க்ளோபலைஷேசன் லேட்டஸ்ட் விக்டிம், கழுதைகள்!
நம் ஊரில் உடும்புக்கறி சார்ந்த நம்பிக்கைகள் போல சைனாவில் கழுதைகள் சார்ந்த நம்பிக்கைகள் நிறைய.
கழுதைத்தோலை கொதிக்கவைத்து அதில் இருந்து கிடைக்கும் ஜெலாட்டினை உண்டால் சர்வரோகமும் நிவர்த்தியாகும், 'அது'வும் கூட! என்று கழுதைக்கத்தலாய் செய்தி பரவி கடந்த பத்தாண்டுகளில் இந்த ஜெலாட்டினின் சந்தை மதிப்பு 40 மடங்கு அதிகமாகி, உலக கழுதை சந்தை ஒன்று உருவானது. ஆனால் இந்த சந்தையின் நிறம் மட்டும் கருப்பு...
உண்பவர் கூட்டம் இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே! கழுதை பாவம்,
ஒரு பிரசவத்தில் ஒரு குட்டிதான் போடும். அதற்கு சந்தையின் அவசரம் தெரியாது, பணத்தின் வாசனையும் தெரியாது. பணத்தைக்கூட தின்றே பழகிய உழைப்பாளி...
'ஊருல காட்டுல மேட்டுல மேஞ்ச கழுதைய எல்லாம் தோல உரிச்சிட்டம்லே. இன்னும் வேணும்லே!' என சீனர்கள் சிணுங்க, இப்போதெல்லாம் ஆப்பிரிக்காவில் திடீர் திடீரென அன்றாடங்காய்ச்சிகளின் கழுதைகள் காணாமல் போய்கிட்டிருக்காம். தேடிப்பார்த்தா புதருக்குள்ள உயிரில்லாம, தோலில்லாம...
யார் திருடுறானுங்க, எப்போ, எப்புடின்னு புரியாத பெருங்கூட்டம், ஏழைகள் கூட்டம் (இன்றும்கூட ஆப்பிரிக்க பெருநிலத்தில், உள் நிலத்தில், கழுதைகள்தான் போக்குவரத்து மற்றும் சரக்கு வரத்து சேவைகள் வழங்குகின்றன). அவர்களால் புலம்பித்தவிக்க மட்டுமே முடிகிறது. மனித உயிருக்கே சொற்பவிலை கொண்ட அப்பரப்பில் கழுதைக்காக சட்டம் ஒழுங்கு கண்டம் தாண்டிப்பாயுமா என்ன?
இன்னும் சில வருடங்கள் கழித்து 'இதுதான் கழுதை, நாம் தின்றே அழித்தோம்' என ம்யூசியத்தில் மட்டுமே சந்திக்க நேரலாம்!
அல்லது,
'Huge Breakthrough in genetics engineering! பாம்பு போல் தோல் உரித்துக்கொள்ளும் கழுதைகளை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம்!' என செய்தியில் படிக்கலாம்...
உண்டு பெருத்தே 'முன்னேறும்' கூட்டமல்லவா நாம்? My bet is on the breakthrough
:-(
கருத்துகள்
கருத்துரையிடுக