அலெக்சாண்ட மாவீரன் உயிரிழக்கும் தருணத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தானாம்; என் கைகள் வெளியே தெரியும்படி என்னை சுமந்துசெல்லுங்கள் என.
எகிப்திய அரச கடவுள்கள் இறந்து புதைக்கப்படுகையில் ஏராளமான செல்வங்களையும் சேர்த்தே புதைக்க உத்தரவிட்டனராம்; போகிற இடத்திலயும் செல்வாக்காய் இருக்கும் பேராவலில்.
உலகாண்ட பலர் அவர்கள் வாழும் நாளில் சிந்திக்க மறந்ததை, மகாசாண்டரு தான் இறக்கையில் கண்டுபிடித்த பேருண்மையை, நம் பட்டினத்தார் பையன் எவ்வளவு சுருக்கமா சொல்லிட்டு போய்ட்டாரு!
"ஊசியில் கூட, காதற்ற ஊசிதான் வேணும்னு நெனச்சி ட்ரை பண்ணாலும் முடியாது!" என்றார்.
ஏன் காதற்ற ஊசி?
இறந்த மனிதரை புதைக்கையில், இருக்கும் மனிதர்கள் (உறவினரோ, புதைப்பவரோ) தங்களுக்குப்பயனுள்ள எதையும் சேர்த்துப்புதைக்க அவர்களது அறிவோ, புதைதொழில் செய்பவரின் தேவைகளோ இடம் தராது. கண்டிப்பாய் களவாடப்படும்.
இதுவே காது உடைந்த ஊசியென்றால் எவரும் சீந்தார். ஆனாலும் தந்தையே, இதைக்கூட நீ 'கொண்டு செல்ல' முடியாது என பட்டினத்தார் மகன் தந்தைக்கு விட்டுச்சென்ற ஓலை இந்த உலகின் முதல் பெர்சனல் ட்வீட் (tweet)! ; சித்தன் பக்தனுக்கு முக்தி தந்த ஓலை...
(வள்ளுவர் ட்வீட்டெல்லாம் broadcast வகை :-)
நாமெல்லோரும் வழக்கம்போல திருமஞ்சணம், ப்ரதோஷம் என ஸ்பெஷல் கௌண்டர்கள் வழியே நம் கடவுள்களை என்கவுண்டர் செய்து கேட்பதெல்லாம் காதற்ற ஊசியா என்ன?
பெரிதினும் பெரிது கேள்னு இன்னொருத்தனும் நம்மள பத்தி தெரியாம எழுதிட்டு போய்ட்டான்... கேப்பமுல்ல!
ஊசின்னு ஆரம்பிச்சி இப்படி குத்திட்டானேன்னு அங்கலாய்ப்பவர்களுக்கு மட்டும்; ஊசியோட வேலையே அதானே! சித்தன் வாக்கு ஊசி வழியே நன்கு இறங்குமென்றுதான் அவன் தேர்ந்தெடுத்து எழுதினான் போல!
கருத்துகள்
கருத்துரையிடுக