முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குமிழுகள்!

ஊதுகுழலிலிருந்து உதிர்ந்த நொடியில் காற்றில் அலைந்து வண்ணம்கூட்டி  வண்ணம் கலைத்து வண்ணம்கூட்டி நடனமிடும் நீர்க்குமிழ் வாழ்வு. யார் வாழ்விலோ யாரோ எவரோ கனப்பொழுதில் நீர்க்குமிழாய்  கடக்கையிலும் வண்ணங்கள் கூடிய மிதப்பு, ஒரு புன்னகையை, ஒரு மகிழ்வை,  ஒரு கடந்துபோன பால்யத்தை பார்த்தவர் மனதில் பரவசமாய் படரவிட்டு, பிறவிப்பயன் பெற்றதாய் கரைந்து, காற்றின் வீச்சில் பனிச்சிதறலாய்.. நீர்க்குமிழி வாழ்வாம்! இருந்துவிட்டுப்போகட்டுமே, அப்படியாவது இருந்துவிட்டுப்போகலாமே! பின் குறிப்பு: மதிலுகள் போல பெரிதாய் எழுதுவேனோ தெரியாது, தலைப்பிலாவது rhyming ஆ வைப்போமே என்று குமிழிகளை குமிழுகளாக்கிவிட்டேன் :-)

மந்திரப்படிக்கட்டுகள்!

Perfection. உங்கள் கையில் ஒரு மந்திர தூரிகையும், அட்சயபாத்திரம்போல வண்ணங்கள் நிரம்பிய பாத்திரமும் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வெட்டவெளியில், நீங்கள் உங்களது உயரத்திற்கான முதல் படியை வண்ணம் குழைத்து தூரிகையினால் வரைகிறீர்கள். அந்த ஓவியப்படி, நிசமான படியாக மாறுகிறது.  மகிழ்வுடன் அதில் ஏறி நிற்கிறீர்கள். மனம் அடுத்த அடுத்த படிகளை வரையத்தூண்டுகிறது. வரைந்து வரைந்து, நிசமாக மாறிப்போன மந்திரப்படிகளில் ஏறி ஏறி உயரம் தொடுகிறீர்கள். தரையிலுள்ள புழுதி, நாற்றங்களிலிருந்தும் கசகசப்பான சனத்திரளில் இருந்தும் நீங்கள் விலகிய உயரம் உங்களை மகிழ்விக்கிறது. மகிழ்வோடு படிகள் பல வரைந்து, ஏறி, வரைந்து, ஏறிக்கொண்டே இருக்கிறீர்கள்... எங்கே செல்லும் இந்தப்பாதை? எங்கே முடியும் இந்தப்பயணம்? மலைச்சிகரங்களில் ஏறுவதற்கும் இந்த மந்திரப்படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு, மலைச்சிகரம் ஒரு புள்ளியில் முடிந்துவிடும்; இந்தப்படிக்கட்டுகள் முடியாது நீளும்! கமல், மராத் சஃபின், சுஷாந்த், வான் கா, அந்தோனி போடெய்ன்... இன்னும் பலர் நடந்த பாதை, கரணம் தப்பினால் மரணம் என்கிற சாகசப்பாதை, சிலர் இறந்த பாதையும்கூட.

