முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்!

 

"ஒரு ஆயிரம் பேரு வாழ்றதுக்கு ஒரு குடியிருப்பு வேணும். எவ்ளோ செலவாகும்? எவ்ளோ மெட்டீரியல்ஸ் ஆகும்? எத்தன வருசத்தில கட்டமுடியும்?"

இந்த கேள்விக்கு விடை சில கோடி ரூவா, ஒரு சிறு காட்டை அழித்து அங்கிருந்து கிடைக்கும் மரங்கள், தனிமங்கள், மண், கல், பல நூறு ஆளுங்க, பல மாத வேலை, மூணு வேளை சோறு, ரெண்டு வேலை டீ, காபி, பலகாரம், பிக்கப்பு ட்ராப்பு... என நீண்ட என் நினைவோட்டம் நீள்கையில்...

அவரு சொன்ன விடை என்னை அதிரவைத்தது!


"செலவென்னங்க செலவு! ஒத்த பைசா வேணாம். மெட்டீரியலும் வாங்க வேணாம். ஆளுங்க என்னங்க ஆளுங்க...நாங்களே வேல செஞ்சிடுவோம்..."

நம்ப முடியாத வியப்பில் நான்!

'மெய்யாலுமேவா?! நம்பவே முடியலயே! சரி.... எத்தன நாளாவும் குடியிருப்பு ரெடியாவுறதுக்கு?!'

"அதென்னங்க கெரகம், நாளை காலைல சூரியன் வந்ததும் கும்பிட்டு தொடங்கினா மக்காநாளு காலைல கிரகப்பிரவேசமே செஞ்சிடலாமுங்க" என்றார் செங்கோடன்!


கிட்டத்தட்ட மயக்கம் வராத குறைதான் எனக்கு. How on Earth is THIS POSSIBLE?!

'அவ்ளோ வேகமாவா? அப்டீன்னா அதிநவீன கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் அதிகமாக பயன்படுத்துவீர்கள் போல...?' என்றேன்.

இதற்கு செங்கோடனின் பதிலைக்கேட்டு மயக்கம் போட்டே விழுந்துவிட்டேன்; 

"நம்மள விட மேலான அதி நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் இருக்கா என்ன?!" என்றார் வெள்ளந்தியாக.

 

மயக்கம் தெளிந்து தரையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோசித்தேன்.

'செலவெல்லாம் மனுசப்பயலுங்களுக்குதான் போல!

இதனால் பூமிக்கும் நஷ்டம்தான!'


மிஸ்டர் செங்கோடன், ஆயிரம் குடும்பங்களின் தலக்கட்டு, பெரிய மனுசர், செவ்வெறும்பு எனப்படும் Weaver Ants இன் ஒரு கூட்டத்தின் தலைவர்!

Weaver Ants குடியிருப்புகள் எப்படி உருவாகும் தெரியுமா?

மொதல்ல ஆர்கிடெக்ட் க்ரூப் ஒண்ணு சூட்டபிளான இடம் பார்க்கும், அதாவது இலைகளை தேர்ந்தெடுக்கும். "வாழை இலையை வளைக்கமுடியாது. சோ, நோ காலனி பாசிபிள் தேர். மனுசப பயலுக உள்ளங்கை அளவுலேர்ந்து முக வட்ட அளவுக்கு பெரிதான இலைங்கதான் ஐடியல்".

தீர்மானமானபின்பு, சைசான இலை தேடி, சிக்கியதும் இலையின் வெளி விளிம்பை தம் மேன்டிபில்ஸ் என சொல்லப்படும் கீழ்த்தாடைக்கும் கழுத்துக்கும் உள்ள இடைவெளியில் அழுத்திப்பிடித்து, ராமர் வளைத்து ஒடித்த வில்லைப்போல ஒடிக்காமல் வளைத்து...(ஒண்டியாளா முடிலபா, என் இடுப்ப கெட்டியா புட்சிக்கோ, ரெண்டுல ஒண்ணு பாத்திடலாம். அப்டியே நம்ம கூட்டாளிங்களயும் வலிச்சிகினு வா. ஆளுக்கு ஒரு கவ்வு கவ்வி இளுத்தா...வளச்சிடலாம்!).

ஊர் கூடி தேரிழுப்பது போல ஊர்கூடி ஒரு இலையின் இரு விளிம்புகளையோ இல்லது பல இலைகளின் விளிம்புக்கூட்டங்களையோ மெல்ல மெல்ல இழுத்து ஒரு கோணல்மாணலான பந்தின் வெளித்தோற்றம் போன்றதொரு hollow space ஐ உண்டாக்கும்.

" ஹேய், உட்றாதீங்க மக்கா! கெட்டியா இஸ்த்து புட்சிகிணே இருப்போம். டேய் மணியா, ஆளுங்கள கூட்டிகினு சுருக்கா போய் இலைங்கள ஒட்றதுக்கு பேஸ்ட் எடுத்துகினு கருக்கா வாடா!" என இன்ஸ்ட்ரக்சன் தரவும் மணியன் தலைமையில் ஒரு க்ரூப் ஓடும்.

ஓட்டம் fevicol விற்கும் கடைக்கோ araldite விற்கும் கடைக்கோ அல்ல! 


மணியனின் தலைமையில் மணியான வீரர்கள் விரைந்து சென்று அருகிலிருக்கும் மரங்களில் எதிர்காலத்தில் பழுக்கப்போகும் பழங்களை சாப்பிடுவதற்காக போன வாரமே அங்கங்கே கூடு கட்டி முட்டைகளை இட்டுவைத்த வேறு பூச்சிகளின் முட்டைகளில் இருந்து பொரிந்து வெளிவந்த ஆயிரக்கணக்கான புழுக்களை (larvae) தங்கள் தாடைகளில் கவ்விக்கொண்டு கன்ஸ்ட்ரக்சன் சைட்டுக்கு திரும்பும்!

"பேஸ்ட் வந்தாச்சா, பேஷ் பேஷ்! இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம்" என ஆனந்தமாய் ஆர்கிடெக்டும் மேஸ்திரிகளும் இவர்களை வரவேற்று, "இதுதான் நாம பேஸ்ட்டு போட்டு ஒட்ட வேண்டிய இடம்" என இந்தியா-பாகிஸ்தான் பார்டர் மாதிரி அருகருகில் வளைக்கப்பட்ட இலைகளில் இடைவெளியை கை காட்ட, அதன் பின் நடக்கும் நிகழ்வு பேரற்புதம்!!


'மவனே, ரெடியா???!' என ஒவ்வொரு புழுவிடமும் அதை கவ்வி வந்த ஆளு கேட்க,

'ரெடி பாஸ்!' என புழு பதில் தர,

புழுவின் தலையில் மெல்ல ஒரு தட்டு. புழு உடனே அம்மாவிடம் அப்போதுதான் குடித்த பாலை கக்கும் குழந்தை போல கொஞ்சமாய் சில்க் இழைகளை தன் வாயிலிருந்து "உவ்வே" செய்ய, அது sealant ஆக மாறி இலை விளிம்புகளை பச்சக்கென்று ஒட்டவைத்து இறுகி காயும்!!!

புயலா இடியா மழையா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி என ஆனந்தமாய் பாட்டுப்பாடிக்கொண்டு பெருங்கூட்டமாய் மிஸ்டர் செங்கோடன் தலைமையில் புதுமனை புகு விழா நடக்கும்!

Elapsed time: Just 24 hours or less.

Cost: Zero, Nada, Zilch!

Materials: Just a bunch of leaves!

Wastage / Damage: None!

Durability: All weather, best in the world. Even if there is any damage, can be repaired easily and quickly in the same way they were built originally!


Contrary to popular belief that these red ants are bad for trees, they actually protect the trees from insects and birds that target the flowers and fruits. Hence, yield invariably goes up and quality of yield too, wherever these Weaver ants nest!!


தென்கிழக்காசிய நாடுகளில் இன்றுவரை அவர்களது பழத்தோட்டங்களை பூச்சித்தாக்குதலில் இருந்து காப்பாற்றுபவை இந்த செவ்வெறும்புகள்தானாம்!

இந்த எறும்புகளின் லார்வாக்கள், கூறு ஐம்பது ரூபாய் என இன்றும் விற்கப்படுகின்றன. ஏக டிமாண்டாம், ஏன்னா அம்புட்டும் ஹை புரோட்டீனாம்!

அவ்வப்போது அந்த மக்களின் வீடுகளில் நம்முடைய எமர்ஜென்சி உப்புமா போல, எமர்ஜென்சி உணவு / தொட்டுக்கை - சிவப்பெறும்பு பொரியல்!!!!!!!


Friends, our world is such an endless, incredibly-magical place. 

அடுத்த நொடியில் மட்டுமல்ல, அடுத்த இலையில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்களும் ஏராளம்!!!


"இதெல்லாம் சரி, வெள்ளிக்கிழமையும் அதுவும் என்னப்பா இது செவ்வெறும்பு புராணமும் எறும்பு பொரியலும்?!' என்கிறீர்களா? நியாயமான கேள்விதான்.

அதாவது, சேகரு சேகருன்னு ஒர்த்தரு எங்க தோட்டத்தில மரத்துலேர்ந்து அலக்கில தேங்கா பறிச்சித்தர வருவாரு. அவர இந்த முறை கூப்ட்டார சொல்லி ஆள அணுப்புனா, 'அந்ந்ந்ந்த தோட்டமாஆஆஆஆ.... தோட்டகார்ட்ட சொல்லி மரத்துக்கெல்லாம் எறும்பு மருந்து அடிக்க சொல்லுபா! மரத்தாண்ட போனாலே பட மாதிரி அப்பி புடிங்கிடுது' ன்னாராம்.

இன்னக்கி மத்யனமா சேகரு வருவாராம். அதான், நான் ஏன் மருந்தடிக்க மாட்டேன்னு. சொல்றதுக்காவ ரெடி பண்ண மேட்டரு இது.


செத்தர்டா சேகரு!

(சேகரு என்ன விட பெரியவரா, அதான் மரியாத.)

:-)


பின் குறிப்பு 1:

'நாம மட்டும் ஏன் இப்படி ஆனோம்?' என உங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்தால், Jon Jandai என்கிற மனிதரை கூகுளில் தேடுங்கள். வசிப்பிடங்கள் பற்றி அவர் கூறுவதை படித்துப்பாருங்கள் / காணொளியில் காணுங்கள். விடை கிடைக்கும். 

 

பின் குறிப்பு 2: ஆக்சுவலி, சேகருக்காக கொஞ்சம் அடுப்பு சாம்பல் எடுத்து வச்சிருக்கோம். கைகாலுலு மொகமெல்லாம் பூசிகிட்டு மரத்தாண்ட போனா கடிக்காது! ஆனா அவரு இத நம்பணுமே!

பேரன்புடன்,

பாபுஜி

(All images except the top one are from internet. They may be copyright protested. Used here only for illustrative purpose)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்