முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குப்பையிலே ஒரு விதை

They add beauty to even a waste bin! குப்பைக்கூடைக்கும் அழகு சேர்ப்பவை இயற்கையில் விளைந்தவை. What about us who are rapidly coverting Giving Earth into a Giant Waste Bin?! இந்த உலகை பெரிய குப்பைத்தொட்டியாக்கிக்கொண்டிருக்கும் நாமும் இயற்கையில் விளைந்ததுதானே. நாம் மட்டும் ஏன் இப்படி? Planting is the only way Up, from the pile of trash we heap on ourselves, to our salvation... விதையொன்று ஊன்றி, அது செடியாய், கொடியாய், மரமாய் வளர வளர அதை இறுகப்பற்றிக்கொண்டால் மட்டுமே தப்பிக்க இயலும்... அவை நாம் சொர்க்கம் செல்லும் பாலமாகவும் அமையும்!

எச்சம்

எச்சம் - என்ன ஒரு தமிழ் சொல்! உண்டது போக மீவது மிச்சம் என்றால், உண்டது செரித்தது போக வெளித்தள்ளுவது எச்சம். நம் உடல், தேவையில்லை என வெளித்தள்ளும் எச்சமும் உணவே, வேறு யாருக்கோ, பூமியில். பறவையின் எச்சம் கானகமாக விரியும். கானக எச்சம் பூவாய், காயாய், கனியாய் நமை வந்தடைய அவற்றை உண்டு நம் உடல் வெளித்தள்ளுவதும் எச்சமே. மனிதனும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்தில் அவனது எச்சமும் கானகமானது பழங்கதை. இலக்கணத்தில் எச்சம் என்பது முற்றுப்பெறாத சொல்லை குறிக்கிறது. ஒன்பது வாசலிட்டு என்புதோல் போர்த்த உடம்பும் ஒரு உயிரெச்சமும் மெய்யெச்சமும் சேர்ந்து செய்த உயிர் மெய் எச்சம்தானே! தமிழ்க்கடலின் சுவையென்னவோ திகட்டாத இனிப்பு மட்டுமே!

இந்த டீலக்ஸ் சூப்பரு!

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு படம் மட்டுமே தந்து, நீண்ட இடைவெளிக்குப்பின் இரண்டாவது பட டைட்டில் கார்டில் தியாகராஜன் குமாரராஜா பெயர்  போடும்போது தியேட்டர் அதிர உற்சாக குரல் எழுப்பிய இளையவர்கள், பட நாயகர்கள் அனைவருக்கும் அதே மரியாதை தந்து, 'தப்பான கூட்டத்தில படம் பாக்க மாட்டிகிட்டமோ, இந்த ரேஞ்சில கத்தினா ஒன்னுமே புரியாதே...' என்று பயமுறுத்தியவர்கள், அடுத்த சில நிமிடங்களில் கப் சிப்! அப்படி என்னதான் நடந்தது? கண் முன்னே விரியும் கதைகளும், காட்சிகளும் செய்த வித்தை அது! 'என்னடா நடக்குது இங்கே?! என வியப்போடு நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள், இடைவேளை வரை வெவ்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டு படத்தில் மூழ்கியாச்சி! நடைமுறை வாழ்வின் அபத்தங்களை, போலித்தனங்களை, வக்கிரங்களை, நம்பிக்கைகளை, பிம்பங்களை... உடைத்து எறிந்து, அதனுடனே நமது மனக்கட்டமைப்புகளையும் வெடி வைத்து தகர்த்திருக்கிறார். தியாக குமார ராஜா. அவரது பலம், அவற்றை உணர்ந்த நாமும் குதூகலமாய் அந்த உடைப்புக்களை ஏற்றுக்கொண்டு சிரித்தபடியே வெளிவருவதுதான்! A certificate முற்றிலுமாய் பொருந்தக்கூடிய ஒரே இந்திய சி...

ஈதல் இகழ்பட வாழ்தல்...