அது ஒரு நிலாக்காலம்

அது ஒரு நிலாக்காலம். பெயரிலேயே கவிதை வழியுதே! ராம்குமார், சென்னையில் கிண்டியில் சிறுதொழில்பட்டறை நடத்துகிறான். ஒரு பேருந்துப்பயணத்தில் அவளைப்பார்க்கிறான்.  சுகந்தா! மையலாகிறான். அவளது பார்வையும் தன்மீது படுவதை உணர்ந்ததும், அவளை கவர்வதற்காக அழகழகாய் ஆடை உடுத்தி, தினமொரு ஆங்கில நாவலை கையில் எடுத்துக்கொண்டு, டைட்டில் அவள் பார்வையில் படும்படி பஸ்ஸில் நின்றுகொண்டு... ஈர்ப்பு காதலாகி, கசிந்துருகி, கண்ணீர் மல்கி... ராம்குமார் பொய்கள் நிறைய சொல்லும், கம்பீரமான மதுரைக்காரன். பணம் கொழிக்கும் வீட்டில் ஈடுபாடு அதிகமில்லாமல் இருப்பவன். 'சொந்த ஊரிலோ சொந்தத்திலோ பெண் வேண்டாம்' என பெரியகுளத்தில் நோட்டீசு ஒட்டியதால் உறவினர் பார்வையில் 'நட்டு கழண்ட கேசு'. பி.ஏ ட்ராப் அவுட்.  காதலி எம்.ஏ எனத்தெரிந்ததும், தானும் எம்.ஏ என பொய் சொல்லி, அவளது காதலில் நனைந்து, மனசு தாளாமல் ஒரு நாள் உண்மையை சொல்கிறான்; 'பி.ஏ. லிட். க்ளாஸ்ல ஒரு நாள் டி.ஹச். லாரன்சோட சன்ஸ் அண்ட் லவர்ஸ் படிச்சிட்ரேந்தேனா,என்ன படிக்கிற? ன்னு எட்டிப்பாத்த லெக்சரர், 'போர்னோகிராபியா படிக்கிற?! கெட் லாஸ்ட்'னான். லாரன்சோட அர

மாமா மாஸ்க்கு கழண்ட்டுச்சி!

கொரோனா பீதியில் எல்லோரும் முகமூடிகளாய் பதுங்கி வாழ்கிறோம். கொரோனாவுக்கு தெரியுமா நம் முகமூடிச்சிக்கல்கள்?! சர்ஜிகல் மாஸ்க்கு, நான்சர்ஜிகல் மாஸ்க்கு, மூணு லேயரு, நாலு லேயரு, ஆறு லேயரு. பத்து ரூபாய்க்கு ரெண்டு, ஒண்ணு முந்நூறாம் என இடியாப்ப சிக்கல்கள் ஒருபுறம். "லுங்கி, பனியன், துப்பட்டா, துண்டு, வேஷ்டி. எதுனா எட்த்து சுத்திகினு போவியா!' , இல்லல்ல, 'சுத்தாம குந்துவியா!' என மறுபுறம். ஒரு மாஸ்க்கு 'யூஸ் அண்ட் த்ரோ' ன்னா இன்னொண்ணு முப்பது வாஷ்க்கு வருமாம்! சிங்கப்பூர் ப்ரைம் மினிஸ்டரு மாஸ்க்கு போடாதேன்னாரு. அப்பால டாக்டருங்கோ மாஸ்க்கு போடுங்கோன்னாங்கோ! மாஸ்க் போட்டு ஓட்ன கபாலி மூச்சு வுட முடியாத...போய்ட்டான்னாங்கோ!! இத்தன கொளப்பத்தையும் தாண்டி மாஸ்க்கு வாங்கி, நியாபகமா மூக்கை வாய மூடிகிணு போனா...எத்தன தபா தொவைக்கிறது? ஆரு கணக்கு வைக்குறது? அதெல்லாங்கூட பரவால்ல...நூறு ரூபா ஜட்டியே எலாஸ்டிக் மரிச்சிபோயி லொடலொடன்னு களண்டு உளுவ சொல்லோ அத்தயே மாட்டிகினு இஸ்து இஸ்து வுட்டுகினு அர்ணா கவுத்த இறுக்கி கட்டிகினு வவுத்து பொளப்புக்காவ கோடிக்கணக்கான கபாலிங்க ஓட்ற நாடு இது! மாஸ்க்க

வேற்றுக்கிரக விவசாயி!

