கொளுத்தும் வெயில்.
சிவப்பு சிக்னல் மாறக்காத்திருக்கும் நேரம்.
காரின் கண்ணாடிக்கதவைத்தட்டி தட்டி கை கூப்பி காசு கேட்கும் நடு வயது கடந்த பசித்த மனிதர்...
என் ஆடை பைகள் எதிலும் பொடிச்சில்லறை இல்லை என்று உள்மனம் செய்தி வாசிக்க, 'பர்சுல பத்து ரூபா இருக்கலாம்' என புத்தி இன்டிகேட் செய்து, உடனே குழப்பியது 'நம்ம மெனக்கெட்டு பர்ச பாக்கெட்லேந்து உருவி தேடி, பத்து ரூபா நோட்டு இல்லன்னா என்ன பண்றது? எதிர்பார்க்கு அதிகமாகி பின்ன அவரு மனசு நோவுமே...'
என் இக்கட்டை மனைவியிடம் சொல்ல, 'என் பர்சுல இருக்கு. எடுத்துத்தரேன்' என அவர் அவசரமாய் முயன்று எடுக்க, சிக்னல் பச்சை காட்ட, பின்னால் கார்கள் ஆரன் நிறுத்தாமல் அடிக்க, நான் அவசரமாய் கண்ணாடியை இறக்கி அவர் கரங்களில் பத்து ரூபாயை திணிக்க... கேட்டாரே ஒரு கேள்வி!
'எய்யா, பசியோட கும்பிட்டு நிக்குற ஆளுக்கு பசி நீக்க ஏதாச்சும் குடுக்க ஒனக்கு தோணல. எங்கம்மா மகமாயி எடுத்துக்குடுத்தா பாத்தியா யோசிக்காம பத்து ரூபாய. அவ நல்லா இருப்பாய்யா!'....
ஒரு நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
'நடு ரோடில சிக்னல்ல வண்டிய நிறுத்தி எறங்கி வானத்தைப்பார்க்க அப்டி என்ன பைத்தியம் மாதிரி கத்தல்?...ஆண்டவா ஏன்டா இப்படி பண்றே??ன்னு?!. அந்தாளுக்கு வாய் கொஞ்சம் நீளம்தான். அதுக்காக இப்படியா???!'
சொல்லுங்க ந்யாயமாரே, நான் செஞ்சது தப்பா?
தப்புதேன்!
பதிலளிநீக்கு