முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

KGF ஒண்ணுடா, KGF ரெண்டுடா!

  பட்டி தொட்டி எல்லாம் கேஜிஎஃப் காய்ச்சல் கொரோனாவுக்கே டஃபு குடுத்தப்பகூட நான் சிக்கிக்கல. தெளிவா ஒதுங்கியே இருந்தேன். இப்ப பார்ட் 2 வந்தாலும் வந்தது, காய்ச்சல் அதிகமாக, 'தியேட்டர்லதான் பாக்கணும்! நீ கூட்டிகிட்டு போ!'' என அழுத்தமும் சேர்ந்து கொள்ள, 'பார்ட் 1 முதலில் ஓடிடி இல் பார்க்கிறேன். அப்புறமா முடிவு பண்ணலாம்' என்று... மூன்று முறை முயற்சி செய்து விட்டேன் முடிலபா! முதல் முறை 10 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது. இரண்டாம் முறை 17 நிமிடம். மூன்றாம் முறை முப்பத்து மூன்று நிமிடம், sheer torture! கதையிலும் அதுவே, காண்பவருக்கும் அதுவே! தங்க சுரங்கங்களில் கொத்தடிமைகள், மனிதர்கள் dispensable resources. Bleak bleak bleak life. இதில் முளைத்து வரும் விடிவெள்ளி, இல்லை இல்லை, சுடர் விளக்கு...இல்லை இல்லை, தீப்பந்தம்...இல்லை இல்லை, வெடிகுண்டு...இல்லை இல்லை சூறாவளி...இல்லை இல்லை, கடவுள்போல ரட்சகன், எதற்கும் அஞ்சான் இவனை வெல்லல் யார்க்குமரிது! அதிலும் படத்தில் நாவலாசிரியர் ஒருவர் வரலாற்றில் மறைக்கப்பட்ட கதை சொல்கிறேன் என ரன்னிங் கமெண்டரி தொடங்கி படம் முழுதும் நிறுத்தாமல் முழங்க,...

C/O என் தாயார் எஸ்டேட், முன்டக்காயம், கேரளா

  முன்டக்காயம் - கேரளா நூறு+ வருடங்களுக்கு முன்... ஊட்டியில் ஒரு மழை நாளில் கிறிஸ்தவ இறை சேவையில் தம்மை அர்ப்பணித்த ஒரு பெண்கள் குழு குளிரில் நடுங்கிக்கொண்டே நடந்துகொண்டிருக்கின்றனர். அவர்களை மெல்ல தாண்டிய ஒரு கார், நிற்கிறது. இறங்கிய மனிதர் 'I will drop you sisters' என்று அந்த பெண்களை காரில் ஏறிக்கொள்ள வேண்டுகிறார், 'ஏன் இப்படிப்பட்ட மழையில் நடந்து செல்கிறீர்கள்? வாகனம் இல்லையா?' என கேட்கிறார். 'எங்கள் கன்னிமடத்தில் இல்லை' என்கிறார்கள். அடுத்த நாள் காலையில் புத்தம்புதிய Dodge கார் ஒன்று அவர்களது கான்வென்ட் முன் நிற்கிறது. "ஐயோ! வேண்டாமே! ட்ரைவர் எல்லாம் கட்டுப்படியாகாது. பெட்ரோலுக்கும் செலவாகும். வேண்டாமே!" என மறுக்கிறார்கள். தன் சொந்த செலவில் ட்ரைவரை நியமித்து, ஊட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், 'இந்த காருக்கு ஆகும் பெட்ரோல் பில்லை எனக்கு அனுப்பி விடுங்கள்' என ஏற்பாடு செய்து கேரளா திரும்புகிறார் அந்த மனிதர். முன்டக்காயத்தில் அவரது எஸ்டேட். எஸ்டேட்டின் பெயர் Endayar - அதாவது, "என் தாயார்" என்கிற தமிழ் சொற்களை, மிக விரும்பி அவரது ...