கொளுத்தும் வெயில். சிவப்பு சிக்னல் மாறக்காத்திருக்கும் நேரம். காரின் கண்ணாடிக்கதவைத்தட்டி தட்டி கை கூப்பி காசு கேட்கும் நடு வயது கடந்த பசித்த மனிதர்... என் ஆடை பைகள் எதிலும் பொடிச்சில்லறை இல்லை என்று உள்மனம் செய்தி வாசிக்க, 'பர்சுல பத்து ரூபா இருக்கலாம்' என புத்தி இன்டிகேட் செய்து, உடனே குழப்பியது 'நம்ம மெனக்கெட்டு பர்ச பாக்கெட்லேந்து உருவி தேடி, பத்து ரூபா நோட்டு இல்லன்னா என்ன பண்றது? எதிர்பார்க்கு அதிகமாகி பின்ன அவரு மனசு நோவுமே...' என் இக்கட்டை மனைவியிடம் சொல்ல, 'என் பர்சுல இருக்கு. எடுத்துத்தரேன்' என அவர் அவசரமாய் முயன்று எடுக்க, சிக்னல் பச்சை காட்ட, பின்னால் கார்கள் ஆரன் நிறுத்தாமல் அடிக்க, நான் அவசரமாய் கண்ணாடியை இறக்கி அவர் கரங்களில் பத்து ரூபாயை திணிக்க... கேட்டாரே ஒரு கேள்வி! 'எய்யா, பசியோட கும்பிட்டு நிக்குற ஆளுக்கு பசி நீக்க ஏதாச்சும் குடுக்க ஒனக்கு தோணல. எங்கம்மா மகமாயி எடுத்துக்குடுத்தா பாத்தியா யோசிக்காம பத்து ரூபாய. அவ நல்லா இருப்பாய்யா!'.... ஒரு நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 'நடு ரோடில சிக்னல்ல வ...

நேத்து...கவிதையில போச்சி யாரும் துணையில்லை...

நேத்து, கவிதையில போச்சி, யாரும் துணையில்லை... நேற்று உலக கவிதைகள் தினமாம்! விழியில் பதிந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு நல்ல எழுத்துக்கு மட்டுமே வாய்க்கும்; கவிதையோ, கதையோ, சொலவடையோ! லொடலொடவென பேசுபவரை பற்றி ஒரு நாட்டுப்புறக்கதை 'ஓலப்பாயில ஒண்ணுக்கிருந்தவன் மாதிரி' எனும்போது, கரிசல் கிராமத்தை கி. ரா வர்ணிக்கையில், 'இரவைப்பொத்தலிட்டன மாடுகளின் சூடான பெருமூச்சு' எனும்போது... கிடைக்கும் வாசிப்பனுபவம், உணர்வனுபவம்... வேற லெவல். நல்ல கவிதைகள், கவிதைகளில் மட்டும் ஒளிந்திருக்கவில்லை :-) குடத்தில் தண்ணீர் தளும்பத்தளும்ப முன்னே நடைபோடும் பெண்ணின் குடத்தில் தளும்பியது மனசு என்ற ஆத்மாநாமின் கவிதை போன்ற இன்னொன்றை இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறேன் தமிழில் (கல்யாண்ஜியின் 'இருந்து என்ன ஆகப்போகிறது?  இறந்துபார்க்கலாம். இறந்து என்ன ஆகப்போகிறது? இருந்து பார்க்கலாம்' is a close second). சிக்கனமான சொற்கட்டமைப்பில் வெடித்துச்சிதறும் உணர்வுகளை குவிப்பது ஒரு சிலருக்கு மட்டுமே வசப்படுகிறது... மானபங்கப்படுத்தப்பட்டு தரையில் அலங்கோலமாய் கிடக்கும்...

