முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தலைப்பில்லா பதிவு!

தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் மேம்பாலம் மீது விரையும் வாகனங்களுக்கு அந்த காட்சியை பார்க்கும் வாய்ப்பு இல்லை. மேம்பாலத்தை அணுகும் இருபுற பள்ளமான சாலைகளிலும் பச்சையும் பழுப்புமாய் அறுவடையான பயிரை தினமும் காலையில் பரப்பி பின்மாலையில் சேகரித்து, அதுவரையில் காவல் காத்து என இயங்கும் பலப்பல மனிதர்களையும் நம் தின வாழ்வில் நாம் சந்திக்க நேர்வதில்லை. தம்முடைய துண்டு நிலங்களில் எள்ளு விதைத்து பாடுபட்டு பயிராக்கி அறுவடை செய்து, உலர்த்த இடமின்றி (உலர்த்தினால்தான் எள்ளு விதைகள் காய்ந்து வெடித்து தரையிறங்கும்) சாலையில் காயவைத்து, உதிர்ந்து உலர்ந்த எள்ளை சேகரித்து மூட்டை கட்டி, எந்த வணிகன் என்ன விலைக்கு கேட்டாலும் உடனே விற்று பயிர்க்கடனை அடைக்க தவிக்கும் இந்த மனிதர்கள் விளைவித்த எள்ளுதான் இந்த புழுதிச்சாலைகளில் இருந்து வண்டியேறி ஆலையில் அரைபட்டு புட்டியில் அடைபட்டு பளிச்சிடும் அங்காடி தட்டுகளி்ல் பல மடங்கு உயர்ந்த விலையில் நம்மை வசீகரிக்கும். எள்ளு மட்டுமல்ல, பலப்பல சிறுதானியங்களும் இதே முறையில்தான் நம் தேசிய நெடுஞ்சாலைகளில் காய்கின்றன. ஆனால் ஒரு பெருந்துயரம் என்னவென்றால் நம்மில் அநேகர் இந்த உணவுப்பொருட்கள...

அணிநிழற்காடு!

  நிழல் அணிந்த காடு. இளங்காலை நேரம். மரங்களில் கிளைகளில் இலைகளில் மோதித்தெறித்து, தரைநிழல் காட்டும் பரப்புக்குள்ளே கட்டுண்டு கிடக்குது சிதறிய சூரியனின் வெளிச்சத்துண்டுகள்.  காற்று புரட்டும்போதெல்லாம் இந்த நட்சத்திரத்துண்டுகள் கூடு விட்டு கூடு பாய்ந்து நிழற்பரப்பில் காட்டுது ஓய்விலா மாய ஜாலம். இரவு முழுதும் போர்த்தியிருந்த பனிப்போர்வையின் கிழிந்த துணுக்காய் புல் நுனியில் தொங்கும் நீர்த்திவலையில் பட்டுத்தெறிக்குது உடையாச்சூரியன். தரையில், இலையில், கிளையில் எல்லாம் அப்பியிருக்கும் நிழலிடையே நட்சத்திரம் நட்சத்திரமாக தேடி பயணம் போகும் சிற்றுயிரனைத்தும் பருகியும் ஒரு சொட்டு கூட தீராது இந்த நட்சத்திர வெளிச்சம். மழை பெய்யும் நாட்களில் மட்டுமே கரைந்தோடும் இந்த வெளிச்சச்சிதறல்கள் கரைந்த நீரிலும் ஜாலம் காட்டும் மாய வித்தையை எத்தனை பேர் ரசித்திருப்போம்? இரவிலே நட்சத்திரங்களை அண்ணாந்து ரசிக்கும் மனிதர்கள் ஏனோ தம் காலடியில் இறைந்து கிடக்கும் இந்த பகல் நட்சத்திரங்களை அவ்வளவாய் ரசிப்பதில்லை. அவர்களை இரவில் மட்டுமே நட்சத்திரங்களை தேடப்பணித்திருக்கிறது கற்ற வாழ்க்கை, அதுவும் நேரமும் ஆர்வமுமிருந...

இந்த நாள்!