நேத்தக்கி வரைக்கும் நம்மளோட ஒண்ணா மண்ணா திரிஞ்சவய்ங்கதான், ரேஷன் கார்டு வாங்கவும், சாதி சான்று வாங்கவும், அரசு மானியம் வாங்கவும் கேக்கிற எடத்திலெல்லாம் லஞ்சம் தந்து தந்தே தேஞ்சவங்கதான் இன்னைக்கு சட்டதிட்டங்கள இயற்றுறாங்க, அமல்படுத்துறாங்க. நம்ம ஏரியால பைப்லைன் வருதுன்னா நமக்கு வந்தாப்போதும், அடுத்த வூட்டாளுக்கு வர்லன்னா அது அவம்பாடு என்றும், எனது சம்பாத்தியத்தில் சொத்து சேர்க்க, வருமான வரி குறைக்க என பல காரணங்களுக்காக ஏய்த்தோ ஏமாறியோ வாழ்க்கை நடத்தும் யதார்த்த இந்தியரான நாம், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதுவரை அவர்கள் பழகிய வாழ்வையே பதவியில் இருக்கும்பொழுதும் செய்தால் மட்டும் பொங்குகிறோம்! ஊழல், லஞ்சம், ஓரவஞ்சனை, தனி கவனிப்பு என குறைகள் நீட்டும் நாம், கடவுளை தரிசிப்பதில்கூட Fast Tag வாங்கி பார்க்கிறோமே! அரசியல் வியாதிகள் என புலம்பிக்கொண்டே நாம் நாமாகவே இருக்கும்வரையில் அவர்களும் நாமாகத்தானே இருப்பார்கள்? நாம் நம் சமூகத்தின் பிரதிபலிப்புகள். அவர்கள் நம் பிரதிநிதிகள், வேற்றுகிரகவாசிகள் அல்ல! விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று... சுரை விதை என்றால், முளைக்கத்தானே செய்யும். கைத்தடி

குதிரை லாய காவலர்களும் விவிலியப்பொருளாதாரமும்

குதிரை லாயங்கள் மகத்தான பணியை செய்பவை. அவை, குதிரைகளுக்கு பாதுகாப்பான உறைவிடம், நிழல், உணவு வசதி, குடிநீர் வசதி, பராமரிப்பு வசதி என அனைத்து வசதிகளும் நிரம்பியவை. உள்ளே வசிக்கும் குதிரைகள் வேலை நிமித்தமாய் வெளியே செல்லும்போதெல்லாம் பல வகையான விலங்குகளை வேலை நிமித்தமாய் சந்திக்கவேண்டியிருக்கிறது. கருத்துப்பறிமாற்றங்கள் நிகழ்கின்றன. அதன்பின்னான வீடு திரும்பலில் (லாயம் திரும்புதல்) இரு விலங்குகளுக்குமே ஒரு ஏக்கம் தொற்றிக்கொள்கிறது, 'அவரோட லாயம் இன்னும் நல்லா இருக்கே!'. சரி, இந்த விலங்குகள் ஏங்கிக்கொண்டிருக்கட்டும், நாம் இப்போது மேட்டருக்கு வருவோம். அடக்குமுறைகளாலும் போர்களாலும் ஆனது இவ்வுலகு. மத்திய ஆசியாவில் தொடங்கிய போர்க்குணம் உலகெங்கும் பரவ சில ஆயிரம் ஆண்டுகளே போதுமானதாக இருந்தது.  மத்திய ஆசியாவில் தோன்றிய போர்க்குணம்? இது என்ன பழங்கதை?! மேற்கத்திய நாகரீகத்தொட்டில் தொடங்கிய இடம். உணவு சேமிப்பு தொடங்கிய இடம். உணவு பாதுகாப்பு தொடங்கிய இடம். காடுகள் விளை நிலங்களாய் மாறத்தொடங்கிய இடம். அனைத்து செல்வங்களும் உணவின் வழி குவிந்த இடம். இன்றைய ஜெருசலம் நகரின் அருகில் Gehon Springs என்று

பீட்டர் நார்மன்: 'தலைவா, யூ ஆர் க்ரேட்!'

