சுக வாழ்வில் திளைத்திருக்கும் நம்மை திடீரென அதிகாரம் நம் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றி கொட்டடிக்குள் அடைத்து இதை செய் / அதை செய்யாதே என கை முறுக்கினால் என்ன செய்வோம்?
பணிந்து போவோம், பெரும்பாலும்.
இப்படி வடக்கில் தொடங்கிய வன வெளியேற்றம், தேசத்தில் காடுகள் உள்ள இடங்களிலெல்லாம் நடைமுறையில் வந்து, Criminal Tribes Act தேசிய சட்டமானது 1870களில் (சிப்பாய் கலகம் 1857 இல். இதில் உயிரிழந்தோரில் அநேகர் பழங்குடி வழிவந்தவராக இருக்கலாம்...சமூகவாரியான புள்ளி விபரங்கள் இல்லை. ஏன், இறந்த இந்தியர்களின் எண்ணிக்கையில்கூட தகராறு; பத்து லட்சத்திலிருந்நு ஒரு கோடி வரையாம்!).
சிப்பாய் கலகத்தின் பாதிப்பு அடுத்த நாற்பது ஆண்டுகள் நீடித்ததாம். இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் என இருப்பவனும் கணக்கு பார்க்க மறந்துபோக, பணம் மற்றும் அதிகார சலுகைகள் உள்ளவர் வசிக்குமிடங்களிலெல்லாம் இந்த தொல்குடி சமூகங்கள் வந்தேறிகளாக (ஆனாலும் அடிமைகளக) ஆக்கப்பட்டனர்.
அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட வாழ்வு. உணவு, நீர், மருத்துவம், கல்வி எல்லாம் எட்டாக்கனியாகிப்போச்சி. இனப்பெருக்கம் மட்டும் எப்படியோ நடக்க, பட்டியலின் நீளம் கூடிக்கொண்டே போனது; பிறந்த குழந்தைகள் அனைவரும் பிறப்புரிமையால் குற்றவாளியாக்கப்பட்டதால்.
பல தொழில் முயன்றும் சுற்றியிருக்கும் கயவாளி சமுதாயம் புறக்கணிக்க, களவு செய்து பிழைப்பது மட்டுமே அவர்களுக்கு வாழ உதவி செய்தது. இந்த வாழ்வியலின் மிகப்பெரிய ஆச்சரியம், இவர்களது களவு தேவைக்காக மட்டுமே இருந்தது. இதை உணர்ந்த நாட்டார் கிராமங்கள் பல, இவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை அனுப்பி களவிலிருந்து தப்பிப்பதும் நடந்தது.
இவர்களை தம் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் பகை தீர்க்கவும்கூட இவர் களை சுற்றியிருந்த இதே சமுதாயம் பயன்படுத்தி உதறவும் தயங்கவில்லை.
அரவான் என்றொரு திரைப்படம், வசந்தபாலன் இயக்கியது. நவயுக நாயகன் வேள்பாரி எழுதிய சு. வெங்கடேசனின் சாகித்ய விருது பெற்ற காவல் கோட்டம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்.
இது பேசியதும் இவர்களது வாழ்வியல்பற்றிதான்.
அரவான் என்றொரு திரைப்படம், வசந்தபாலன் இயக்கியது. நவயுக நாயகன் வேள்பாரி எழுதிய சு. வெங்கடேசனின் சாகித்ய விருது பெற்ற காவல் கோட்டம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்.
இது பேசியதும் இவர்களது வாழ்வியல்பற்றிதான்.
இது வரலாறு சார்ந்த கதை. நிஜத்தில் ரத்தமும் சதையுமாய் இந்த பட்டியல் சமூகத்திலிருந்து வெடித்துக்கிளம்பி ஆங்கில ஆதிக்கத்தை உலுக்கிய ஒரு தனிமனிதன் பற்றி நம்மில் எத்தனை பேர் படித்திருப்போம்?
தேசத்தந்தை பற்றி சகலமும் அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு 'பூமியின் தந்தை'யை தெரியும்?
அறிமுகம் செய்கிறேன் வாருங்கள்!
தொடரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக