பாலியல் வன்கொடுமைகள் பழகும் தேசமிது. கொடுமைகளுக்கு குறைவில்லாதவண்ணம் மாதம் மாறி மாறி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
சில அடிப்படை கேள்விகள், பதிலின்றியே இருக்கின்றன இன்றளவும்.
1. வன்புணர்வுக்கு ஏன் மரண தண்டனை வழங்கக்கூடாது? Capital Punishment must be given only for the rarest of rare cases என்று வழக்கமான ஜல்லியடியை நிறுத்தி, கொஞ்சம் சிந்திப்போமே. மரணமே தண்டனை என்று விதிகள் கடுமையானால் மட்டுமே வன்புணர்வு குறையும். தானாகவே rarest of rare ஆகிவிடும். சட்டமும் முற்றிலும் பொருத்தமானதாகிவிடும். நம் அரசியல் கட்டமைப்பு ஏன் இவ்விதமாய் சிந்திக்க மறுக்கிறது?
2. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, Yes You Can! பாதிப்பை உதறி வெற்றிக்கொடி கட்டலாம், வாழ்வில் ஜெயிக்கலாம்! என பேட்ரனைசிங் தொனியிலேயே Social media வில் கருத்து அலைகள். ஏன் ஒருவருக்கு கூட அரசு இயந்திரத்தை உத்வேகப்படுத்தியோ, காவல், நீதி துறைகளுக்கு வேண்டுகோள் விடுத்தோ கண்டனம் தெரிவித்தோ பப்ளிக் இன்ட்டரஸ்ட் செய்திகள் அனுப்பத்தோன்றவில்லை?
உச்ச நீதி மன்றத்தின் நீதியரசர்கள் ஏன் இவற்றை Suo Motu Cognisance என்கிற வகையில் அவர்களாகவே அரசை நீதி மன்ற படியேற்றும் வழக்குகளாக எடுத்துக்கொள்வதில்லை?
சென்ற ஆகஸ்டு 15 அன்று, நாடே சுதந்திர உணர்வில் திளைக்கையில் ஹரியானாவில் ஒரு எட்டு வயது சிறுமி வன்புணர்வுக்கு ஆளானது எதனால்? குற்றவாளிகள் என்ன ஆயினர்?
பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளுக்கு ஆண்களே சட்டங்கள் இயற்றி, ஆண்களே தண்டனையை முடிவு செய்வது எப்போது மாறுமோ அப்போதாவது நம் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்குமா?
நம் உலகம் நாகரீகமடைவதற்கு முன் பெண்கள் பூரண சுதந்திரத்துடனே வாழ்ந்தது நாம் அறிவோமா? தொல்குடியினர் வாழ்விலும் வன்புணர்வுகள் நிகழ்ந்தன. ஆனால் தண்டனைகளின் கடுமைத்தன்மை தலைமுறைகளுக்கும் அச்சம் உண்டுபண்ணக்கூடியவையாக இருந்தன.
தண்டனைகளால் குற்றங்களை தடுக்க / குறைக்கமுடியவில்லை என்றால் அவற்றால் என்ன பயன்?
நிர்பயாவை சிதைத்தவர்களை தூக்கு உடனடியாக தின்றிருந்தால், இன்று இந்த நிலை வந்திருக்காது...
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று வசன சகதி தெளிக்காமல் பார்ப்பவர்க்கு மட்டுமே வடக்கும் தேய்வது தெரியும். உத்திரப்பிரதேச புலந்த்சாகரில் சில ஆண்டுகள் முன்பு தேசிய நெடுஞ்சாலை வழிப்பறிக்கொள்ளையரால் ஒரு நாற்பது வயது தாயும் பதினைந்து வயது மகளும் உறவினர் முன்பு சிதைக்கப்பட்டனர்.இரு தினங்கள் முன்பு அதே நெடுஞ்சாலையில் தன் தமையனோடு ஒரு திருமண வரவேற்புக்கு சென்று திரும்பிய ஒரு பதினைந்து வயது சிறுமி சிதைக்கப்பட்டாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக