முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காற்றின் மொழி...

 

என்ன சத்தம் இந்த நேரம்?


சத்தங்களால் நிரம்பி வழியுது நம் தினம், தினம் தினம்.


காலை 5 மணி முதல் வ்ரூம் வ்ரூம் என வாகன விரைச்சல் (= 'விரைவான இரைச்சல்'), bell curve மாதிரி சன்னமாய் தொலைவில் தொடங்கி சடுதியில் உச்சம் தொட்டு சட்டென சன்னமாகி மறை...யும் என முடிப்பதற்குள் அடுத்த வ்ரூம்!

அடுத்த அரை மணி நேரத்திற்குள்

1. கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய்

2. மாவ்

மாவ்

மாவ்

மாவ்

(இட்லி தோச மாவாம்)

3. காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம்

4. அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லயே வாங்கிக்கிறோம் பணமா மாத்திக்கலாம். பொருளோட வாங்க சந்தோசமா போங்க!

அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லயே வாங்கிக்கிறோம் பணமா மாத்திக்கலாம்.

பொருளோட வாங்க சந்தோசமா போங்க!

அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லயே வாங்கிக்கிறோம் பணமா மாத்திக்கலாம்.

பொருளோட வாங்க சந்தோசமா போங்க!


ஓ, அப்டியே படிச்சிட்டீங்களா! எடைல எடைல கொஞ்சம் வ்ரூம் வ்ரூம் கிக்கீஈஈஈஈய்ங், கிக்கீஈஈஈஈய்ங் (horn க்கு!) எல்லாம் சேத்துக்கணும் :-)

இது போக, 

5.

வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

அஞ்சு கிலோ நூர்ரூபா அஞ்சு கிலோ நூர்ரூபா அஞ்சு கிலோ நூர்ரூபா

வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

அஞ்சு கிலோ நூர்ரூபா அஞ்சு கிலோ நூர்ரூபா அஞ்சு கிலோ நூர்ரூபா


"சரி, வீடு வாசல் இருக்கிற எடங்கள்லதான் இப்படி போல, கொஞ்சம் மெயின் ரோடு வரைக்கும் போலாம்" னு கெளம்புனா...

கெளம்புனா,

நூர்ரூபா நாப்பத்தொம்பது ரூபா நூர்ரூபா நாப்பத்தொம்பது ரூபா நூர்ரூபா நாப்பத்தொம்பது ரூபா நூர்ரூபா நாப்பத்தொம்பது ரூபா நூர்ரூபா நாப்பத்தொம்பது ரூபா நூர்ரூபா நாப்பத்தொம்பது ரூபா ன்னு இன்னொரு லௌட்ஸ்பீக்கர் கதறல்!

"இதென்ன புதுசா இருக்கு?! நூர்ரூபா தந்து ஏன் நாம்பத்தொம்பது ரூபா வாங்கணும்? Doesn't make sense you know!" என கொதிப்பாய் சத்தம் வந்த திசையை நோக்கினால், ஒரு மொபைல் அக்சசரீஸ் கடையில் வாசலில் பொட்டிக்கடை மாதிரி அமைத்து அதில் டெம்ப்பர் க்ளாஸ் டிஸ்கௌண்டு சேலாம்!!!!!


இதில் என்ன common thread னா, இந்த இரைச்சல் எல்லாமே ரெக்கார்டட் இரைச்சல், தொடர்ந்து ப்ளேபேக் செய்யும் சிறு கருவிகள் + பெரிய speakerகள் வழியே விநியோகமாகிறது!

என்ன கொடுமை சரவணன் இது?! என சினந்து,  "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" என்று ஏகாந்தம் தேடி ஓடினால்...


பூமில எங்கயுமே இல்லயாம், எல்லா இடத்திலயும் டூரிஸ்ட் கும்பலாம், சோசியல் மீடியா போஸ்டுக்காக லைவ் ஷூட்டாம்!


அமைதியற்ற பூமி, 

இருளற்ற இரவுகள், 

தூக்கம் தொலைத்த விழிகள், 

ஈரம் தொலைத்த இதயங்கள்....


லேட் நைட் சோசியல் மீடியா இயர்ஃபோன், எமர்ஜன்சி சலைன் ட்ரிப் லைன் போல காதில் ஓடிக்கொண்டிருக்க, ICU படுக்கையில் நம்மை சூழ்ந்திருக்கும் நம் ஆரோக்கியத்தை காட்டும் கருவிகள் போல  laptop, Tab, Mobile phone திரைகள் ஒளி உமிழ, பக்கத்தில் சிவப்பு / நீலம் / பச்சை / மஞ்சள் நிறத்தில் விட்டு விட்டு ஒளிரும் modem கருவிகளில் LED micro விளக்குகள் நம் படுக்கை அறைகளில்!

இதன் மத்தியில் எப்போது உறங்கிப்போனோம் என தெரியாது உறங்கத்தொடங்குகையில் பொழுது சட்டென விடிந்து....


காலை 5 மணி முதல் வ்ரூம் வ்ரூம் என வாகன விரைச்சல் (விரைவான இரைச்சல், bell curve மாதிரி சன்னமாய் தொலைவில் தொடங்கி சடுதியில் உச்சம் தொட்டு சட்டென சன்னமாகி மறை...யும் என முடிப்பதற்குள் அடுத்த வ்ரூம்!).

அடுத்த அரை மணி நேரத்திற்குள்

1. கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய் கீர கீரேய்

2. மாவ்

மாவ்

மாவ்

மாவ்

(இட்லி தோச மாவாம்)

3. காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம் காய்கறி பழம்

4. அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லயே வாங்கிக்கிறோம் பணமா மாத்திக்கலாம். 

பொருளோட வாங்க சந்தோசமா போங்க!

அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லயே வாங்கிக்கிறோம் பணமா மாத்திக்கலாம்.

பொருளோட வாங்க சந்தோசமா போங்க!

அக்கா அண்ணா ஐயா அம்மா பளசுக்கு புதுசு பளசுக்கு புதுசு வீட்ல தேவயில்லாம கெடக்கிற பளைய டிவி, ஏசி மெசினு, ப்ரிட்ஜி, வாசிங் மெசினு, வாட்டர் ஹீட்டரு, நியூஸ் பேப்பரு வீட்டு வாசல்லயே வாங்கிக்கிறோம் பணமா மாத்திக்கலாம்.

பொருளோட வாங்க சந்தோசமா போங்க!


அப்டியே படிச்சிட்டீங்களா! எடைல எடைல கொஞ்சம் வ்ரூம் வ்ரூம் கிக்கீஈஈஈஈய்ங், கிக்கீஈஈஈஈய்ங் (horn க்கு!) எல்லாம் சேத்துக்கணும்.

இது போக, 

5.

வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

அஞ்சு கிலோ நூர்ரூபா அஞ்சு கிலோ நூர்ரூபா அஞ்சு கிலோ நூர்ரூபா

வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

வெங்காயம், வெங்காயம், வெங்காயம்,

அஞ்சு கிலோ நூர்ரூபா அஞ்சு கிலோ நூர்ரூபா அஞ்சு கிலோ நூர்ரூபா


!

மாநாடு சிம்பு போல தூக்கி வாரி எழுந்து டைம் லூப்பில் அதே பழைய தினம் மீண்டும் play ஆகும்!

அவ்வப்போது "நாம டைம் லூப்லந்து தப்பிச்சிட்டோம் போல" என மாயை காட்டுவதற்காக பக்கத்து வீட்டில் காலை ஏழு மணிக்கே கரகர டங்டிங்டொங்கென கட்டிட வேலை தொடங்கும். 

அடுத்தடுத்த தினங்களில் இதே இரைச்சல்கள் தொடரவும், 'time loop upgrade ஆய்டுச்சி போல!' என நாமும் பழகிக்கொள்வோம்.


முப்பது வருடங்களுக்கு முன்னும் இரைச்சல்கள் அதிகமிருந்தது. தெருவெங்கும் ஒலிபெருக்கிகள் பக்தியை காற்றில் தூவிக்கொண்டே இருந்தன, பல நேரங்களில் நம்மை தூங்கவிடாமல், படிக்கவிடாமல் பேரிரைச்சலாய்.

ஒரு தெருவில் 'கற்பூர நாயகியே கனகவல்லி'யில் தொடங்கி 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூராண்டவா' வில் தாவி பின்னர், 'மண்ணுலகில் தேவன் இன்று இறங்கி வருகிறான், நல்ல மனிதரின் நடுவில் குழந்தையின் வடிவம் பெறுகிறான்' ஆக மாறி...'செல்லாத்தா, மாரியாத்தா...' என எகிறி, 'முருகா நீயெல்லாம் தெய்வமில்லை, எனது நெஞ்சே நீ வாழும் எல்லை' என எல்லையற்று காற்றில் எகிறி எகிறி அடிக்கும்.


இந்த இரைச்சல்களுக்கிடையில், வாகனப்புகை மூச்சு முட்ட, தன் அப்பாவின் விரல் பிடித்து நடந்துகொண்டிருந்த என் தோழி, 'ஏன்ப்பா இப்டி?! ஒரே இரைச்சலா இருக்கு, கோவம் கோவமா வருதுப்பா!' என்றார் ஒருநாள்.

நற்தகப்பன், பொறுமையாய் அவருக்கு சொன்னது இன்றுவரை அவருக்கு அமைதி தந்துகொண்டிருக்கிறது; 'இரைச்சல் இருக்கத்தான்மா செய்யும். உனக்கு அது வேணாமென்றால், எது வேண்டுமோ அதில் கவனத்தை செலுத்து. இல்லையென்றால் உன்னால் எங்குமே நிம்மதியா இருக்கமுடியாது...'


அந்த தகப்பன் இப்போது இல்லை. 


முந்தைய தலைமுறையின் அனுபவ அறிவை மதிக்கும் தலைமுறை, எனது தலைமுறை, அனுபவத்தை மதிக்கும் கடைசி தலைமுறையாக இருக்கும் என எண்ணுகிறேன்.


அப்படியானால் இன்றைய தலைமுறை?


எனது இன்றைய இந்தியாவிற்கு, இன்றைய தலைமுறைக்கு உடனடி தேவை: 

Noise Filter!

A noise filter that must be applied regardless of religion, race, caste, sex, place of birth or any of them.

After all, Noise is...just noise!


காற்றின் மொழியை கேட்கமறந்த நாம்,  "இரைச்சலுக்கு நிறங்கள் இல்லை" என்கிற உண்மையையும் மறந்துபோனோம்.



இது பொலிடிகல் பதிவு இல்லை :-) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...