முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ழ!

 

நேற்று தமிழ்ப்புத்தாண்டு. கொண்டாட்டங்களை முடித்திருப்பீர்கள்தானே.

இன்று நம் தமிழ்மொழி பற்றி பேசுவோமா? 


உலகின் பெரும்பான்மையான மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. இந்த மொழி போல ஒரு சமூகத்தின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் மொழியைக்காண்பது அரிது. 

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் உருவ மயக்கங்களோ? வெறும் காட்சிப்பிழைதானோ? என பாடிய பாரதியையே தேனுண்ட மயக்கத்தில் ஆழ்த்தியது தமிழ் மொழி. 


மொழிகளுக்கு உயிர் உண்டு.

உயிருள்ள அனைத்தையும் போல மொழிக்கும் பிறப்பு, வளரச்சி, முதிர்ச்சி உண்டு. மரணமும் உண்டு. அது, அந்த மொழியைப்பேசிய கடைசி மனிதனும் மறையும்போது மட்டுமே நிகழ்வது.

நம் தமிழ், செம்மொழி. இன்றுவரை வழக்கிலுள்ள ஒரு தொன்மையான மொழி. ஆனால் நம் தமிழ்த்தாய் வாழ்த்து இதன் "சீரிளமையை செயல்மறந்து வாழ்த்தச்"சொல்கிறது.


இது இளைய மொழியா? இளையோரும் எளிதாய் பயன்படுத்தும் மொழியா?


ஒரு மொழியின் எழுத்து தொகுப்புகளில் (உதாரணம்: ஆங்கிலம் - A to Z) பயன்பாட்டில் இல்லாத எந்த ஒரு எழுத்துக்கும் இடமில்லை.

ஆனால் நம் தமிழில்?

ஙகர வரிசை மற்றும் ஞகர வரிசையில் பயன்பாட்டில் இல்லாத எழுத்துக்கள் ஏராளம்!


ங, ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ 

இந்த பன்னிரன்டில் ங மற்றும் ஙே என இரண்டு மட்டுமே பயன்பாட்டில். அதிலும் ங என்பது மெய்யெழுத்தாய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது (சங்கு, ஓங்காரம்...).

ஙே - இராசேந்திரகுமார் என்கிற எழுத்தாளர் 'ஙே என்று விழித்தான்' என்று எழுதியபின்தான் மீளுயிர் பெற்றது.

ஞா, ஞெ என்கிற இரண்டு மட்டுமே ஞகர வரிசையில் பயன்பாட்டில் உள்ளவை:

ஞாலம், ஞாயிறு, ஞெகிழி என்பதாக.

இதிலும் ஞெகிழி இப்போதெல்லாம் நெகிழி என்றே அறியப்படுகிறது!


இவை போக கௌ, ஙௌ, சௌ வரிசையில் சொற்பமாய் பயன்படுத்தப்பட்ட கௌ(ரவம்), ரௌ(டி), ரௌ(த்திரம்), பௌதீகம் போன்றவற்றை கவுரவம், ரவுடி, ரவுத்திரம், பவுதீகம் என எழுத பழக்கியுள்ளோம் இப்போது!


கடந்த நூறாண்டுகளில் 'தேங்கிப்போன தமிழ் நதியை தூர் வாறி சீரமைக்கவேண்டும்' என குரல்கொடு்த்த ஒரே ஒருவரையும் அன்று அவர் முன்வைத்த மற்ற கொள்கைகளுக்காக இன்றும் செருப்பு மாலை அணிவித்தும் கருப்பு மை கொட்டியும் 'கொண்டாடும்' தமிழர்கள் அவர் ஏன் தூர் வாறச்சொன்னார் என்று சிந்திப்பதாய் தெரியவில்லை!



சங்கப்பாடல்களில் தமிழ் எழுத்துக்கள் அத்தனையும் பயன்படுத்தப்பட்டிருக்கும்தானே. அந்த சொற்களில் பல இன்று வழக்கில் இல்லாமல் போயிருந்தால்...அது மாறிப்போன வாழ்வியலையும் அந்த மாற்றத்திற்குப்பின் அந்த சொற்கள் / எழுத்துகள் காலாவதியானதையும்தானே இவை உணர்த்தமுடியும்? அப்படி நிகழ்ந்திருந்தால் பயன்ற்ற பழைய எழுத்துகளை ஒதுக்குதல்தானே முறை? (தேவைப்பட்ட ஹ, ஜ, ஷ, ஸ போன்ற எழுத்துக்களை புதிதாய் சேர்த்துக்கொண்டது போல?)


பழகு தமிழை தனியாய் பிரித்து அடிப்படைத்தமிழ் என்றும், இலக்கிய இலக்கணத்தமிழை உயர் தமிழ் 1, உயர் தமிழ் 2, உயர் தமிழ் 3 என கற்பித்தால் தமிழைக்கூட எளிதாகவும் தேவைக்காகவும் இன்னும் பலர் கற்க வாய்ப்பிருக்கிறதே!

உலகிலுள்ள ஏனைய செம்மொழிகளை எல்லாம் இப்படித்தான் கற்றுத்தருகிறார்கள்!

நான் எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணத்தில் கற்றுக்கொண்ட எண்சீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா பற்றி இன்றைய பள்ளி மாணவர்களிடம் சொன்னால், 'அட போப்பா! எனக்கு இதையே படிக்க வரலையே. I know no Tamil like this and I don't like to learn such' என தாண்டிப்போய்விடுவார்கள்!

#தமிழன்டா! #திராவிடன்டா! #தமிழன்னைடா! என சீரியசாய் சீறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கொஞ்சம் சீர்திருத்தவும் முயன்றால்... சீரிளமை குறையாது தமிழ்ப்பெண் இன்னும் பல மக்களை அவள்மீது மையலுறச்செய்வாள்!

அதன் பின் நாம் மெய்மறந்து வாழ்த்தலாம்.


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்