பட்டி தொட்டி எல்லாம் கேஜிஎஃப் காய்ச்சல் கொரோனாவுக்கே டஃபு குடுத்தப்பகூட நான் சிக்கிக்கல. தெளிவா ஒதுங்கியே இருந்தேன்.
இப்ப பார்ட் 2 வந்தாலும் வந்தது, காய்ச்சல் அதிகமாக, 'தியேட்டர்லதான் பாக்கணும்! நீ கூட்டிகிட்டு போ!'' என அழுத்தமும் சேர்ந்து கொள்ள, 'பார்ட் 1 முதலில் ஓடிடி இல் பார்க்கிறேன். அப்புறமா முடிவு பண்ணலாம்' என்று...
மூன்று முறை முயற்சி செய்து விட்டேன் முடிலபா!
முதல் முறை 10 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது.
இரண்டாம் முறை 17 நிமிடம்.
மூன்றாம் முறை முப்பத்து மூன்று நிமிடம், sheer torture! கதையிலும் அதுவே, காண்பவருக்கும் அதுவே!
தங்க சுரங்கங்களில் கொத்தடிமைகள், மனிதர்கள் dispensable resources. Bleak bleak bleak life. இதில் முளைத்து வரும் விடிவெள்ளி, இல்லை இல்லை, சுடர் விளக்கு...இல்லை இல்லை, தீப்பந்தம்...இல்லை இல்லை, வெடிகுண்டு...இல்லை இல்லை சூறாவளி...இல்லை இல்லை, கடவுள்போல ரட்சகன், எதற்கும் அஞ்சான் இவனை வெல்லல் யார்க்குமரிது!
அதிலும் படத்தில் நாவலாசிரியர் ஒருவர் வரலாற்றில் மறைக்கப்பட்ட கதை சொல்கிறேன் என ரன்னிங் கமெண்டரி தொடங்கி படம் முழுதும் நிறுத்தாமல் முழங்க, தப்பித்தவறி அவர் gap விட்டாலும் யாராவது ஒருத்தர் மாற்றி ஒருவர் "ஆஹாங்கிறேன், ஓஹோங்கிறேன்!' என பில்டப் மேல் பில்டப் எகிறவைக்க, யாஷ் 'ஸ்லோ மோ'வில் உணர்ச்சிகள் எதுவும் காண்பிக்காமல் சுத்தியல், மெட்டல் பைப்பு, பெரிய சுத்தியல், அதை விட பெரிய சுத்தியல் என கையில் கிடைக்கும் வெப்பன்ஸ் எல்லாம் பயன்படுத்தி அடித்து துவைக்க, மலை போல விக்டிம்சின் பாடிகள் குவிய, ஐயகோ, மறுபடி மறுபடி அந்த நாவலாசிரியர் குறுக்கே குறுக்கே வத்து கதை சொல்ல, அதை காணொளிப்பதிவாக மாற்றும் crew முதல் அங்கு வேலை செய்யும் பியூன் வரை அனைவரும் களத்தில் குதித்து கதை பற்றி விவாதிக்க...ஐயகோ ஐயகோ ஐயகோ!!!
மூன்றாவது முறை படம் பார்க்கும் அட்டெம்ப்ட் ரெண்டு நாளு முந்தி. ங்கொய்யால இன்னமும் காதுக்குள்ள நெறைய பேரு குந்திகினு 'நெருப்புடா நெருங்குடா பருப்புடா' என்று கதை சொல்லிக்கொண்டே இருப்பது போல ஓரே feelingu!
பார்ட் 2 ஆவது பார்ட் 3 ஆவது?! ஆள வுடுங்கடா சாமி!!!
Mad Max படங்களை ஒரு தங்கசுரங்கத்தில் நடத்தினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது filmography, sets, goriness etc...
1000 கோடியாம்? எத்தனை கோடில முடிஞ்சாலும் என்னோட 200 ரூவா மிச்சம்டோய்!
கருத்துகள்
கருத்துரையிடுக