முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான்கு: பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி நான்கு


அடிமை இந்தியாவில் ஒரு கோடிக்குமேல் நீண்டிருந்த பட்டியல் சமூகங்கள், கால மாற்றங்கள் மற்றும் விடுதலை காலம் அருகில் வர வர தளர்த்தப்பட்ட அரசின் பிடி ஆகியவை காரணமாக சுருங்கத்தொடங்கியது.

இந்தியா விடுதலை பெற்ற ஆண்டில் (1947) ஏறத்தாழ இரண்டரை லட்சம் பிறவிக்குற்றவாளிகள் இருந்ததாக ஆங்கில அரசு ஆவணங்கள் தந்து சென்றது.

இந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட இவர்களது சுதந்திர தேசம் இவர்களுக்கு என்ன செய்தது? 

குடியரசானவுடன் குற்ற பரம்பரை சட்டம் (Criminal Tribes Act) கலைக்கப்பட்டது, மறு வாழ்வாதாரம் பற்றிய தெளிவான திட்டமிடல், நிதியமைப்பு இன்றியே.

(Mainstream எனப்படும் மகா சமுத்திரத்தில் இந்த தொல்குடி நதிகள் இயல்பாய் இணைந்து பயணிக்க வழிகள் செய்தபின்பு அவர்களை integrate செய்வது எளிதாயிருந்திருக்கும்...)

குற்றங்கள் அலையலையாய் எழத்தொடங்கின.

பதறிய அரசு இயந்திரம், Habitual Offenders Act என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. அதாவது, குற்ற பரம்பரை சட்டம் மீண்டும், சற்றே மாறுதலான வடிவில். 

குற்றங்களில் ஈடுபடுவோரின் சமூகத்தை பதிவு செய்த பட்டியல் சமூகங்கள் என்ற ஒன்று  (Notified tribes) சற்றே நிறம் மாறி Denotified Tribes என்று ஆனது. 

வண்ணங்களை மாற்றிக்கொண்டால் மட்டும் எண்ணங்கள் மாறி விடுமா என்ன?

Notified tribes என்ற பட்டியலுக்கும், Denotified Tribes என்ற பட்டியலுக்கும் இடையில் நம் தொல்குடியினரின் வாழ்வு இன்றுவரை ஊசலாடிக்கொண்டிருக்கிறது. முன்னது ஆகாது, பின்னது ஆகும். ஆனால் முன்னதிலிருந்து பின்னதுக்கு மாற இன்றுவரை போராட்டங்களே இவர்களுக்கு துணை நிற்கிறது.

பர்மாவிலிருந்து கடந்த ஆண்டுகளில் குற்றுயிராய் உதைத்து துரத்தப்பட்ட லட்சக்கணக்கான Rohingkya சமூக மக்களும் நம் கானக தொல்குடிகள்தான்.

மலக்குழிகளுள் தினம் தினம் மூச்சு முட்ட புதைந்துபோகும் நம் வால்மீகி சமூக மக்களும் நம் தொல்குடிகள்தான்.

நமது நகர கடைவீதிகளில் சாம்பிராணி புகை போட்டு காசு கேட்கும் சமூக மக்களும் நம் தொல்குடிகள்தான்.

அமெரிக்க சிவப்பிந்தியர், மெக்சிகோவின் பழங்குடி இனங்கள், தென்னமெரிக்க காடுகளின் தொல்குடியினர், ஆஸ்திரேலியாவின் அணங்கு தொல்குடியினர் (அணங்கு என்பது தமிழ் சொல்!!!) என உலகெங்கும் இன்றும் உயிரை கைகளில் சுமந்துகொண்டு இவர்கள் அனைவரும் போராடிக்கொண்டிருப்பது எதற்காக தெரியுமா? பதினாறு வழி சாலைகளுக்காகவோ, பல பள மருத்துவமனைகளுக்காகவோ அல்ல, உயிர்வாழத்தேவையான அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமே; they are all fighting for their right to live!

நம் நாட்டுக்கு வருவோம். நாம் நம் தொல்குடிகளுக்கு கடந்த எழுபத்தி இரண்டு ஆண்டுகளில் என்ன செய்தோம்?

அவர்களது வாழ்விடங்களை ஆக்கிரமித்தோம், வணிகம் பெருக்கினோம்.

கானக நிலங்களில் தேவைக்கு மட்டும் விளைவித்து நோயற்று வாழ்ந்தவர்களை, நம் தேவைகளுக்காகவும் (சந்தை சார்ந்த விளைபொருட்கள்) ஆசைகளுக்காவும் (தேடிச்சேர்த்த புற்றை கறைக்க,  வழுக்கைத்தலையில் முடி வளர, நள்ளிரவிலும் குதிரை சக்தி வேண்டுமென... மூலிகைகள் மூலிகைகள் மூலிகைகள்) கெடுத்தோம். 

