அந்த ஊர் போனதும் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் என்னென்ன தகவல்கள் வேண்டியிருக்கும்?
சுச்சூ, கக்கா போவதற்கான இடம் முதல், என்னென்ன காணலாம்? எங்கெங்கு காணலாம்? எந்த வாகனத்தில் போகமுடியும்? எப்போ? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? நல்ல தேநீர் / சிற்றுண்டி எங்கு கிடைக்கும்? நல்ல விடுதி எங்குள்ளது? நினைவுப்பரிசுகள் எந்த கடைகளில் நன்றாக இருக்கும்?
எத்தனை எத்தனை கேள்விகள்? எத்தனை பேரிடம் விசாரித்திருப்போம்? எவ்வளவு உறவுகளை / நட்புகளை புதுப்பித்திருப்போம்? எத்தனை புதிய மனிதர்களுடன் உரையாடியிருப்போம்? இவை எல்லாம் அல்லது இவை எதுவுமே இல்லாத நவயுக டிஜிடல் உதவும் பயண அனுபவங்கள்... மெய்யாலுமே experiential events தானா?!
டிஜிடல் துணைவருடன் உலகெங்கும் செல்லலாம், ஏற்கனவே பலரும் மென்று துப்பியதை நம்பி சென்று ஏமாறலாம் அல்லது அவர்களது வழிகாட்டுதல்தான் உச்ச அனுபவம் என்று அதற்குள்ளே முடங்கிக்கொண்டு படங்களெடுத்து ஊடக சமூகங்களில் பகிர்ந்து, லைக்ஸ் பல வந்தால் தம் பயணம் நற்பயணமென்றும் இல்லாவிட்டால் இல்லை என்றும் முடிவுசெய்து...தனியே தன்னந்தனியே என எங்கு சுற்றியும் மகிழ்வற்றிருப்பதுதான் experiential livingஆ?
இதற்கு பதில்கூட கூகுளாண்டவனத்தான் கேட்போமோ?!
அடுத்த பயணத்தில், உங்களது திட்டத்தில் இல்லவே இல்லாத ஒரு பெயர் தெரியாத சிற்றூர் சாலையில் சற்றே பயணம் செய்து, அங்கே கண்ணில் படும் மனிதரை விலங்குகளை மரங்களை பறவைகளை இன்ன பிற உயிர்களை 'நலமா?!' என்று கேட்டுத்தான் பார்ப்போமே!
நம் வாழ்வின் அடுத்த நொடியில் ஒளிந்திருக்கக்கூடிய ஆச்சரியங்கள் ஏராளம். கொஞ்சம் unplannedness ம் கொஞ்சம் curiosity ம்தான் இந்த ஆச்சர்யங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் தேவதைகளாம் 😃
நான் பெரியதோட்டத்தை கண்டடைந்ததும் இப்படித்தான்! (PeriyaThottam is a little farm with a Big Heart 😃)
அகல்யாவை சிவசு சந்தித்ததும் இப்படித்தானே?! வாழ்வு பூமியில் முளைத்ததும் கூட இப்படித்தானோ?
நான் அகல்யா சிவசு எல்லோரைம் மறந்து விட்டேன். இந்த கோரோனாவை என் நினைவாற்றலை தின்று விட்டது..எல்லாமே நினைவு படுத்தி கொள்ள வேண்டியுள்ளது....அகல்யா தேடி படித்து விட்டு அவர்களோடு பெரிய தோட்டம் காண வர வேண்டும்ங்க.
பதிலளிநீக்குமீண்டு வாருங்கள். அவசியம் வாருங்கள்!
நீக்குவாழ்வே ஒரு நெடும் பயணம்தானே. ஒரு சிலருக்கு மட்டும் இளைப்பாற ஓரிரு மணித்துளிகள் இடை வேளை கிட்டும். அவர்களைத்தான் புண்ணியம் செய்தவர்கள் என்று உலகம் சொல்லும். மற்றவர்கள் நிற்காது நற்கதியைத்தேடி பயணம் செய்ய வேண்டியவர்கள். இந்த பயணம் நம் இலக்கை அடையாளம் காணவும், அதை அடையவும் உதவுமேயானால் நல்லது.
பதிலளிநீக்குஎண்ணியர் எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின்.
Often the journey itself may be the purpose of life, not the destination...
நீக்கு