முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

C/O என் தாயார் எஸ்டேட், முன்டக்காயம், கேரளா

 


முன்டக்காயம் - கேரளா

நூறு+ வருடங்களுக்கு முன்...

ஊட்டியில் ஒரு மழை நாளில் கிறிஸ்தவ இறை சேவையில் தம்மை அர்ப்பணித்த ஒரு பெண்கள் குழு குளிரில் நடுங்கிக்கொண்டே நடந்துகொண்டிருக்கின்றனர்.

அவர்களை மெல்ல தாண்டிய ஒரு கார், நிற்கிறது. இறங்கிய மனிதர் 'I will drop you sisters' என்று அந்த பெண்களை காரில் ஏறிக்கொள்ள வேண்டுகிறார்,


'ஏன் இப்படிப்பட்ட மழையில் நடந்து செல்கிறீர்கள்? வாகனம் இல்லையா?' என கேட்கிறார்.

'எங்கள் கன்னிமடத்தில் இல்லை' என்கிறார்கள்.

அடுத்த நாள் காலையில் புத்தம்புதிய Dodge கார் ஒன்று அவர்களது கான்வென்ட் முன் நிற்கிறது.


"ஐயோ! வேண்டாமே! ட்ரைவர் எல்லாம் கட்டுப்படியாகாது. பெட்ரோலுக்கும் செலவாகும். வேண்டாமே!" என மறுக்கிறார்கள்.

தன் சொந்த செலவில் ட்ரைவரை நியமித்து, ஊட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், 'இந்த காருக்கு ஆகும் பெட்ரோல் பில்லை எனக்கு அனுப்பி விடுங்கள்' என ஏற்பாடு செய்து கேரளா திரும்புகிறார் அந்த மனிதர்.


முன்டக்காயத்தில் அவரது எஸ்டேட். எஸ்டேட்டின் பெயர் Endayar - அதாவது, "என் தாயார்" என்கிற தமிழ் சொற்களை, மிக விரும்பி அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் அவர் தன் தாயார் நினைவாக வைத்த பெயர் EnDayar.


J. J. Murphy, பிறப்பால் ஐரிஷ்காரர், வணிக குடும்பம். பெரிய குடும்பம். 


21 வயதில் இந்தியா வந்து தென்னிந்தியா வந்து கேரளாவின் கண்ணன் தேவன் மலைச்சரிவுகளில் தேயிலை, காபி தோட்டங்களில் எட்டு வருடம் உழைக்கிறார்.

அவர் வேலை செய்த ஒரு எஸ்டேட்டின் உரிமையாளர்கள், விற்க முடிவு செய்ய, அவரே வாங்கிக்கொள்கிறார்.

ஏலக்காய் பயிர் செய்து நிறைய பொருளீட்டி, பின்னர் காபி, மிளகு என எஸ்டேட் சாகுபடியில் அவர் 30 வயதுக்குள் அனுபவசாலி விவசாயி ஆகிறார்.


பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ரப்பர் பயன்பாடு அதிகமில்லை. நம் இந்தியாவில் Ficus Elastica என்கிற இந்திய ரப்பர் மரம் நெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்தது.  அதுவும் வட கிழக்கு இந்தியாவில் மட்டுமே.



பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியா முழுவதும் ரயில் பாதைகள் அமைக்கத்தொடங்கி, ரயில் வண்டிகள் கட்டமைக்கத்தொடங்கியதும் ரப்பரின் தேவை அதிகமாகிப்போக, கண்ணில் கண்ட ரப்பர் மரங்களை எல்லாம் நம் மக்கள் கண்மூடித்தனமாய் வெட்டி காசாக்கினாலும் ரயில்வேயின் பசி தீரவில்லை.

"ஓ! இந்தியால ரப்பருக்கு இவ்ளோ டிமாண்டா. கவலை வேண்டாம். நம்ம ராச்சியத்தில தென்னமெரிக்க ப்ரேசில் காடுகள்ல நிறைய ரப்பர் மரங்கள் இருக்கு. வெட்டி எறக்கிடுவோம்!" என பிரிட்டிஷ் கப்பல்கள் விரைந்து, ரப்பர் பாலையும் ரப்பர் கன்றுகளையும் (வெட்டி நட்டாலே முளைத்துவிடும், ஆனால் இந்திய வெரைட்டி இல்லை; Havea Brasiliensis எனப்படும் ப்ரேசில் நாட்டு ரப்பர் மரங்கள்) கொண்டுவந்து குவித்தன.

