முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோல்பாவைக்கூத்து

India's unique struggle with Inflation through myopia.


இதுவரை பொருளாதார பணவீக்கம் நம்மை அதிகமாக பாதிக்காமல் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா?

அரசுகளோ அவர்கள் தீட்டும் திட்டங்களோ அல்ல.

அவசியமான பொருட்களின் விலை அதிகமானால்... தேவைகளை சுருக்கிக்கொண்டு வாழும் மக்களின் 'இதுவும் கடந்துபோகும்' என்கிற அனுபவ அறிவு பொதிந்த வாழ்வியல்தான் காரணம்.


இதனால்தான் 1998இல் அணுகுண்டு வெடிப்பின் பின் நம் மீது உலக நாடுகள் விதித்த பொருளாதார கட்டுப்பாடுகள் நம்மை பாதிக்கவில்லை.

கோவிட் போன்ற பெருந்தொற்று காலங்களும் இப்படித்தான் இதுவரை கடந்து போயிருக்கின்றன.

ஆனால் கடந்த சில வருடங்களில் இந்த வாழ்வியலை உடைத்துப்போடும் விதமாக சில நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.


ஐ.டி துறையில் நல்ல வேலையிலுள்ள இருவர் கடந்த மாதம் 'செயின் அறுப்பு' முயற்சியில் கைதாகி உள்ளனர்.

இன்று விடியல் காலையில் புது தில்லியில் நடை பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களை சிலர் வழிமறி்த்து பணம் மற்றும் பொருட்களை பிடுங்கிச்சென்றுள்ளனர்.

நாடு முழுவதும் இதுபோல பல கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் முயற்சிகளும், (சிக்குவது பெண்களென்றால் பாலியல் தாக்குதல்களும்) அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.


இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தேவைக்காக குற்றங்கள் செய்பவர்களா ஆசைக்காக செய்பவர்களா (Need vs Want)  என்கிற ஆய்வு இன்று அவசரமான அவசியம். நமது குற்றத்தடுப்பு துறைகள் இந்த மாதிரியான data collection plus analysis செய்கிறார்களா தெரியவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் பெருநுகர்வின் ராஜாக்களாக இருப்பவை டிஜிடல் சாதன நுகர்வு மற்றும் போதைப்பொருட்கள் நுகர்வு.

முன்னது சந்தைப்பொருளாதாரம் - Regulated Market - அரசுகளால் வரையறுக்கப்பட்டு, வழிநடத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவது.

பின்னது கள்ள மார்க்கெட் - அரசுகளின் கண்களில் மண்ணைத்தூவி, பிடிபட்டாலும் சட்ட விரிசல்களில் அல்லது அரசியல் செல்வாக்கு உதவியுடன் நழுவி, பெருகிக்கொண்டிருப்பது.

(இரண்டுக்கும் இடையில் அரசே திறந்த புதுமாதிரியான சந்தை - மது + புகைபொருட்கள் வணிகம்)


இந்த இரண்டு அடிப்படை வேறுபாடுகளை ஒதுக்கி பார்த்தால், இந்த இரண்டின் Modus Operandi எனப்படும் 'செயல்பாட்டு விதம்' ஒன்றே!:

மலிவான விலையில் அறிமுகம்.

எளிதாக, அருகிலேயே கிடைக்கும் வகையில் 'டச் பாய்ண்ட்ஸ்'.

மனிதர்களின் ஆதார 'பொறாமைக்குண'த்தை இடைவிடாது தூண்டி, ஒதுங்கி நிற்பவரையும் உள்ளிழுக்கும் வித்தை.

பொறியில் இரை போல மக்கள் சிக்கியதும் மெல்ல மெல்ல விலையேற்றம்.


ஆனால் விலையேற்றத்தை ஈடு செய்யும் வகையில் ஊதிய உயர்வு ஒருபோதும் இருக்காது.

உழைப்புக்கான ஊதியம் தேவைகளையும் சில சின்ன ஆசைகளையும் நிறைவேற்றும் அளவுக்கே சந்தைப்பொருளாதரம் ஊதிய விதிகளை வகுத்துள்ளது.

அப்படியானால் நமது போதைகளை எப்படி கையாள்வது,?


போதை மீறினால் ஒன்று நோயாளியாகிறார்கள் இல்லையென்றால் குற்றங்கள் புரிகிறார்கள் அல்லது இரண்டுமாகிறார்கள்.

குற்றங்களுக்கு கடினமான தண்டனை அளித்தாலும், குற்றத்தடுப்பு நடவடிக்களை மேம்படுத்தினாலும், சிகிச்சை தந்து மீட்டெடுத்தாலும், "தேவை கருதி" அரசுகளே சாராயக்கடைகளை நடத்தி... புகைக்கும் பொருட்களையும் சந்தைப்படுத்த அனுமதித்து', "You see, புகைப்பதும் குடிப்பதும் வீட்டுக்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும். உடல் நலத்தை பாதிக்கும். உயிரைக்கொல்லும்னு கரிசனமாய் மக்களை பயமுறுத்தியபின்தானே விற்கிறோம்!" என கைகழுவும் சூழலில் மீண்டவர் மறுபடி போதைக்கு / குற்றங்களுக்கு அடிமையாவது எளிதல்லவா? குற்றமே போதையாக மாறுவதும் சாத்தியம்தானே!

இது போன்று நிகழாமல் தடுக்கக்கூடிய ஒரே ஆயுதம், சமூகம் சார்ந்த குடும்ப வாழ்வும் ஒதுக்கிவைத்தலுமே (Social ostrasization of such businesses and patrons). இப்பொழுது குடும்பம், சமூகம், போற்றிப்பாதுகாத்த கோட்பாடுகள் எல்லாம் நலியத்தொடங்கி... இந்த ஆயுதமும் மழுங்கிப்போனது. 

குடிப்பதும் புகைப்பதும் கலாச்சார அடையாளங்களாக ஊடகங்களால் 24*7*365 பரப்பப்படுகின்றன.


அதிகமாகிவரும் பாலியல் வன்முறைகளுக்கும் கண்காணிப்புகள் அற்ற ஊடக நுகர்வுகளுக்கும் உள்ள தொடர்புகூட ஆய்வுசெய்யப்படுகிறதா என்று தெரியவில்லை.


பொருளாதார வளர்ச்சியில் இதெல்லாம் சகஜம்ப்பா என்ற ரீதியில் அணுகலாம் என்றால் இந்த குற்றங்களால் நிகழும் இழப்புகழளை ஈடு செய்ய ஆகும் செலவு நம் GDP இலிருந்து கழிக்கப்படவேண்டுமல்லவா?

அப்பொழுதுதானே நம்முடைய உண்மையான வளர்ச்சி என்ன என தெரியும்?

அதுவரையில் நம் மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்து கண்காணித்துவரும் பணவீக்க இலக்குகளும் (inflation target as a percentage of GDP) தவறாகத்தானே இருக்கும்.

பொருளாதார வளர்ச்சிக்காக நாம் கொள்ளையடிக்கும் இயற்கை வளங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் நம்முடைய நிஜமான GDP - வீழ்ந்து கொண்டே இருப்பது தெளிவாகும் (not just an ordinary fall above / to zero. It will be in negative territory!).


நாமதான் இந்த தப்ப செய்ய மாட்டமே செய்யமாட்டமே!

அப்படியே தப்பித்தவறி கூட யாரும் செய்திடக்கூடாதென்று பெருவணிக கரங்கள் எங்கிருந்தோ இயக்க, இயங்கும் நூலிழைகளாய் அரசுகள் அசைக்க, ஒட்டு மொத்த மனிதக்கூட்டமும் நித்தநித்தம் அசைந்து அரங்கேற்றும் கூத்துக்கு தோல்பாவைக்கூத்து என்பது பொருத்தமான பெயர்தானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்