முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த டீலக்ஸ் சூப்பரு!


பல வருடங்களுக்கு முன்னர் ஒரு படம் மட்டுமே தந்து, நீண்ட இடைவெளிக்குப்பின் இரண்டாவது பட டைட்டில் கார்டில் தியாகராஜன் குமாரராஜா பெயர்  போடும்போது தியேட்டர் அதிர உற்சாக குரல் எழுப்பிய இளையவர்கள், பட நாயகர்கள் அனைவருக்கும் அதே மரியாதை தந்து, 'தப்பான கூட்டத்தில படம் பாக்க மாட்டிகிட்டமோ, இந்த ரேஞ்சில கத்தினா ஒன்னுமே புரியாதே...' என்று பயமுறுத்தியவர்கள், அடுத்த சில நிமிடங்களில் கப் சிப்!

அப்படி என்னதான் நடந்தது?

கண் முன்னே விரியும் கதைகளும், காட்சிகளும் செய்த வித்தை அது! 'என்னடா நடக்குது இங்கே?! என வியப்போடு நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள், இடைவேளை வரை வெவ்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டு படத்தில் மூழ்கியாச்சி!

நடைமுறை வாழ்வின் அபத்தங்களை, போலித்தனங்களை, வக்கிரங்களை, நம்பிக்கைகளை, பிம்பங்களை... உடைத்து எறிந்து, அதனுடனே நமது மனக்கட்டமைப்புகளையும் வெடி வைத்து தகர்த்திருக்கிறார். தியாக குமார ராஜா. அவரது பலம், அவற்றை உணர்ந்த நாமும் குதூகலமாய் அந்த உடைப்புக்களை ஏற்றுக்கொண்டு சிரித்தபடியே வெளிவருவதுதான்!

A certificate முற்றிலுமாய் பொருந்தக்கூடிய ஒரே இந்திய சினிமா, இது, இது மட்டுமே!

இன்டெர்வல் தாண்டி குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகம், சேதமும், அதிலிருந்து மீளும் மனிதமும் அதிகம்!

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், பகவதி பெருமாள் - இவர்களின் நடிப்பு... அரக்கத்தனம்! And when some of their characters collide, it burns the screen...and our conscience too!

சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, காயத்ரியின் சிறு பையன் - இவர்களது கேரக்டர்கள் மீதான நம் எதிர்பார்ப்பை முற்றிலும் கலைத்துப்போட்டு விளையாடி இருக்கிறார்கள், Awesome! அதிலும் அந்த சிறுவனின் (தன் தகப்பனுடனான) க்ளைமாக்ஸ் உரையாடல்... முகத்தில் அறைந்த 'குழந்தை உலக மதிப்பீடு' ப்ளஸ், பாலியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவருக்கான மயிலிறகு தீர்வு! நடைமுறை தீர்வு, நிலையான தீர்வு, Wow!

விடலை குழு, அவர்களது predicaments, நம்பியார் படம் பார்ப்பது ஒரு நாள் தள்ளிப்போகிறதே என கவலைப்படும் தாதா, அவரிடம் செருப்படி வாங்காது தப்பிக்க முயலும் விடலையின் கொலை கொலையா முந்திரிக்கா ஆக்ட், அதற்கு யுவனின் இசை - வேற லெவல்; Good Fellas படத்தின் Joe Pesci, Robert De Nero உணவக சிப்பந்தி காட்சிக்கு ஒப்பிடக்கூடிய அளவு, iconic! (இந்த காட்சிக்கு மேலும் வண்ணம் சேர்க்க, தலைகீழாய் கயிற்றில் தொங்கும் விடலையின் டி சர்ட்டில் நேராக தோன்றும் தமிழ் சொல் 'பக்' !!!!)

கெட்ட வார்த்தை, கெட்ட செயல் அபச்சாரம் அபச்சாரம் என சொல்லிக்கொண்டு நாமே நிகழ்த்தும் முரண்களை இவர் கையாண்டிருக்கும் விதம் மிகச்சிறப்பு!

படம் முடியும் முன்னரே டைரக்டரிடமும், அழைத்து வந்த பேத்தி/மகன்/மகள்/நட்பு/உறவுகளிடம் சினந்து 'என்ன மாதிரியான படத்துக்கு அழச்சிட்டு வந்திருக்கற?' என வெளியேறினர் சிலர். இதுவும் படத்தின் வெற்றிதான்!

படம் முழுவதும் வழியும் வண்ணங்கள் (fantastic tones in every painted surface), சுனாமி ஆண்டவர், அவர் மீதான நம்பிக்கை, சுரங்க நடைபாதை பாவ மன்னிப்பு, சில்பா பெர்லினை கடித்ததை தன் மகனிடம் பகிர்வது என... நம்மை உணரச்சிக்குவியலில் முக்கி எடுத்து, காயவைத்து, ஐ ஆம் எ டிஸ்கோ டான்சர் என ஆடவைத்து வெளியில் அனுப்புகிறார். அது மட்டுமல்ல, சினிமாவின் அடிப்படை விதிகளையும் டைனமைட் வைத்து தகர்த்து, இந்திய சினிமாவின் இலக்கணத்தையும் அடையாளத்தையும் உன்னதமாய் மாற்றி எழுதிய திரு தியாக குமார ராஜா, இன்னும் பத்தாண்டுகள் கழித்துதான் நீங்கள் அடுத்த படம் தருவேன் என்றாலும் விசிலடித்து கொண்டாட பலர் காத்திருக்கிறோம்! (அப்போதாவது சக மனிதர்கள் மீதான, சமூக வழக்கங்கள், பிம்பங்கள் மீதான நமது மதிப்பீடுகள் நல்வகையில் மாறியிருக்க வேண்டும் என சுனாமி ஆண்டவரை வேண்டுகிறேன்!)

Go wAtch Super Deluxe TodAy! I Am still grooving to 'I Am a Disco DAncer' 😀😀😀 don't reAd Any review or even tAlk to folks who AlreAdy wAtched!!
Fuck You teAm!!!!, You Are Awesome!!!!!!!
IndiAn cinemA will never be the sAme AgAin!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்