...  வேறு வழியின்றி என் நிலைப்பாட்டுக்கு மனதின்றியே சம்மதித்தார். உடற்கூறு மாற்றங

ஆண்மையற்ற தேசம்

காகம் தூக்க, நரி பிடுங்க என பாட்டிகள் வீட்டுத்தோட்டத்தில் வடை சுட்ட காலமெல்லாம் மாறி... ஆச்சு பல வருசம்.  வீட்டுத்தோட்டம் காணாமப்போச்சி. 'அம்புட்டு எடம் இருந்துச்சில்ல, பூமி வெலை ஏறுனதும் அங்கன ஒரு வீட்டையே கட்டிட்டம்ப்பு, வாடகைக்கு ஆச்சில்ல' என்று எதிர்கால வைப்பு நிதி உண்டாக்கிய மகிழ்ச்சி கூட ஏராளமான கட்டுப்பாடுகளுடனே இயங்குகிறது... குழந்தைகளுக்கு காகமும் நரியும் தந்த மகிழ்ச்சி குடியிருப்பவர், வீட்டு சொந்தக்காரருக்கு தரப்போவதில்லை... 'தண்ணி வர்லயே', 'அங்க செவுரு காரை உதிருது', 'பாத்ரூம்ல தண்ணி போகலையே...' என்பதாக கணைகளும், 'ஆணியே அடிக்காதீங்க', 'ஒரு ஆளுக்கு 100 லிட்டர்தான்', 'பத்து மணிக்கு மேல சத்தம் குறைங்க' என எதிர்க்கணைகளுமாய் நித்தம் ஒரு யுத்தம்.  இவை எதுவுமே எந்த வீட்டாரிடமும் கேட்காத காகமும் நரியும் இன்று புத்தக கதை வடிவில் மட்டும் அந்த வீடுகளில், அதுவும் அந்த வீடுகளில் குழந்தைகள் இருந்தால் மட்டும்... நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு 'காடு' புரியவைத்திருக்கிறோம்? 'காட்டில மரம் செடி கொடி

என் விழித்திரையில் - 3 ஆனை மேல் அம்பாரி!

பல்லவி அனுபல்லவி மணி பல்லவி! ராஜ பல்லவி! (பாலு) மகேந்திர பல்லவி! அனி(ல்) பல்லவி! Vow! டன் டன் டன் டன் டன் டாட டாட டன் டாடாட டடட டாட டாடாட டடட டாட டன் டன் டன் டாட டாட டன்... இந்த ட்யூனுக்கு மயங்காதோர் இந்தியாவில், ஏன் தமிழ் உலகிலேயே இல்லை! மணி ரத்னத்தின் முதல் படம், கன்னடத்தில், ஹிந்தி அறிமுக ஹீரோவுடன்! அதுவும் அனில் கபூர்! ஆமாம்... அவருக்கு கன்னடத்தில் என்ன வேலை?!  எப்படி ராஜாவும் பாலுவும் இந்த அறிமுக இயக்குநர் ப்ளஸ் அறிமுக ஹீரோவுடன் வேற்று மொழிப்படத்தில் இணைந்தார்கள் என்ற என் வியப்பு இன்றுவரை குறையவில்லை! (இவர்கள் எல்லோருக்குமே இது வே.மொழி படம்!). (பின்னொரு நாளில் மணிரத்னத்திடம் இதே கேள்வி கேட்கப்பட்டபோது 'கன்னட அரசு படமெடுக்க நிதி தந்தது... அவங்க சைனீஸ் லேங்குவேஜில இந்த படத்த பண்ண சொன்னாகூட பண்ணிருப்பேன்' என்றார்!) இளம் காதல் ஜோடி. All set for a happy married life. கல்யாணத்துக்கு முன் அவன் ஒரு வேலையாய் ஒரு மலைப்பகுதிக்கு (Coorg region) வருகிறான். அங்கு single mother லஷ்மி (plus ஓரு சிறு வயது மகன்) உடன் நட்பு பூக்கிறது. பூக்கள் ப

அக்கறை 'பொங்கல்'

