வயல்வெளியையே கண்டிராத ஒரு கூட்டம் "அறுவடை" திருநாளை அமோகமாய் டிசம்பரிலேயே கொண்டாடிய தெம்பில்...
இந்த வருஷம் குக்கர்ல பொங்கி திங்கும் இந்த தமிழ் கூட்டம். அந்த பொங்கல்தான் சரின்னு அநேகம் அதையே வழிமொழியவும் தொடங்கும்...
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடியை 'குடி' யாக்கி, சில ஆயிரத்துக்கு தன்மானத்தை விற்கவைத்து அந்த சில ஆயிரத்தையும் 'சரக்கு' வழி திரும்ப பெற்று...
மட்டையாகிக்கிடப்பது நமது ஆன்மா அல்லவா என்று உரக்க கத்தினாலும் 'ஹிக்' குன்னுதான் பதில் வரும் இன்னும் முழுசா மட்டையாகாத மட்டைகளிடமிருந்து...
வெந்ததைத்தின்று விதி வந்தால் லஞ்சம் கொடுத்து தப்பிக்கலாம் என 'நீரில்' நீந்தியபடி கனவு கண்டு, கண் விழித்ததும் நியாய விலை கடையில் அரிசி, பருப்பு, வெல்லமும் இன்ன பிறவும் இலவசம் என ஓடி வரிசையில் நின்று தேடாமலே சோறு நிதம் தின்று...('பொங்கலாவே குட்த்தா எம்மாம் ஜோரா கீதும்பா'!)
தமிழ் மானம் இனி மெல்ல அல்ல, விரைவில் சாகும், இந்த நிலை நீடித்தால்.
மானமுள்ள மனிதர்கள் நேற்றேனும் போகி நெருப்பில் சரக்கு, சுலப சில்லறை மயக்கத்தை எரித்து புதிய பொங்கலை இன்று பொங்குவார்களா ?
தன்மானம் பாம்புச்சட்டையல்ல உரித்து உரித்து வளர்வதற்கு...
பொங்கலோ பொங்கல்.
கருத்துகள்
கருத்துரையிடுக