வேர்த்திரள்

வேர்த்திரள் காகமொன்று விதை உமிழ்ந்து விதைத்ததிந்த கானகம், வளர்ந்த நாளில் வந்த (பறவைக்)கூட்டம் வாழ்த்திடும், நூறு நூறு நூறு வேர்கள் முளைத்திடும். பறவையோடு சேர்ந்து வந்த வாலிருந்த வானரம், மரமிறங்கி வால்கழற்றி வாள்சுழற்றி மரங்கள் வெட்டும்போதெலாம், வீழ்ந்ததிங்கு அங்குமிங்கும் அங்குமிங்கும் எங்குமெங்கும் கானகம்... வீடிழந்த பறவைக்கூட்டம் விதைசுமந்து வேகமாய், இறகுவீசி காற்றிலேறி கடிதுசென்று தூரமாய், பெரும்பரப்பில் உயி'ரெச்ச'விதைகள் லட்சவிதைகள் தூவுமே. புதிய நிலத்தில் பழைய விதைகள்  புதிய வேர்கள் பதிய பதிய  உயிர் முளைத்து மரங்களிங்கு வளர்ந்திடும், விதையுதிர்த்த பறவைக்கூட்டம் மனமகிழ்ந்து தங்கிடும், மரமறுத்த மனிதக்கூட்டம் மீண்டும் மீண்டும் வெற்றியின்றி முயன்றபோதும் கானகங்கள் நீண்டிடும். வேர்த்திரளின் உயிர்முடிச்சு விதைவயிற்றில் விதைவயிற்றில் புதைந்ததறிந்த மனிதக்கரங்கள் ஆய்வகத்தில் மரபணுக்கள்  வெட்டியொட்டும் அவலம் கண்டும் பதைத்திடாது வேர்த்திரளும்  கனிவுடனே கனிவுடனே மனிதமூச்சு காத்திடும் இலைவழியே காய்வழியே கனிவழியே பகிர்...

நான்கு: பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி நான்கு

அடிமை இந்தியாவில் ஒரு கோடிக்குமேல் நீண்டிருந்த பட்டியல் சமூகங்கள், கால மாற்றங்கள் மற்றும் விடுதலை காலம் அருகில் வர வர தளர்த்தப்பட்ட அரசின் பிடி ஆகியவை காரணமாக சுருங்கத்தொடங்கியது. இந்தியா விடுதலை பெற்ற ஆண்டில் (1947) ஏறத்தாழ இரண்டரை லட்சம் பிறவிக்குற்றவாளிகள் இருந்ததாக ஆங்கில அரசு ஆவணங்கள் தந்து சென்றது. இந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட இவர்களது சுதந்திர தேசம் இவர்களுக்கு என்ன செய்தது?  குடியரசானவுடன் குற்ற பரம்பரை சட்டம் (Criminal Tribes Act) கலைக்கப்பட்டது, மறு வாழ்வாதாரம் பற்றிய தெளிவான திட்டமிடல், நிதியமைப்பு இன்றியே. (Mainstream எனப்படும் மகா சமுத்திரத்தில் இந்த தொல்குடி நதிகள் இயல்பாய் இணைந்து பயணிக்க வழிகள் செய்தபின்பு அவர்களை integrate செய்வது எளிதாயிருந்திருக்கும்...) குற்றங்கள் அலையலையாய் எழத்தொடங்கின. பதறிய அரசு இயந்திரம், Habitual Offenders Act என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. அதாவது, குற்ற பரம்பரை சட்டம் மீண்டும், சற்றே மாறுதலான வடிவில்.  குற்றங்களில் ஈடுபடுவோரின் சமூகத்தை பதிவு செய்த பட்டியல் சமூகங்கள் என்ற ஒன்று  (Notified tribes) ச...

சீரழியுதே சிவனில் பாதி!

பாலியல் வன்கொடுமைகள் பழகும் தேசமிது. கொடுமைகளுக்கு குறைவில்லாதவண்ணம் மாதம் மாறி மாறி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. சில அடிப்படை கேள்விகள், பதிலின்றியே இருக்கின்றன இன்றளவும். 1. வன்புணர்வுக்கு ஏன் மரண தண்டனை வழங்கக்கூடாது? Capital Punishment must be given only for the rarest of rare cases என்று வழக்கமான ஜல்லியடியை நிறுத்தி, கொஞ்சம் சிந்திப்போமே. மரணமே தண்டனை என்று விதிகள் கடுமையானால் மட்டுமே வன்புணர்வு குறையும். தானாகவே rarest of rare ஆகிவிடும். சட்டமும் முற்றிலும் பொருத்தமானதாகிவிடும். நம் அரசியல் கட்டமைப்பு ஏன் இவ்விதமாய் சிந்திக்க மறுக்கிறது? 2. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, Yes You Can! பாதிப்பை உதறி வெற்றிக்கொடி கட்டலாம், வாழ்வில் ஜெயிக்கலாம்! என பேட்ரனைசிங் தொனியிலேயே Social media வில் கருத்து அலைகள். ஏன் ஒருவருக்கு கூட அரசு இயந்திரத்தை உத்வேகப்படுத்தியோ, காவல், நீதி துறைகளுக்கு வேண்டுகோள் விடுத்தோ கண்டனம் தெரிவித்தோ பப்ளிக் இன்ட்டரஸ்ட் செய்திகள் அனுப்பத்தோன்றவில்லை? உச்ச நீதி மன்றத்தின் நீதியரசர்கள் ஏன் இவற்றை Suo Motu Cognisance என்கிற வகையில் அவர்களாகவே அ...