நாம எல்லாம் சேம் சேம்!

  இலங்கை திவாலாகிறதா? நேபால்தான் அடுத்தது, நீ வேணா பாரேன்! பாகிஸ்தான்லயும் ப்ராப்ளமாமே?! வார்னால நமக்கு நல்லதொரு வாய்ப்பு, பிசினசு பிச்சிக்கப்போவுது! 5G வந்திடுச்சின்னா பாரேன், இந்தியாவோட வளர்ச்சி வேற லெவல்! சைனால கொரோனா மறுபடி பரவுதாம். அவனுங்க ஆர்டர்லாம் நமக்குதான் இனிமே! பாமாயிலு இந்தோனேசியாகாரன் தர்லன்னா என்ன? நாமதான் வடகிழக்கில நட்டுகிட்டிருக்கிறமே?! எந்த வண்ணங்களில், எந்த விலையுயர்ந்த இழைகளில், எந்த உலகப்புகழ்பெற்ற  brandகளால் செய்யப்பட்டிருந்தாலும் நம் கோவணம் கோவணம்தானே? அதன் கடைசி இழை உறிஞ்சி இழுக்கப்படும்வரை... பேசுவோம் பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம். ஏனெனில், பேச்சு எங்கள் உயிர் மூச்சு! சரி... மொத்தமா உருவிட்டாங்னா?! அதுக்கென்ன போச்சு? நம்முடையத மட்டுமா உருவுவாங்க? எல்லாரோடதயும்தானே, அப்பால நாம எல்லாம் சேம் சேம்! 'ச இல்லயா, ஷ வா? வுடுங்க பாசு, பாத்துக்கலாம்!' :-)  (PC: Wikipedia)

காற்றின் மொழி...

  என்ன சத்தம் இந்த நேரம்? சத்தங்களால் நிரம்பி வழியுது நம் தினம், தினம் தினம். காலை 5 மணி முதல் வ்ரூம் வ்ரூம் என வாகன விரைச்சல் (= 'விரைவான இரைச்சல்'), bell curve மாதிரி சன்னமாய் தொலைவில் தொடங்கி சடுதியில் உச்சம் தொட்டு சட்டென சன்னமாகி மறை...யும் என முடிப்பதற்குள் அடுத்த வ்ரூம்! அடுத்த அரை மணி நேரத்திற்குள் 1. கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் 2. மாவ் மாவ் மாவ் மாவ் (இட்லி தோச மாவாம்) 3. காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் 4. அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லயே வாங்கிக்கிறோம் பணமா மாத்திக்கலாம். பொருளோட வாங்க சந்தோசமா போங்க! அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லய...

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்!

  "ஒரு ஆயிரம் பேரு வாழ்றதுக்கு ஒரு குடியிருப்பு வேணும். எவ்ளோ செலவாகும்? எவ்ளோ மெட்டீரியல்ஸ் ஆகும்? எத்தன வருசத்தில கட்டமுடியும்?" இந்த கேள்விக்கு விடை சில கோடி ரூவா, ஒரு சிறு காட்டை அழித்து அங்கிருந்து கிடைக்கும் மரங்கள், தனிமங்கள், மண், கல், பல நூறு ஆளுங்க, பல மாத வேலை, மூணு வேளை சோறு, ரெண்டு வேலை டீ, காபி, பலகாரம், பிக்கப்பு ட்ராப்பு... என நீண்ட என் நினைவோட்டம் நீள்கையில்... அவரு சொன்ன விடை என்னை அதிரவைத்தது! "செலவென்னங்க செலவு! ஒத்த பைசா வேணாம். மெட்டீரியலும் வாங்க வேணாம். ஆளுங்க என்னங்க ஆளுங்க...நாங்களே வேல செஞ்சிடுவோம்..." நம்ப முடியாத வியப்பில் நான்! 'மெய்யாலுமேவா?! நம்பவே முடியலயே! சரி.... எத்தன நாளாவும் குடியிருப்பு ரெடியாவுறதுக்கு?!' "அதென்னங்க கெரகம், நாளை காலைல சூரியன் வந்ததும் கும்பிட்டு தொடங்கினா மக்காநாளு காலைல கிரகப்பிரவேசமே செஞ்சிடலாமுங்க" என்றார் செங்கோடன்! கிட்டத்தட்ட மயக்கம் வராத குறைதான் எனக்கு. How on Earth is THIS POSSIBLE?! 'அவ்ளோ வேகமாவா? அப்டீன்னா அதிநவீன கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் அதிகமாக பயன்படுத்துவீர்கள் போல...

ஆதி அமைதி - இத்தாலியன் ஸ்டைல்!

  "அமைதியில் பல ரகம். அதில் ஆக டீப்பான அமைதின்னா அது மசான அமைதிதான்.சாதாரண அமைதிக்கும் இருக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. இதையும் தாண்டிய அமைதி ஒன்று உண்டு. அது கொஞ்சம் ஸ்பெஷல்.  அதை நமக்கு உணரவைப்பதற்கு ரெண்டே ரெண்டு இத்தாலியர்கள் போதும்!" இது நானும் என் நண்பர் அனந்துவும் பேசிக்கொண்டதில் ஒரு பகுதி. இடம்: சுவிஸ் தேசத்தில் அதிமெல்ல நகரும் ட்ராம் ஒன்றில் அலுவலகம் செல்லும் ஒரு சாதாரண நாளில். (அதிமெல்ல is the opposite of அதிவிரைவு. அதாவது மணிக்கு 15 கி.மீ ஸ்பீஈஈடு!) பெரும்பாலான ஐரோப்பிய தேசங்களில் சாதாரணமாகவே புன்சிரிக்க மறந்து சதா சீரியசான முகங்களாகவே பயணங்களில் தென்படும். உறைபனி கூடிய, சாம்பல் மேகங்கள் மூடிய குளிர்காலங்களில் எதிர்ப்படும் முகங்களில் கடுமையும் கூடியிருக்கும். இவர்கள் மத்தியில் 15-20 நிமிட பயணம் கூட ஒரு மணி நேர பயணம் போல தோன்றும் (இதனால inspire ஆகிதான் Swiss Patent Office ல கிளார்க்கா பெஞ்ச்ச தேய்ச்சிகிட்டிருந்த ஒருத்தர், Theory of Relativity எழுதினாரு போல 1906 இல, Annus Mirabilis என்கிற 'அறிவியலின் அற்புத ஆண்டில்'. ஆக்சுவலி, அவரு அந்த வருசம் எழுதின மூன்று ...

ழ!

  நேற்று தமிழ்ப்புத்தாண்டு. கொண்டாட்டங்களை முடித்திருப்பீர்கள்தானே. இன்று நம் தமிழ்மொழி பற்றி பேசுவோமா?  உலகின் பெரும்பான்மையான மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. இந்த மொழி போல ஒரு சமூகத்தின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் மொழியைக்காண்பது அரிது.  நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் உருவ மயக்கங்களோ? வெறும் காட்சிப்பிழைதானோ? என பாடிய பாரதியையே தேனுண்ட மயக்கத்தில் ஆழ்த்தியது தமிழ் மொழி.  மொழிகளுக்கு உயிர் உண்டு. உயிருள்ள அனைத்தையும் போல மொழிக்கும் பிறப்பு, வளரச்சி, முதிர்ச்சி உண்டு. மரணமும் உண்டு. அது, அந்த மொழியைப்பேசிய கடைசி மனிதனும் மறையும்போது மட்டுமே நிகழ்வது. நம் தமிழ், செம்மொழி. இன்றுவரை வழக்கிலுள்ள ஒரு தொன்மையான மொழி. ஆனால் நம் தமிழ்த்தாய் வாழ்த்து இதன் "சீரிளமையை செயல்மறந்து வாழ்த்தச்"சொல்கிறது. இது இளைய மொழியா? இளையோரும் எளிதாய் பயன்படுத்தும் மொழியா? ஒரு மொழியின் எழுத்து தொகுப்புகளில் (உதாரணம்: ஆங்கிலம் - A to Z) பயன்பாட்டில் இல்லாத எந்த ஒரு எழுத்துக்கும் இடமில்லை. ஆனால் நம் தமிழில்? ஙகர வரிசை மற்றும் ஞகர வரிசையில் பயன்பாட்டில் இல்லாத எழ...

