நேத்தக்கி வரைக்கும் நம்மளோட ஒண்ணா மண்ணா திரிஞ்சவய்ங்கதான், ரேஷன் கார்டு வாங்கவும், சாதி சான்று வாங்கவும், அரசு மானியம் வாங்கவும் கேக்கிற எடத்திலெல்லாம் லஞ்சம் தந்து தந்தே தேஞ்சவங்கதான் இன்னைக்கு சட்டதிட்டங்கள இயற்றுறாங்க, அமல்படுத்துறாங்க.
நம்ம ஏரியால பைப்லைன் வருதுன்னா நமக்கு வந்தாப்போதும், அடுத்த வூட்டாளுக்கு வர்லன்னா அது அவம்பாடு என்றும், எனது சம்பாத்தியத்தில் சொத்து சேர்க்க, வருமான வரி குறைக்க என பல காரணங்களுக்காக ஏய்த்தோ ஏமாறியோ வாழ்க்கை நடத்தும் யதார்த்த இந்தியரான நாம், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதுவரை அவர்கள் பழகிய வாழ்வையே பதவியில் இருக்கும்பொழுதும் செய்தால் மட்டும் பொங்குகிறோம்!
ஊழல், லஞ்சம், ஓரவஞ்சனை, தனி கவனிப்பு என குறைகள் நீட்டும் நாம், கடவுளை தரிசிப்பதில்கூட Fast Tag வாங்கி பார்க்கிறோமே!
அரசியல் வியாதிகள் என புலம்பிக்கொண்டே நாம் நாமாகவே இருக்கும்வரையில் அவர்களும் நாமாகத்தானே இருப்பார்கள்?
நாம் நம் சமூகத்தின் பிரதிபலிப்புகள். அவர்கள் நம் பிரதிநிதிகள், வேற்றுகிரகவாசிகள் அல்ல!
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று... சுரை விதை என்றால், முளைக்கத்தானே செய்யும்.
கைத்தடி ஊன்றிய கண்ணாடிக்கிழவன் 'நாமே மாற்றத்தின் விதை' என ஊன்றிச்சென்றது, கண்டிப்பாய் முளைக்கும். ஏனெனில் அது நல்விதை.
"அது சரி, இப்ப இன்னா சொல்ல வர்ற?" என்ற வழக்கமான கேள்விக்கு எனது விடை:
ஒரு சதவீதம் மாறுவோம், ஒவ்வொரு நாளும். நமக்கு தேவையான நான்கு வேலைகளுக்கு லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கும் என்றால், அதில் ஒன்றிற்காவது லஞ்சம் தராமல் எப்படி வேலை வாங்கலாம் என சிந்திப்போம். வழி பிறக்கும்.
அந்தக்கிழவன் ஊன்றிச்சென்றது நல்விதைதான். நாம் நல்ல நிலமா என்பதுதான் கேள்வி!
பதிலளிநீக்குவாழ்க வையகம்.
உலகிலுள்ள பொறுப்புடைய
தலைவர் எல்லோரும்
உயிர் அறிவை உள்ளுணர்வாய்ப் பெற்று
ஆட்சி நடத்தினால்
எல்லோரும் எல்லாமும் பெற்று வளமாய் வாழலாம்.
நல்லதையே
எண்ணுவோம், சிந்திப்போம்,
பேசுவோம், செய்வோம்.
நல்லதே நடக்கும்.
அடுத்த நொடுநுல் ஒளிந்திருக்கக்கூடிய ஆச்சரியங்கள் ஏராளம். நல்லதே நடக்கும் :-)
நீக்கு