இலங்கை திவாலாகிறதா?
நேபால்தான் அடுத்தது, நீ வேணா பாரேன்!
பாகிஸ்தான்லயும் ப்ராப்ளமாமே?!
வார்னால நமக்கு நல்லதொரு வாய்ப்பு, பிசினசு பிச்சிக்கப்போவுது!
5G வந்திடுச்சின்னா பாரேன், இந்தியாவோட வளர்ச்சி வேற லெவல்!
சைனால கொரோனா மறுபடி பரவுதாம். அவனுங்க ஆர்டர்லாம் நமக்குதான் இனிமே!
பாமாயிலு இந்தோனேசியாகாரன் தர்லன்னா என்ன? நாமதான் வடகிழக்கில நட்டுகிட்டிருக்கிறமே?!
எந்த வண்ணங்களில், எந்த விலையுயர்ந்த இழைகளில், எந்த உலகப்புகழ்பெற்ற brandகளால் செய்யப்பட்டிருந்தாலும் நம் கோவணம் கோவணம்தானே?
அதன் கடைசி இழை உறிஞ்சி இழுக்கப்படும்வரை... பேசுவோம் பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம். ஏனெனில், பேச்சு எங்கள் உயிர் மூச்சு!
சரி... மொத்தமா உருவிட்டாங்னா?!
அதுக்கென்ன போச்சு? நம்முடையத மட்டுமா உருவுவாங்க? எல்லாரோடதயும்தானே, அப்பால நாம எல்லாம் சேம் சேம்!
'ச இல்லயா, ஷ வா? வுடுங்க பாசு, பாத்துக்கலாம்!' :-)
(PC: Wikipedia)
கருத்துகள்
கருத்துரையிடுக