துருவங்கள்தோறும் திருவிழா!

  துருவம் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்! இரான் நிலப்பகுதியை சேர்ந்த பலோச் (Baloch) இந்துக்கள், தமிழர்கள், பஞ்சாபிகள், நேபாளிகள், ஹிமாச்சல வாசிகள், அஸ்ஸாமியர்கள், பெங்காலிகள், ஒடிசர்கள் (அதாவது, ஒடிசா மக்கள்), மணிபுரிகள், சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், துளு, குடகு கன்னடர்கள் மற்றும் தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகளிலும் இன்று புத்தாண்டு திருவிழாவாம். நிலநடுக்கோட்டை ஒட்டி உள்ள ஏனைய நாடுகளிலும் தை முதல் பங்குனி வரை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தினங்களில் புத்தாண்டு திருவிழாவாம். ஒப்பிலாத பழையநகரம் பாபிலோனிலும் (இன்றைய இரான், இராக்) இன்னும் பல பழைழைழைய நாகரீகங்களிலும் புத்தாண்டு விழாக்கள் மார்ச்-ஏப்ரல் காலத்தில் கொண்டாடப்பட்டிருக்கின்றன. மத்திய ஆப்பிரிக்காவிலும் சில தென்னமெரிக்க நாடுகளிலும்கூட! மார்ச் வரை தெற்கு திசையில் அண்டார்டிகா பயணித்த சூரியபகவான், அலுப்பு தட்டி, 'திருப்படா வண்டிய போலாருக்கு' என வடக்கு திரும்ப, வழியெங்கும் வசந்த உற்சவங்களாம்!  நிலநடுக்கோட்டு மக்களெல்லாம் அந்த ஆண்டுக்கான உணவு உற்பத்தியை திட்டமிட, வேலை தொடங்க, வட அரைக்கோள மக்கள் தாம் பதுங்கியி...

அனுபவி ராஜா அனுபவி!

பாலகுமாரனின் அகல்யா, சிவசுவின் அகல்யா, மரண வேதனையில் சிவசுவை கண்களால் விளித்து ஒரு பாடல் படிக்கச்சொல்கிறாள். சிவசு படிக்கிறான்: ஈலோக கோளத்தில் ஒரு சிரா சந்த்யயில் இன்னும் ஒலிக்க நாம் கண்டு முட்டி, தெரியாமல் முட்டிக்கொண்டது மாதிரிதானே  சந்தித்தோம். தெரியாமல் முட்டிக்கொண்டு, சிதறினது மாதிரிதானே பிரிந்தோம். மறுபடி அவ்விதமே நிகழட்டும். போய்வா அகல்யா, ஆல் த பெஸ்ட்.  வே றெங்கேனும் எப்போதாவது சந்திக்க முடிகிறதா என்று பார்ப்போம். இந்தக்கோளத்திலோ அல்லது வேறு எங்கானுமா பார்க்கமுடிகிறதா என்று தவிப்போம்.  பார்த்தால் புரிந்துகொள்வோம்!' முதல்முதலாய் உங்களது கனவுப்பிரதேசத்துக்கு பயணம் செல்கிறீர்கள். அந்த இடம் வரை பஸ்ஸோ ரயிலோ செல்லும் என்பதை தவிற வேறொன்றும் தெரியாது உங்களுக்கு . அந்த ஊர் போனதும் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் என்னென்ன தகவல்கள் வேண்டியிருக்கும்? சுச்சூ, கக்கா போவதற்கான இடம் முதல், என்னென்ன காணலாம்? எங்கெங்கு காணலாம்? எந்த வாகனத்தில் போகமுடியும்? எப்போ? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? நல்ல தேநீர் / சிற்றுண்டி எங்கு கிடைக்கும்? நல்ல விடுதி எங்குள்ளது? நினைவுப்...