வயல்வெளியையே கண்டிராத ஒரு கூட்டம் "அறுவடை" திருநாளை அமோகமாய் டிசம்பரிலேயே கொண்டாடிய தெம்பில்... இந்த வருஷம் குக்கர்ல பொங்கி திங்கும் இந்த தமிழ் கூட்டம். அந்த பொங்கல்தான் சரின்னு அநேகம் அதையே வழிமொழியவும் தொடங்கும்... கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடியை 'குடி' யாக்கி, சில ஆயிரத்துக்கு தன்மானத்தை விற்கவைத்து அந்த சில ஆயிரத்தையும் 'சரக்கு' வழி திரும்ப பெற்று...  மட்டையாகிக்கிடப்பது நமது ஆன்மா அல்லவா என்று உரக்க கத்தினாலும் 'ஹிக்' குன்னுதான் பதில் வரும் இன்னும் முழுசா மட்டையாகாத மட்டைகளிடமிருந்து... வெந்ததைத்தின்று விதி வந்தால் லஞ்சம் கொடுத்து தப்பிக்கலாம் என 'நீரில்' நீந்தியபடி கனவு கண்டு, கண் விழித்ததும் நியாய விலை கடையில் அரிசி, பருப்பு, வெல்லமும் இன்ன பிறவும் இலவசம் என ஓடி வரிசையில் நின்று தேடாமலே சோறு நிதம் தின்று...('பொங்கலாவே குட்த்தா எம்மாம் ஜோரா கீதும்பா'!) தமிழ் மானம் இனி மெல்ல அல்ல, விரைவில் சாகும், இந்த நிலை நீடித்தால்.  மானமுள்ள மனிதர்கள் நேற்றேனும் போகி நெருப்பில் சரக்கு, சுலப சில்

காடுதான் என்ன செய்யும்?

காடுதான் என்ன செய்யும்? தம் காலடித்தடமெங்கும் பாலைவனம் செய்பவர் கூட்டம், தாம் உண்ணும் உணவுக்கு உணவு வேண்டி (fodder for meat giving creatures), பெருங்காட்டில் நெடுங்காலம் 'கிடந்தது கிடந்தபடி' கிடந்த அனைத்தையும் ஒற்றை நெருப்புப்புள்ளியிட்டு அழித்தொழித்து சோயாவும் சோளமும் விதைக்கையில் தப்பியோட கால்களின்றி காடென்ன செய்யும்? தன் ஆன்மாவை இறுகப்பிடித்துவைத்து பறவைக்காய் காத்திருக்கும். வெந்து தணிந்தபின் இரை பொறுக்க வந்த பறவைகளிடம் சேதி பகிர்ந்து காடு  'விடை பெறவும்', பறவைகளின் வழி இந்த சேதி எஞ்சிய பெருங்காடுகளுக்கு பரவியதாம். காடுகளென்ன செய்யும்? கடுந்துயரில் சிதையேறும், தமக்குத்தாமே தீயிட்டு... எங்கொ வீழ்ந்த மரங்களால் இங்கு சுட்டெரிக்கும் சூரியக்கதிர், கோப மரங்களின் சிறு உரசல் போதும் பொறி பறக்கும், அக்கினிக்குஞ்சு ஜனிக்கும். காடெரிக்கும். மனிதனிட்ட தீயை நிறுத்துதல் மனிதர்க்கு எளிது. சிதையேறிய காடுகளை இன்றுவரையில் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது, அணைக்கமுடிவதில்லை; அன்பின்றி அணைப்பது எப்படி?! காடழித்து விதைப்பது நிற்கும் வரையில் காடு எரிவதும

பட்டுப்புடவைக்கு எத்தனை கால்?!

கழுதை மிட்டாய் பதிவில் பாம்புபோல் தோல் உறித்துக்கொள்ளும் கழுதையை கற்பனையாய் எழுதியிருந்தேன். அது நனவாகும் நாள் தொலைவில் இல்லை போலிருக்கிறது! பட்டுப்புழு, காலங்காலமாய் பட்டு நூலிழை செய்துகொண்டிருக்கிறது. எட்டுக்கால் பூச்சி காலங்காலமாய் வலைப்பொறி பின்னி வயிறு வளர்க்கிறது. 'எல்லாம் ஒழுங்காத்தான போய்க்கிட்டிருக்கு' என்றுதான் இருந்தேன், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அந்த அறிவியல் அறிக்கை வரும்வரை... 'எட்டுக்கால் பூச்சியின் எச்சில் இழை எஃகை விட உறுதியானது, ரப்பரை விட அதிக  'சுருங்கி விரியும்' தன்மை (elasticity) கொண்டது. அதாவது அந்த இழையளவு தடிமனுள்ள எஃகு/ரப்பர் இழையுடன் ஒப்புநோக்கும்போது)'. அடுத்த நாட்களில் நான் நண்பர்களிடம் வேடிக்கையாய் 'அடுத்த பெரிய factory இந்த yarn பண்ணத்தான். என்ன...சங்கு ஊதி factory gate திறந்ததும் வரிசையா spidersதான் வெளில போகும், நொந்து நூலாய்ப்போய் :-)' என்று சொன்னதும், இதையே கார்ட்டூனாய் வரைய முயன்றதும் இன்றும் நினைவில் உள்ளது. சரி, நிகழ்காலத்திற்கு வருவோம். இந்த செய்தியை அறிவியல் என்ன செய்ததென்ற

கழுதை மிட்டாய்!