(1838 இல் சார்லஸ் குட் இயர் என்கிற அமெரிக்கர் vulcanization என்கிற, ரப்பர் பாலை எளிதாக ரப்பர் டயராக மற்றும் பல "வளைக்கக்கூடிய திடப்பொருட்களாக"   மாற்றும் தொழில்நுட்பத்தை (Good Year tyres still run in our roads!) கண்டறிந்தவுடன் ரப்பரின் தேவை காடுகளைப்பிய்த்துக்கொள்ள...பிரிட்டிஷ் ரப்பர் தொழிற்சாலைகளின் தந்தை என அறியப்படும் தாமஸ் ஹான்காக், "எம்மா நாளுதான் தென்னமெரிக்காலேந்து கப்பலு வளிக்கிறது இந்தியாக்கு? ப்ரொடக்சன டீசென்ட்ரலைசு பண்ணுங்கய்யா!" என உத்தரவிட, ரப்பர் நாற்றுக்கள் கிழக்கு அரைக்கோள நாடுகளின் காடுகளில் குடியமர்த்தப் படுவதற்காக ப்ரேசிலில் கப்பலேறின. காடுகளை வெட்டி வீழ்த்தி தோட்டங்களாக்கவும் ரப்பர் வளர்க்கவும் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அடிமைகள் கிழக்கு அரைக்கோளத்திற்கு கப்பல்களில் அழைத்துவரப்பட்டனர்; பிரிட்டிஷ் ராச்சியத்துக்கு கை நீளம் அதிகமல்லோ!)


ப்ரேசிலின் மர கட்டிங்குகள் முதலில் பிரிட்டனின் "கீவ் ராயல் பொட்டானிகல் கார்ட'னில் ஆய்வு செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டு, அங்கிருந்து இந்தியா மற்றும் இலங்கை சென்றன.

கல்கத்தாவில் தரையிறங்கிய முதல் பேட்ச் ரப்பர் கன்றுகள், அங்கு வேரூன்ற முடியாமல் இறந்துபோக, இலங்கையில் கரையிறங்கியவை பிழைத்துக்கொள்ள, சில வருடங்கள் கழித்து இலங்கையிலிருந்து ப்ரேசில்-ரப்பர்-மர கட்டிங்குகள் கப்பலேறி நம் கேரள மலபார் பகுதியில் நிலம்பூர் பள்ளத்தாக்கின் முன்டேரியில் குடியேறின, வேர் இறக்கின, வளர முயன்று...தோற்று...இறந்து போயின.

அரசாங்கத்தோடு தனியார் தோட்டங்களும் களத்தில் இறங்கி, சில பல முயற்சிகளுக்கு பின்னர் மர்பியும் அவரது நண்பர்கள் சிலரும் வெற்றி பெறுகிறார்கள்.


'இந்த நூற்றாண்டின் பணப்பயிர் இதுதான்' என்கிற conviction உடன் பெரியார் நதிக்கரையில் முண்டக்காயம் என்னும் ஊரில் Commercial Scale Rubber Plantation தொடங்குகிறார் மர்பி.


இந்தியாவின் ரப்பர் வணிகம் இங்கிருந்து தொடங்குகிறது. கேரளா முழுதும் பரவுகிறது.

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கவும் ரப்பரின் தேவை வானில் ஏற, மர்பி மகிழ்வாய் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஏராளமான எஸ்டேட்டுகளை நிறுவுகிறார். 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உலக சந்தை...


இந்த மர்பி, ஒரு டிபிகல் கலோனியல் லேன்ட்லார்ட் கிடையாது. 

டிபிகல் என்றால் - இயக்குனர் பாலாவின் பரதேசி படம் பாருங்கள். அல்லது அதற்கு மூலமான Red Tea நாவலை வாசித்துப்பாருங்கள்.

மர்பியின் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு, piped water உடன் கூடிய குடியிருப்பு வசதி (row houses), டாய்லட், மதிய உணவுடன் பள்ளிகள், மகப்பேறு மருத்துவமனை, தொழிலாளர்களின் குழந்தைகளை வேலை நேரத்தில் பார்த்துக்கொள்ள தனி கட்டமைப்புகள், நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மர்பியின் சொந்த செலவில் மதராஸ் மாகாணத்தில் மேற்படிப்பு...

இரண்டாம் உலக யுத்தம் உக்கிரமான ஒரு காலகட்டத்தில் நம் மக்களுக்கு கடுமையான உணவுப்பஞ்சம். மர்பி தன் சொந்த செலவில் பெரும் முயற்சி செய்து தரமான உணவுப்பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்தாராம்!


கோடி கோடியாய் ஈட்டிய பொருளை கல்விக்காவகும், மருத்துவத்துக்காகவும் இறைபணிக்காகவும் கேரளா முழுவதும் பகிர்ந்து வழங்கியவர் தன் இறுதி நாட்களை பிறந்த நாட்டில் கழிக்க மறுத்து, சுதந்திர இந்தியாவிலும் பெரிதும் நேசிக்கப்பட்டு, இறந்தபின் அவரது "என் தாயார்" எஸ்டேட்டிலேயே சக தொழிலாளர்களின் கல்லறைகளுக்கு நடுவே விருப்பத்தின் பேரில் புதைக்கப்பட்டார்.


ரப்பர் வணிகம் கடந்த இருபது ஆண்டுகளில் சந்தை ராட்டினத்தி்ல் சிக்கி சுழன்று பல பேரை கிறிகிறுக்கவைத்து, 2015-16 வாக்கில் மெல்ல மெல்ல கேரளத்தை விட்டு விடை பெறத்தொடங்கியிருந்தது...

ஆட்கள் பற்றாக்குறை, விலையின்மை போன்ற typical issues that plague any monocrop befell rubber too.

கடந்த இருபது ஆண்டுகளில் தென்கிழக்காசிய நாடுகள் நிறைய ரப்பர் மரங்களை நட்டு நமக்கு போட்டியாக, "அப்பாடா, இப்பயாவது இந்த monocrop சுழல்லேந்து வெளியில் வந்திடலாம்...' என தப்பித்தவறி கூட யாரும் நினைத்திடக்கூடாதென்று அரசுகள் முடிவு செய்து, இப்போதெல்லாம் லாரி லாரியாக கேரளாவிலிருந்து வட கிழக்கு இந்தியா முழுவதும் ரப்பர் நாற்றுக்கள் பயணம் செய்யத்தொடங்கியாச்சி; வடகிழக்கிந்தியாவின் வளமான நிலங்களில் பாமாயில் மரங்களும் (எண்ணெய்ப்பனை) ரப்பர் மரங்களும் வளர்ப்போம், தன்னிறைவடைவோம் என அரசுகள் மானியங்களை வாரி வழங்கத்தொடங்கியாச்சே!


சரி, ப்ரேசில்காரி வந்தோன்ன நம்ம உள்ளூர்க்காரிய ஒதுக்கினமே அவ என்ன ஆனாள்?!






Ficus Elastic  என்கிற அந்த நெடிதுயர்ந்து வளரும் மரம், தன் வேர்களைக்கொண்டே மக்கள் ஆற்றைக்கடக்க மரப்பாலமாய் பயன்பட்ட ஆதிமரம், இன்று உங்கள் வீட்டில் கூட ஒரு பூந்தொட்டியில் அழகுச்செடியாய் போன்சாய் வடிவில் குறுகி அமர்ந்திருக்கலாம்...


முப்பொழுதும் சோகமாய் இருக்கும் இந்த மரங்கள் எப்போதாவது ஒரு முறை, 'விடுகதையா இந்த வாழ்க்கை!' என்கிற பாடலை கேட்டால் மட்டும் இலைவழி சில சொட்டு ரப்பர் பால்-கண்ணீர் விடுமாம்!

(PC: Mostly from wikimedia and rest from internet. May be subject to copyright. His story originally appeared in a website called livinghistory).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்