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின மனிதன் அமெரிக்காவில் ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியால் கழுத்து நசுக்கப்பட்டு, பின்னர் இறந்ததையும், அதைத்தொடர்ந்து எழுந்த எதிர் போராட்டங்களால்,  தொடர் போராட்டங்களால் இந்த உலகமே இன்றளவும் அதிர்ந்து கொண்டிருப்பதையும் அறியாது பீட்டர் நார்மன் உறங்கிக்கொண்டிருக்கிறான். அறிந்தாலும் அது அவனை பாதித்திருக்காது. அவன் அவ்வளவு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறான். ஏனெனில் இந்த உறக்கம் மட்டுமே அவனுக்கு நிம்மதி தருகிறது. "என்ன மனுசன்யா அவன்?" என நாம் தீர்ப்பெழுத அவசரப்படவேண்டாம். இந்த ஒலிப்பதிவு சொல்லும் அவனது கதையை கேளுங்கள். அதன் பின் எழுதுங்கள், உங்கள் வாழ்வின் பக்கங்களை! 13 நிமிடப்பதிவு. ஒரு இனத்தின், ஒரு வரலாற்றின், ஒரு ஒற்றை மனிதனின் வாழ்வை இதற்கு குறைவாக சுருக்க இயலவில்லை.  சற்றே தனியாகி, அமைதியாய் இறுதிவரை கேளுங்கள். உங்கள் எண்ணங்களை பகிருங்கள். நன்றி. https://soundcloud.com/babuji-janakarajan/peter-norman-m4a பின்குறிப்பு: பதிவின் இறுதியில் ஃப்ளாய்ட்டின் முதற்பெயரை ஜான் என்று தவறாய் சொல்லியிருக்கிறேன். Name doesn't matter, actually...

எனக்கு ஆயிரமாயிரம் தோழிகள்

கண்விழிக்கும்போதே என்னுள் தளும்புது காடு. கண்மூடும் விழிக்குவிப்பில் குவியும் காடு, உறங்கும் என்னுள்ளே. உள்ளிழுக்கும் மூச்சிலும் அதுவே உயிரில் நனைந்து வெளியேறும் காற்றிலும் அதுவே. காண்பதனைத்திலும் காட்டின் சுவடு காணும் கண்கள். காட்டின் இடையறாத ஓசை கேட்கும் காதுகள். இலக்கின்றி காட்டுள்ளோடும் உயிரிகளாய் எண்ணங்கள். காட்டு மரங்களில் உதிரும் இலைபோல மலர்போல சொல்லுதிர்க்கும் நா. முறிந்து விழும் மரக்கிளையாய், சாயும் பெருமரமாய் எப்போதாவது அனல்மூட்டும் காட்டின் கனப்பு உள்ளுலவும் உடல். காட்டுள் ஆயிரமாயிரம் உயிரினங்கள் அங்குமிங்கும் அலைந்தாலும் அத்தனையும் உள்ளடக்கி அடர்மௌனம் காக்கும் இதயம். காட்டுள்ளே உயிரனைத்தையும் பொத்திக்கதகதப்பாய் காத்துநிற்கும் பேரன்பில் சொதசொதப்பாய் நெகிழ்ந்த ஆன்மா. கனிந்து விழுந்த பழம் விதையாகி துளிராவதுபோலே செயல். காடு தேடி அலைவதில் நாட்டமில்லை எனக்கு. ஏனெனில், தான் காடென்பதே அறியாத ஏனைய காடுகள் போலன்றி, தன்னுணர்ந்த ஒரு பெருங்காடு நான். என் சிந்தனையும் காடுருவாக்கும், இனி பிறக்கப்போகும் பறவைக்கும் சேர்த்தே. மனிதரின் கால்தடம் பட்ட இடமெலாம் கல்லாய் சமைந்துபோன காடுகள் அனைத்து

அதுதாண்டா கல்வி!