  நேற்றைய நாள் என் நெடுநாள் நண்பர்களான தாவரங்களோடு இனிதாக கரைந்தது. நாளை புத்தாண்டு தினம் என்பதை அவர்களுடன் பகிர்ந்தேன். புத்தாண்டு வாழ்த்துகளையும் சொன்னேன். என்னைச்சூழ்ந்த தாவரங்கள் அனைத்தும் என்னை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தன. பின்னர் அவர்களுள் மிக வயதான மரம் ஒன்று என்னிடம் மெல்லிய குரலில் உரையாடத்தொடங்கியது. அந்த உரையாடலின் முடிவில், 'ஒரு வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்து ஒன்று எழுத விரும்புகிறேன் நண்பர்களுக்காக. மிக சுருக்கமாக ஒரு விதை (idea) தாயேன்' என்றேன்.  "தருவேன். ஆனால் நீ அதை அப்படியே பகிர்வாயா என தெரியவில்லையே..." என்றது. 'ஏன் இப்படி சொல்கிறாய்?' என்றேன். "உங்கள் வாழ்வியல் வழக்கம் இந்த ஒரு நாளில் அனைவருக்கும் இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த வருடமாக இருக்கட்டும் என வாழ்த்து அனுப்பி, பின் வருடம் முழுதும் அதை மறந்துவிட்டு, ஒவ்வொருவரும் தமக்கு மட்டுமே இன்பமும் மகிழ்வும் தேடி ஓடுவது, அது அடுத்தவர்களுக்கு துன்பம் தந்தாலும்; உங்களது சக மனிதர்களை பற்றிய ஆழ்ந்த அக்கறை அந்த ஒரு நாள் மட்டும்தானே". ஓ, இந்த உரையாடல் தளம் மாறுகிறதே என்று உணரத்தொடங்கின...

என்னா அடி, என்னா அடி!

ஏழு கல்லுல எத்தனை அடி!! மன்னார்குடியில் எங்கள் லைன் வீட்டு  வாசலில் தொடங்கும் தெரு, கணபதி விலாஸ் பள்ளி தாண்டியும் நீளும். அதில்தான் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களின் பட்டப்பகல்களிலும் செவன் ஸ்டோன்ஸ் ஆட்டம் பொறி பறக்கும். ஏழு கற்கள், அடிக்கல்லானது அளவில் சற்று பெரியது, அடுத்தடுத்த கற்கள் அளவில் கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்துப்போய் ஏழாவது கல்லை உச்சியில் அடுக்கி நிமிர்ந்தால் குத்துமதிப்பாய் கோபுரம் போல தோன்றும். சாட் பூட் த்ரீ போட்டு இரண்டு அணி தலைவர்கள், எந்த அணி கற்களை பந்தால் அடித்து கலைக்கவேண்டும், எந்த அணி அவர்களை மீண்டும் கோபுரம் கட்ட விடாது துரத்தி துரத்தி பந்தால் அடிக்கவேண்டும் என தீர்மாணிக்கும். சாட் பூட் த்ரீயில் கெலித்த அணி பந்தை எறிந்து கல் கோபுரத்தை கலைத்துவிட்டு ஓட வேண்டும். மற்ற அணி அந்த பந்தை பொறுக்கி எடுத்து, கலைத்த அணி வீரர்கள் மீண்டும் கோபுரம் கட்ட முயல்வதை அடித்து தடுக்கவேண்டும், அதாவது அடுக்க முயல்பவரை பந்தால் தாக்கி தலைதெறிக்க ஓடவிடவேண்டும்! பந்தடியிலிருந்து தப்பித்து கோபுரமாய் ஏழு கல்லையும் அடுக்கி விட்டால் அது இமாலய சாதனை!! அடின்னா அடி அப்படி துரத்தி துரத்தி அட...

பழங்கள் உருண்டு ஓடட்டுமே!

விதை விதைப்பது மரத்தின் வேலை இல்லை. இலை உதிர்ப்பது மரத்தின் வேலை இல்லை. பறவைகளுக்கு கூடு தருவது மரத்தின் வேலை இல்லை. காய் கனி தருவது மரத்தின் வேலை இல்லை. ஒதுங்க நிழல் தருவதும், கூரைக்கு மூலப்பொருள் தருவதும், குளிர் காய நெருப்பு தருவதும் மரத்தின் வேலை இல்லை. மரத்தின் வேலை மரமாக இருப்பது மட்டுமே. மற்றதெல்லாமே மனிதர்களது எதிர்பார்ப்பு மட்டுமே. எதிர்பார்ப்பில்லா மரம் உயிர் வளர்க்கிறது. ஏராளமான எதிர்பார்ப்புகள் வழி வாழும் மனிதர்கள் மனிதத்தை நசுக்குகிறோம். மனிதர்களின் வன்முறை மரங்களின் மீது மட்டுமல்ல, சக மனிதர்களின் மீதும்தான். எந்த மரமும் தனது விதைகள் தனக்கென மட்டுமே என வேலியிட்டு வளர்ப்பதில்லை. விதை மட்டுமல்ல, மரத்தின் சகலமும் அவ்வாறே. The Apple never falls far from the (Apple) tree என்கிற சொற்றொடர், குழந்தைகள் பெற்றோர்களைப்போலவே இருப்பார்கள் என மகிழ்வாய் சொல்கிறது. அதே குழந்தைகள் அவர்களது எதிர்பார்ப்பு எல்லைகளை உடைத்து வெளியேறினால், The Apple has fallen far from the tree என்கிற சொற்றொடரை வருத்தமாய் பயன்படுத்துகிறார்கள். தன்னை உயிர்ப்பித்த மரத்தின் நிழலில் வளரும் மரக்கன்றுகளின் வளர்ச்சியை ...

