சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வரப்போகுதுன்னு அப்பப்ப வர்ற நியூஸ்லாம் 'ஜூஜூபி மேட்டர்', 'ஆச்சின்னா பாத்துக்கலாம்' னு அசால்ட்டா சுத்துவமுல்ல. பல கோடி டூரிஸம் வருமானம் வருகிற தென் ஆப்பிரிக்காவின் கேப் டௌன் மாநகரில் இந்த ஆண்டு ஏப்ரல் 12 இலிருந்து குழாயில் காற்று மட்டுமே வரும் என்ற அரசு அறிவித்துள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மக்களை வலியுறுத்தி Dos and Dont's லிஸ்ட்டெல்லாம் அரசு அனுப்பிகிட்டிருக்கு. பாத்து வச்சிக்கிங்க. சீக்கிரமே நமக்கும் யூஸ் ஆகும் :-)
"
ஷவர்ல குளிச்சா கைது!
2 லிட்டர் தண்ணில குளிச்சிக்கோ!
ஸ்விம்மிங் பூல் தண்ணிய வடிச்சி டாய்லட்டுக்கும் தொவைக்றதுக்கும் யூஸ் பண்ணு.
மூணு நாளைக்கொரு தபா ட்ரெஸ் மாத்தினா போதும். நாறிச்சின்னா சென்ட்டு அடிச்சிக்கோ!
உச்சா போனா ஒடனே ஃப்ளஷ் பண்ணாத. மூணு உச்சாக்கு (இல்லாங்காட்டி மூணு பேருக்கு ஒரு தபா) ஒரு ஃப்ளஷ் மட்டும்.
கக்கா போனா 2 தபாக்கு ஒரு ஃப்ளஷ் போதும். டயரியா / ரொம்ப கலீஜ்னா மட்டும் ஒடனே ஃப்ளஷ் பண்ணு.
முஸ்லீம் சகா, கால் கழுவாதே! கஷ்டத்த புரிஞ்சுக்கோ!
குடிமகன்களுக்கு:
விஸ்கியோட தண்ணி கலந்தா கொண்டே புடுவன், ராவா அடி!
சரக்கு சாப்புடுற ஹோட்டல்ல தண்ணி குடுக்காத. ஐஸ் க்யூபு குடு.
உடல் பயிற்சின்னு நடக்குறது, ஓடறது, ஜல்சா எல்லாத்தயும் நிறுத்து. அப்பால் தாகம் அடிக்கும்ல...அதனாலதான்!
டூரிஸ்டுன்னு எவனும் வராதே! தப்பித்தவறி வந்தா 25 லிட்டர் தண்ணியோட வா!
இதெல்லாம் கட்டாயமா ஃபாலோ பண்ணு. இல்லாங்காட்டி கண்டிப்பா ஜெயிலு.
மனித உரிமைன்னு எவனாச்சும் கொடி புட்ச்சா அடிப்பம். குடிக்கவே தண்ணியில்லயாம், மனுஷ உரிமை என்னா வாழுது!
"
நன்னம்பிக்கை இழந்த முனையிலிருந்து (Cape of Good Hope) இந்தச்செய்தியை பதிவு செய்வது, 'மரநெறி' மார்க்கத்தால் மட்டுமே கேப் டௌனையும், சீக்கிரமே சிங்கிள் டம்ளர் தண்ணிக்கு சிங்கியடிக்கப்போகும் இன்னபிற அகில உலக டவுன், சிட்டி வாழ் மக்களையும் காப்பாற்ற முடியும் என உறுதியாக நம்பும் உங்கள் சகா!
கருத்துகள்
கருத்துரையிடுக