காதற்ற ஊசியும்...

அலெக்சாண்ட மாவீரன் உயிரிழக்கும் தருணத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தானாம்; என் கைகள் வெளியே தெரியும்படி என்னை சுமந்துசெல்லுங்கள் என. எகிப்திய அரச கடவுள்கள் இறந்து புதைக்கப்படுகையில் ஏராளமான செல்வங்களையும் சேர்த்தே புதைக்க உத்தரவிட்டனராம்; போகிற இடத்திலயும் செல்வாக்காய் இருக்கும் பேராவலில். உலகாண்ட பலர் அவர்கள் வாழும் நாளில் சிந்திக்க மறந்ததை, மகாசாண்டரு தான் இறக்கையில் கண்டுபிடித்த பேருண்மையை, நம் பட்டினத்தார் பையன் எவ்வளவு சுருக்கமா சொல்லிட்டு போய்ட்டாரு! "ஊசியில் கூட, காதற்ற ஊசிதான் வேணும்னு நெனச்சி ட்ரை பண்ணாலும் முடியாது!" என்றார். ஏன் காதற்ற ஊசி? இறந்த மனிதரை புதைக்கையில், இருக்கும் மனிதர்கள் (உறவினரோ, புதைப்பவரோ) தங்களுக்குப்பயனுள்ள எதையும் சேர்த்துப்புதைக்க அவர்களது அறிவோ, புதைதொழில் செய்பவரின் தேவைகளோ இடம் தராது. கண்டிப்பாய் களவாடப்படும். இதுவே காது உடைந்த ஊசியென்றால் எவரும் சீந்தார். ஆனாலும் தந்தையே, இதைக்கூட நீ 'கொண்டு செல்ல' முடியாது என பட்டினத்தார் மகன் தந்தைக்கு விட்டுச்சென்ற ஓலை இந்த உலகின் முதல் பெர்சனல் ட்வீட் (tweet)! ; சித்தன...

மூன்று: "பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி மூன்று

காவல் கோட்டம் வரலாறு சார்ந்த கதை. பட்டியல் சமூகங்களின் வலி மிகுந்த வாழ்வின் பதிவு. நிஜத்தில் ரத்தமும் சதையுமாய் இந்த பூமியின் பட்டியல் சமூகத்திலிருந்து வெடித்துக்கிளம்பி ஆங்கில ஆதிக்கத்தை உலுக்கிய ஒரு தனிமனிதன் பற்றி நம்மில் எத்தனை பேர் படித்திருப்போம்? பிர்சா முண்டா! பூமியின் தந்தை! பூமியை நேசித்தவன், காந்திக்கு ஆறு வருடம் பின்னால் பிறந்தவன்... அன்றைய அடக்குமுறை சூழலில் பழங்குடியினர் பலர் தம் அடையாளங்களை மறைத்து பொய்யான பெயர்களில், வெவ்வேறு சாதிப்பட்டியல்களுள் எப்படியாவது இடம் பிடித்தால்தான் அடிப்படை தேவைகள் நிறைவேறும், சமுதாயம் மதிக்கும் என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்... இவனது சமூகமும் அவ்வாறே. "நல்ல படிப்பு படிக்கணுமா? கிறிஸ்துவனாய் மாறு" என மத மாற்றம் செய்யப்பட்டு கான்வென்டில் கல்வி பயின்ற ஆதிவாசி சிறுவன். இன மரியாதையை விற்று கல்வி வேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது பதின்வயதுகூட தாண்டவில்லை அவன்; வெளியேறினான், தன் பூர்வீகம் தேடி, கானகம் நோக்கி. பிரிட்டிஷ் அரசு, உள்ளூர் நில முதலாளிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் மூலம் கானகங்களை வளைத்து விளை...