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா கல்வி! தவறான புரிதல்களையே உண்மையென்று நம்பி... போராடிக்கொண்டே இருக்கும் சமூகமாகிவிட்டோம். 1850 களுக்கு முன் இங்கு இயற்கையே பள்ளிக்கூடமாக இருந்தது. நம் கிராம சிறு பிள்ளைகள் வயல்வெளிகளிலும், தானிய களங்களிலும் பல வயது மனிதர்களோடு ஊடாடி வாழ்வு கற்றனர். பள்ளிகள் இந்த கூடாரத்திற்குள் ஒட்டகமாய் நுழைந்து, முதலில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே என்று தொடங்கி, நாலு எட்டாகி பன்னிரண்டாகி பதினாறாகி இன்று ஐம்பதிலும் அஞ்சல் வழி / பகுதி நேரம் / முழு நேரம் என கற்பித்துக்கொண்டே இருக்கிறது, இயற்கைக்கு எதிரான வாழ்வியலை... இன்று உலகெங்கும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மகாமாரி தொடர்ந்தால் மாதக்கணக்கில், வருடக்கணக்கில்கூட பள்ளிகள் மூடப்படலாம். அப்போது நம் சமூகம் என்ன செய்யப்போகிறது?  செயற்கைப்பள்ளிகள் இல்லாத சென்ற நூற்றாண்டுகளில் இயற்கைப்பள்ளி இந்த சிறார்களை வளர்த்தது. இன்றைய நம் வாழ்வில் அத்தகைய வாய்ப்பு??? தேவை இல்லாத ஒன்றிற்கு ஏராளமான 'தேவையை' உண்டாக்கி, அது நமக்கு கிடைத்தே ஆக வேண்டும் என போராடவைத்ததில் அங்கும் வணிகம் வென்றது. போராளிகளாவே வாழ்ந்து முடிவத

நீங்களும் ஆகலாம் மந்திரவாதி!

மேஜிக் - மாயாஜாலம், என்பது மூன்று நிலைகளை கொண்டது்: முதல் நிலை, The Pledge: ஒன்றை மறையவைத்தல். இரண்டாம் நிலை: The Turn: மறைத்ததை வேறொன்றாக மாற்றி நம் கண்முன்னே  தோன்றவைத்தல். மூன்றாம் நிலை: The Prestige:  முதலில் மறையவைத்ததை மீண்டும் நம் கண்முன்னே தோன்றவைத்தல். இவை மூன்றும் நிகழ்ந்தால்தான் மேஜிக் முழுமை பெறும். இவை மூன்றையும் நிகழ்த்தி முடித்ததும், வியப்பில் ஆர்ப்பரித்து ஒலிக்கும் காண்பவரின் கைதட்டல், கிடைக்கும் 'வாழ்த்துக்கள்'... இதுவே எந்த ஒரு மாயாஜால வித்தைக்காரருக்கும் உந்துவிசையாக இருப்பது. நீங்களும் Magician ஆகலாம், எளிதாய்! முதல் நிலை: The Pledge: விதை ஒன்றை மண்ணில் மறையவையுங்கள். இரண்டாம் நிலை: The Turn: அது மரமாக வளர்ந்து இலை, பூ, காய், கனி என குலுங்கும் வரை நீர் ஊற்றுங்கள். Magic இதனுடன் முடிவதில்லை. ஏனெனில் மூன்றாம் நிலையான The Prestige இன்னும் எஞ்சியிருக்கிறதே! மூன்றாம் நிலை: The Prestige: கனியிலிருந்து விதை(கள்) மீண்டும் வருவது! இந்த Magic இன்னும் உன்னதமானது. ஏனெனில், நீங்கள் வளர்த்த மர நிழலில் ஒதுங்கி, பழத்தை உண்டு, விதை மீண்டு(ம் )அதனுள் இருந்து தோன்றும் அற்புதத்