"அமைதியில் பல ரகம். அதில் ஆக டீப்பான அமைதின்னா அது மசான அமைதிதான்.சாதாரண அமைதிக்கும் இருக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.
இதையும் தாண்டிய அமைதி ஒன்று உண்டு. அது கொஞ்சம் ஸ்பெஷல்.
அதை நமக்கு உணரவைப்பதற்கு ரெண்டே ரெண்டு இத்தாலியர்கள் போதும்!"
இது நானும் என் நண்பர் அனந்துவும் பேசிக்கொண்டதில் ஒரு பகுதி.
இடம்: சுவிஸ் தேசத்தில் அதிமெல்ல நகரும் ட்ராம் ஒன்றில் அலுவலகம் செல்லும் ஒரு சாதாரண நாளில்.
(அதிமெல்ல is the opposite of அதிவிரைவு. அதாவது மணிக்கு 15 கி.மீ ஸ்பீஈஈடு!)
பெரும்பாலான ஐரோப்பிய தேசங்களில் சாதாரணமாகவே புன்சிரிக்க மறந்து சதா சீரியசான முகங்களாகவே பயணங்களில் தென்படும். உறைபனி கூடிய, சாம்பல் மேகங்கள் மூடிய குளிர்காலங்களில் எதிர்ப்படும் முகங்களில் கடுமையும் கூடியிருக்கும்.
இவர்கள் மத்தியில் 15-20 நிமிட பயணம் கூட ஒரு மணி நேர பயணம் போல தோன்றும் (இதனால inspire ஆகிதான் Swiss Patent Office ல கிளார்க்கா பெஞ்ச்ச தேய்ச்சிகிட்டிருந்த ஒருத்தர், Theory of Relativity எழுதினாரு போல 1906 இல, Annus Mirabilis என்கிற 'அறிவியலின் அற்புத ஆண்டில்'. ஆக்சுவலி, அவரு அந்த வருசம் எழுதின மூன்று கோட்பாடுகளின் அதிமுக்கிய தன்மை காரணமாகத்தான் 1906 Annus Mirabilis ஆனது!!).
இந்த பயணத்தில் நம்மை சூழும் அமைதி - is a close second to masaana amaithi but nowhere close to the one I wrote about in the beginning.
அப்டின்னா என்னதான் அந்த 'முதல்ல சொன்ன ஸ்பெஷல் அமைதி'ப்பா?
ஒரு ட்ராம் நிறுத்தத்தில் கூட்டம் நிறைந்த உங்கள் ட்ராம் பெட்டியின் இரண்டு முனைகளிலும் உள்ள தானியங்கி கதவுகள் வழியே தலா ஒரு இத்தாலியர் உள்ளே நுழைந்தால்....
நுழைந்தால்?
அடுத்த பல நிமிடங்களுக்கு, அவர்களுக்கு இடையில் நிலவும் கனத்த அமைதியை தானியங்கி துப்பாக்கிகள் கொண்டு துளைப்பது போல இவர்களது உரையாடல் துளைத்துச்செல்லும்.
"சாலி!!!!" என ஒருவர் தொடங்க,
'சல்யூட்டி!!!!' என இரண்டாமவர் முழங்க, அடுத்த பல நிமிடங்கள் ஓலைப்பாயில் ஒண்ணுக்கிருந்ததைப்போல சத்தத்தில் கலகலத்துப்போகும்! (ஓலைப்பாய் சொலவடை - கரிசல் காட்டு எழுத்தாளர் கி். ரா உபயம்).
இத்தாலியர்கள் வாயினால் மட்டும் பேசுபவர்கள் அல்ல!
அவர்களது உரையாடலில் உடலின் அனைத்து பகுதிகளும் பங்குபெறும், குறிப்பாய் கைகள்!
Gesticulation என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் உடல்மொழியே இவர்களது முதன்மை மொழி. குரல் ஓரு ஒத்தூது, அவ்வளவே!
இவர்களைப்போல அனிமேட்டட் கான்வர்சேஷனிஸ்டுகள் உலகில் வேறு எங்குமே கிடையாது!
அடுத்த நிறுத்தத்தில் இவர்களில் ஒருவரோ அல்லலது இருவருமோ இறங்கியபின் அந்த ட்ராம் பெட்டியில் நிலவும் அமைதி இருக்கிறதே...அதுதான் நம் உலகங்களின் சிருஷ்டிக்கு முந்தின ஆதி அமைதி போல!!! நான் தொடக்கத்தில் சொன்ன அந்த ஸ்பெஷல் அமைதி :-)
கொசுறு: இப்படி உடல்மொழி சுமந்து உலகையே கலகலப்பாக்கும் ஒரு இத்தாலியர், உங்களுக்கு எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும், அவர்கள் தங்கள் இரு கைகளிலும் பொருட்கள் நிறைந்த பைகளை சுமந்துகொண்டு நடக்கையில் நீங்கள் எதிரில் வந்தால், உங்களுடன் பேசாமலே கடந்து செல்வார்கள்! ஏனெனில் அவர்களால் கரங்களை பயன்படுத்தாமல் பேசவே இயலாது :-)
கருத்துகள்
கருத்துரையிடுக