டைம் ட்ராவல்!

டைம் மெஷின். டைம் ட்ராவல் சாத்தியமா? சத்தியமாய் சாத்தியமே! டைம் ட்ராவல் செய்கையில் எனக்கு கடந்த காலத்தினூடே பயணிப்பது மட்டுமே பிடிக்கும். ஏனெனில் கடந்த நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் இன்றைய என் இருப்பு ஒரு தைரியம் தருகிறது...past must have been good or else I would not be here! எதிர்காலத்தைப்பற்றி இப்படி உறுதியாய் சொல்ல இயலாதல்லவா, எனவே அந்தப்பக்கம் பயணிக்க மனம் விரும்புவதில்லை. கமிங் டு த பாயிண்ட், டெக்னாலஜி அதிகம் வளராத காலத்திலேயே நான் மாதம் ஒரு முறை டைம் ட்ராவல் செய்வதுண்டு! பல நேரங்களில் என் தாத்தாவின் காலம் வரை போகமுடியும். இப்போதெல்லாம் மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய காலம் வரை சென்று வர முடிகிறது. என்னுடைய டைம் மெஷின் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு வட்டமடிக்கும் உயர் நாற்காலி, நன்கு குஷன் வைத்து தைத்து ரெக்சின் தோல் பூசிய இருக்கை. அதில் சில பல லீவர்கள் (levers) இருக்கும், உயர்த்த, தாழ்த்த, சாய்க்க, நிமிர்த்த. நான் பயணம் செய்யப்போகும் கடந்தகாலம் என் கண்ணெதிரே பிரம்மாண்ட கண்ணாடி திரையில். ஆனால் அது நான் சீட்டில் அமர்ந்தவுடனே இயங்காது. பல நிமிடங்கள் ஆகும். அதற்குள் தலைமுடியில் ஒரு கர...

தோல்பாவைக்கூத்து

India's unique struggle with Inflation through myopia. இதுவரை பொருளாதார பணவீக்கம் நம்மை அதிகமாக பாதிக்காமல் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? அரசுகளோ அவர்கள் தீட்டும் திட்டங்களோ அல்ல. அவசியமான பொருட்களின் விலை அதிகமானால்... தேவைகளை சுருக்கிக்கொண்டு வாழும் மக்களின் 'இதுவும் கடந்துபோகும்' என்கிற அனுபவ அறிவு பொதிந்த வாழ்வியல்தான் காரணம். இதனால்தான் 1998இல் அணுகுண்டு வெடிப்பின் பின் நம் மீது உலக நாடுகள் விதித்த பொருளாதார கட்டுப்பாடுகள் நம்மை பாதிக்கவில்லை. கோவிட் போன்ற பெருந்தொற்று காலங்களும் இப்படித்தான் இதுவரை கடந்து போயிருக்கின்றன. ஆனால் கடந்த சில வருடங்களில் இந்த வாழ்வியலை உடைத்துப்போடும் விதமாக சில நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஐ.டி துறையில் நல்ல வேலையிலுள்ள இருவர் கடந்த மாதம் 'செயின் அறுப்பு' முயற்சியில் கைதாகி உள்ளனர். இன்று விடியல் காலையில் புது தில்லியில் நடை பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களை சிலர் வழிமறி்த்து பணம் மற்றும் பொருட்களை பிடுங்கிச்சென்றுள்ளனர். நாடு முழுவதும் இதுபோல பல கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் முயற்சிகளும், (சிக்குவது பெண்களென்றால் பாலியல் தாக்க...