எச்சம் - என்ன ஒரு தமிழ் சொல்!
உண்டது போக மீவது மிச்சம் என்றால், உண்டது செரித்தது போக வெளித்தள்ளுவது எச்சம்.
நம் உடல், தேவையில்லை என வெளித்தள்ளும் எச்சமும் உணவே, வேறு யாருக்கோ, பூமியில்.
பறவையின் எச்சம் கானகமாக விரியும்.
கானக எச்சம் பூவாய், காயாய், கனியாய் நமை வந்தடைய அவற்றை உண்டு நம் உடல் வெளித்தள்ளுவதும் எச்சமே. மனிதனும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்தில் அவனது எச்சமும் கானகமானது பழங்கதை.
இலக்கணத்தில் எச்சம் என்பது முற்றுப்பெறாத சொல்லை குறிக்கிறது.
ஒன்பது வாசலிட்டு
என்புதோல் போர்த்த
உடம்பும் ஒரு உயிரெச்சமும் மெய்யெச்சமும் சேர்ந்து செய்த உயிர் மெய் எச்சம்தானே!
தமிழ்க்கடலின் சுவையென்னவோ திகட்டாத இனிப்பு மட்டுமே!
கருத்துகள்
கருத்துரையிடுக