வாடகை சைக்கிள் மகாத்மியம்

  ஐயங்காரத்தெரு அரை டவுசர்களுக்கெல்லாம் ஆதர்சமான ஒரே கடை அந்த வாடகை சைக்கிள் கடைதான். எங்கள் தெருவில் வில்சன் டைனமோ ஸ்டாக்கிஸ்ட் வீட்டுக்கு எதிரே அந்த சைக்கிள் கடை. வில்சன் டைனமோ வீட்டில் ஒரு அறை முழுசும் சதுர சதுரமான அட்டைப்பெட்டிகளில் பளபளவென்று மின்னும் டைனமோ உபகரணங்கள் மூடியிருக்கும். மூடி போட்ட பாட்டில் மாதிரி ஒரு வஸ்து - அதுதான் மின்சார உற்பத்தி கலன். அதை ஹெட்லைட்டுடன் இணைக்கும் கேபிள், அரைத்தேங்கா மூடி சைசில் பள பள சில்வர்  கேசிங்கில் ஹெட் லைட். அந்த வீட்டு மாமா எப்போதும் கடுகடுவென சுற்றிக்கொண்டிருப்பார். அவருக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பில்லை. எனவே நாம் இப்போது சைக்கிள் கடைக்குள் நுழைவோம். எட்டுக்கு பத்து அளவில் கடை. ஐந்தாறு பெரிய சைக்கிள், ரெண்டோ மூணோ சின்ன சைக்கிள். அதில் ஒண்ணு மட்டும் கேரியருடன் இருக்கும். அவருக்கு (hour) பத்து பைசா. மத்யானம் சைக்கிள் கேட்டால் சாயங்காலம்தான் கிடைக்கும். டிமாண்டு அப்படி!  சைக்கிள்கள் தாண்டி ஒரு ஸ்டூல், அதன் முன்னே ஒரு இரும்பு சட்டியில் கரேல் நிறத்தில் தண்ணீர். பக்கத்தில் சுவற்றில் ஆணியடித்து டயர், டயர் ட்யூபு, சைக்கிள் செயின், ...

உருவிட்டாய்ங்க மை லார்ட்!

  நீங்கள்  ஒரு குளிர்பான தயாரிப்பு நிறுவன தலைவர் என வைத்துக்கொள்வோம். எங்கள் ஊர் ஆற்று நீரை பயன்படுத்தி குளிர்பானங்கள் உற்பத்தி செய்ய ஒரு பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்து, பானங்கள் உற்பத்தி செய்யத்தொடங்கிவிட்டீர்கள். அந்த நேரத்தில் நாங்கள், ஊர் மக்கள், எங்கள் ஒவ்வொருவரது வீட்டு கழிவு நீரையும் ஆற்றில் வடியவிடுகிறோம் என வைத்துக்கொள்வோம். இதை அறிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு ஆலை அமைக்க அனுமதி தந்த அரசிடம் முறையிடுவீர்கள். அரசு, தன் இயந்திரங்களை முடுக்கிவிடும், காவல் மற்றும் நீதித்துறைகள் வெகுவேகமாய் செயல்பட்டு உங்கள் சிக்கலை தீர்த்துவைக்கும். சரிதானே? இன்னொரு பிறவியில் நீங்கள் எங்கள் ஊர் மக்களில் ஒருவராக பிறந்து வாழ்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நம் ஊருக்கு வரும் ஆற்றுக்கு நீர் கொண்டுவந்து கொடுக்கும் நீரோடைகளிலும் கால்வாய்களிலும் அந்தப்பகுதி மக்கள் தம் வீட்டுக்கழிவுகளை / ஆலைக்கழிவுகளை வடியவிடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது நாம் என்ன செய்வோம்? நமது குடிநீரை மாசுபடுத்தும் கயவர்களை உடனே கைது செய்து தடுத்து நிறுத்தவேண்டும் என கொந்தளிப்போம், போராடுவோம், சாலை மற...