இரண்டு : "பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி இரண்டு.

சுக வாழ்வில் திளைத்திருக்கும் நம்மை திடீரென அதிகாரம் நம் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றி கொட்டடிக்குள் அடைத்து இதை செய் / அதை செய்யாதே என கை முறுக்கினால் என்ன செய்வோம்? பணிந்து போவோம், பெரும்பாலும். இப்படி வடக்கில் தொடங்கிய வன வெளியேற்றம், தேசத்தில் காடுகள் உள்ள இடங்களிலெல்லாம் நடைமுறையில் வந்து, Criminal Tribes Act தேசிய சட்டமானது 1870களில் (சிப்பாய் கலகம் 1857 இல். இதில் உயிரிழந்தோரில் அநேகர் பழங்குடி வழிவந்தவராக இருக்கலாம்...சமூகவாரியான புள்ளி விபரங்கள் இல்லை. ஏன், இறந்த இந்தியர்களின் எண்ணிக்கையில்கூட தகராறு; பத்து லட்சத்திலிருந்நு ஒரு கோடி வரையாம்!). சிப்பாய் கலகத்தின் பாதிப்பு அடுத்த நாற்பது ஆண்டுகள் நீடித்ததாம். இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் என இருப்பவனும் கணக்கு பார்க்க மறந்துபோக, பணம் மற்றும் அதிகார சலுகைகள் உள்ளவர் வசிக்குமிடங்களிலெல்லாம் இந்த தொல்குடி சமூகங்கள் வந்தேறிகளாக (ஆனாலும் அடிமைகளக) ஆக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட வாழ்வு. உணவு, நீர், மருத்துவம், கல்வி எல்லாம் எட்டாக்கனியாகிப்போச்சி. இனப்பெருக்கம் மட்டும் எப்படியோ நடக்க, பட்டிய...

பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி ஒன்று

எச்சரிக்கை 1: இந்த தேசத்தின் இறையாண்மையை நேசிப்பவர்கள் மட்டும் படிக்கவும். எச்சரிக்கை 2 : இது ஒரு குறுந்தொடர். எச்சரிக்கை 3: உங்கள் ஆன்மாவை இத்தொடர் உறுதியாய் புரட்டிப்போடும்! ############ 1800களில் கிழக்கிந்திய கம்பெனி தேயிலை வளர்க்க நம் காடுகளை வெட்டி வீழ்த்தத்தொடங்கியபோது தொடங்கிய யுத்தம் ஒன்று இன்றளவும் தொடர்கிறது... காடு, தொல்குடியினரின் வீடு. காடு, இவர்களது வாழ்வாதாரம். கோண்டு, குஜ்ஜர், என வடக்கில் தொடங்கி இருளர், தோடர் என தெற்குவரை, இவர்களின் வீடுகள் ஏராளம். ஐம்பது ஆண்டுகளில் இவர்கள் அனைவரது வீடுகளிருந்த காடுகளும் தேயிலை தோட்டங்களாக மாறிப்போக, கலவரங்கள் வெடித்து, பரவி, அடங்கி, பரவி...  வீடிழந்த தொல்குடியில், காடு தாண்டி வேறு ஒன்றும் அறியாதவர், பலர் தேயிலை தோட்ட கூலி / அடிமை / கொத்தடிமைகளாக மாற, இன்னும் பலர் காட்டுக்கும் நாட்டுக்கும் இடையிலான வரையப்படாத எல்லைகளில் வழிப்பறிக்கொள்ளை முதல் மூலிகை, தேன், சுள்ளி விற்று வயிறு வளர்க்க, கம்பெனி பறித்த தேயிலைகள் பத்திரமாய் சந்தைக்கு போவது கடினமாச்சி (இவர்கள் வழியே தேயிலை கள்ள சந்தைக்குப்போகிறதாம...