பல்லவி அனுபல்லவி
மணி பல்லவி!
ராஜ பல்லவி!
(பாலு) மகேந்திர பல்லவி!
அனி(ல்) பல்லவி!
Vow!
டன் டன் டன் டன் டன் டாட டாட டன்
டாடாட டடட டாட டாடாட டடட டாட
டன் டன் டன் டாட டாட டன்...
இந்த ட்யூனுக்கு மயங்காதோர் இந்தியாவில், ஏன் தமிழ் உலகிலேயே இல்லை!
மணி ரத்னத்தின் முதல் படம், கன்னடத்தில், ஹிந்தி அறிமுக ஹீரோவுடன்! அதுவும் அனில் கபூர்! ஆமாம்... அவருக்கு கன்னடத்தில் என்ன வேலை?!
எப்படி ராஜாவும் பாலுவும் இந்த அறிமுக இயக்குநர் ப்ளஸ் அறிமுக ஹீரோவுடன் வேற்று மொழிப்படத்தில் இணைந்தார்கள் என்ற என் வியப்பு இன்றுவரை குறையவில்லை! (இவர்கள் எல்லோருக்குமே இது வே.மொழி படம்!).
(பின்னொரு நாளில் மணிரத்னத்திடம் இதே கேள்வி கேட்கப்பட்டபோது 'கன்னட அரசு படமெடுக்க நிதி தந்தது... அவங்க சைனீஸ் லேங்குவேஜில இந்த படத்த பண்ண சொன்னாகூட பண்ணிருப்பேன்' என்றார்!)
இளம் காதல் ஜோடி. All set for a happy married life. கல்யாணத்துக்கு முன் அவன் ஒரு வேலையாய் ஒரு மலைப்பகுதிக்கு (Coorg region) வருகிறான். அங்கு single mother லஷ்மி (plus ஓரு சிறு வயது மகன்) உடன் நட்பு பூக்கிறது. பூக்கள் பூத்து காதலாய் மாறலாமா என தடுமாற்றத்தில்...
நட்புக்கும் காதலுக்கும் இடையில் பெண்டுலமாய் அவன் மனது... இவர்களைச் சுற்றிச்சுழலும் நாக்குகள்...இறுதியில் என்ன செய்கிறான்?
நீங்களே 'கண்டு'கொள்ளுங்கள், YouTube இல், டி வி டி கிடைக்கவில்லையென்றால்!
பாலுவின் ஒளிப்பதிவு காட்டிய அழகிய பேங்களூரை இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறேன்!
அனில் கபூரின் natural acting, particularly the frames he shares with Lakshmi's kid, Amazing!
ஒரு frame இல் லஷ்மியின் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்களை scoop பண்ணி எடுப்பார்... ஹையோ!
இந்த 110 நிமிட (!)படத்தின் அருமை பெருமைகள் அறியாமலேயே ஒரு குளிர்கால பனி பொழியும் இரவில் வேற்றுமொழி நாட்டில் இரவு 9 மணிக்கு பார்க்கத்தொடங்கி, பின்னிரவு 3 மணி வரையில்... பித்துப்பிடித்ததுபோல் அந்த music ஐ மட்டும் நூறு முறையாவது கேட்டிருப்பேன்!
டன் டன் டன் டன் டன் டாட டாட டன்
டாடாட டடட டாட டாடாட டடட டாட...
கமல் அண்மையில் இவரைப்பற்றி விகடனில் பகிர்ந்ததை இங்கு பகிர்கிறேன்...
'எங்கள் ராஜா நடந்து வந்தாலும் தவழ்ந்து வந்தாலும் அவர் இசை (யானை) அம்பாரியில்தான் வரும்'.
பின் குறிப்பு 1: ப.அ.பல்லவி பற்றி பதிவிடுதல் தரும் சுகம்கூட இன்று விளம்பர கத்தரிகளின் இடையே கசிந்து சின்னத்திரையில் நம் இல்லங்களில் வழிந்தோடிக்கொண்டிருக்கும் 'சுமார் மூஞ்சி குமாரு' ரக படங்கள் தரவில்லையே ஐயகோ!...
பின் குறிப்பு 2: இந்தப்படம் வணிக ரீதியாக தோல்வியைத்தழுவினாலும் இன்றுவரை பேசப்படுவதற்கும் 'அம்பாரி'யே காரணம் என கற்பூரம் ஏற்றி அணைக்க உலகம் முழுவதும் கரங்கள் ஏராளம்!
என் விழித்திரையில் - 2 இல் போஸ்தினோ (தபால்காரர்)
என் விழித்திரையில் - 2 இல் போஸ்தினோ (தபால்காரர்)
கருத்துகள்
கருத்துரையிடுக