க்ளோபலைஷேசன் லேட்டஸ்ட் விக்டிம், கழுதைகள்! நம் ஊரில் உடும்புக்கறி சார்ந்த நம்பிக்கைகள் போல சைனாவில் கழுதைகள் சார்ந்த நம்பிக்கைகள் நிறைய. கழுதைத்தோலை கொதிக்கவைத்து அதில் இருந்து கிடைக்கும் ஜெலாட்டினை உண்டால் சர்வரோகமும் நிவர்த்தியாகும், 'அது'வும் கூட! என்று கழுதைக்கத்தலாய் செய்தி பரவி கடந்த பத்தாண்டுகளில் இந்த ஜெலாட்டினின் சந்தை மதிப்பு 40 மடங்கு அதிகமாகி, உலக கழுதை சந்தை ஒன்று உருவானது. ஆனால் இந்த சந்தையின் நிறம் மட்டும் கருப்பு... உண்பவர் கூட்டம் இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே! கழுதை பாவம்,  ஒரு பிரசவத்தில் ஒரு குட்டிதான் போடும். அதற்கு சந்தையின் அவசரம் தெரியாது, பணத்தின் வாசனையும் தெரியாது. பணத்தைக்கூட தின்றே பழகிய உழைப்பாளி... 'ஊருல காட்டுல மேட்டுல மேஞ்ச கழுதைய எல்லாம் தோல உரிச்சிட்டம்லே. இன்னும் வேணும்லே!' என சீனர்கள் சிணுங்க, இப்போதெல்லாம் ஆப்பிரிக்காவில் திடீர் திடீரென அன்றாடங்காய்ச்சிகளின் கழுதைகள் காணாமல் போய்கிட்டிருக்காம். தேடிப்பார்த்தா புதருக்குள்ள உயிரில்லாம, தோலில்லாம... யார் திருடுறானுங்க, எப்போ, எப்புடின்னு புரியாத பெருங

நழுவும் மொழி - 3 அகல்யா

அகல்யா, விதவை. யுத்த களத்தில் போர்ப்புகைப்படக்கலை கணவனை இழந்தவள்.  சிவசு, விதவை அம்மாவுக்கு ஒரே பையன். ஊர்க்காரியம் எதுவானாலும் வேட்டியை மடித்துக்கட்டி களத்தில் நிற்பவன். மிக நல்லவன்.  ஒரு விதவையைத்தான் மணக்கவேண்டும் என தினசரியில் விளம்பரம் கொடுக்க, அகல்யாவின் கண்ணில் அது பட, அவள் அப்பாவிடம் சொல்ல, அகல்யா சிவசு திருமணம் இனிதே நடக்கிறது. அகல்யாவுக்கு மாண்டிசோரி முறையில் கல்வி கற்பிக்கும் பள்ளி நடத்த ஆசை. சிவசுவின் முயற்சியால் அதுவும் நிறைவேறுகிறது.  இனிய இல்லறம். திடீரென இறந்து போன கணவன் முதலில் அவள் கனவிலும் பின்னர் நேரிலும். அகல்யா என்ன செய்கிறாள்? சிவசு என்ன ஆகிறான்? ... விதவை அம்மாவுக்கும் சிவசுவுக்கும் அவன் திருமணத்திற்கு முன்னான உரையாடல்கள்... அகல்யா அவள் அப்பாவிடம் 'ஆம்பளன்னா யாருப்பா?', 'பயம் இல்லாத இருக்குறவன்தாம்மா' என்பதான உரையாடல்... மறுமணம் பற்றிய அகல்யாவின் உணர்வுக்குவியல், சிவசு - அகல்யா இடையில் முகிழ்க்கும் காதல்...கதையின் தொடக்கத்தில் வரும் 'ஈலோக கோளத்தில் ஏதோ ஒரு சிராசிந்தையில்' எனத்தொடங்கும் சிவசுவின் வேண