காடுகளில் இருந்து துரத்தினோம், இன்றும் பதினெட்டு லட்சம் தொல்குடியினரை நம் காடுகளில் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் வழியே துரத்திக்கொண்டிருக்கிறோம்.

குள்ள நரிக்கூட்டத்திற்கு மத்தியில் அவிழ்த்து விடப்பட்ட வெள்ளாடுகளாய் இவர்கள். நாம் தின்றது போக எஞ்சியவரும்
நம் சமுதாயத்தின் விளிம்புகளில் மட்டுமே தொங்கிக்கொண்டு... (Living on the edge, marginalised and such words are grossly inadequate...).

ஒரு கானகத்திற்குள் வணிக பொருளாதாரம் நுழையும்போது என்ன நடக்கிறது தெரியுமா?

தொல்குடியினர் தமக்கு வலு இருக்கும்வரையில் போராடுகிறார்கள். 

வணிகம், அரசு இயந்திரத்தை உள்நுழைத்து இவர்களை நசுக்குகிறது. இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட தொல்குடி சமூக மக்கள் படும் பாடு அறிவோமா நாம்? அறிந்தால் உறங்க இயலாது அதன்பின்.

சந்தன காடுகளில் வணிகம் நுழைந்தபோது என்ன ஆனது? 

நியமகிரி தாதுமலை காடுகளில் வணிகம் நுழைந்தபோது என்ன ஆனது? 

செவ்விந்திய தொல்குடி நிலங்களில் வணிகம் நுழைந்தபோது என்ன ஆனது?

ஆஸ்திரேலியாவில் வணிகம் நுழைந்தபோது என்ன ஆனது? 
Rabbit Fencing எனும் தடுப்பு வலை எதனால் வந்தது?
ஆப்பிரிக்க காடுகளில் வணிகம் நுழைந்தபோது என்ன ஆனது? ஆப்பிரிக்க தொல்குடியினர் அமெரிக்க கறுப்பின அடிமைகளாக ஆனதெப்படி?

பரம்பு மலை காடுகளில் வணிகம் நுழைந்தபோது என்ன ஆனது?

இளகிய மனம் கொண்டவர்கள் சு. வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' படித்துப்பாருங்கள்.

திட மனது படைத்தவர்கள் மட்டும் ச. பாலமுருகனின் 'சோளகர் தொட்டி' படித்துப்பாருங்கள். சத்தியமங்கல வனப்பகுதியில் சந்தன வணிகத்தால் வேட்டையாடப்பட்ட தொல்குடியிருப்பு சோளகர் தொட்டி. வேட்டையின் அழிக்க முடியாத வடுக்களை சுமந்துகொண்டு அந்த சமூகம் இன்றும் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறது....

நாம் தின வாழ்வில் கடந்துபோகும் பூம்பூம் மாடு மக்களும், கழைக்கூத்தாடிகளும், குறிசொல்லிகளும் நம் தொல்குடியினரே..

இந்த பாழாய்ப்போன தேசம், இவர்களது தேசம் இவர்களுக்கு என்ன செய்தது?

பசிக்கு ஒரு பாக்கெட் அரிசியை கடையொன்றிலிருந்து எடுத்த என் உறவினன், நம் உறவினன் மதுவை கட்டிவைத்து குருதி ஒழுக அடித்தது, Selfie எடுத்து பகிர்ந்தது. அவனது ஆன்மா சிதைந்தபோது கொடி பிடித்து போராடியது, பின்பு மறந்து நகர்ந்தது.


முற்றும்.


கருத்துகள்

  1. சினம், சினம், சினம் எங்கும் எப்பாேதும்!
    செல்லிடத்து சினம் காக்க அல்லிடத்து காக்கின் என் காவாக்கால் என்.
    தாெல் தாத்தன் திருவள்ளுவன் சாெல்லிச்சென்றது.இன்றும் செல்லக்கூடியதே:மதிப்பிழந்து விடவில்லை. இருப்பினும் அல்லிடத்து சினம் காப்பது நாளும் நலம் சேர்க்கும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :-)

      ரௌத்திரம் பழகச்சொன்னவர ஃபாலோ பண்ணும்போதுதான் புரிந்தது ரௌத்திரத்தின் உச்சம் ஒத்துழையாமை என்பது! அதை நோக்கிய பயணத்தின் வெளிப்பாடே இது :-)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...