ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா கல்வி!
தவறான புரிதல்களையே உண்மையென்று நம்பி... போராடிக்கொண்டே இருக்கும் சமூகமாகிவிட்டோம்.
1850 களுக்கு முன் இங்கு இயற்கையே பள்ளிக்கூடமாக இருந்தது. நம் கிராம சிறு பிள்ளைகள் வயல்வெளிகளிலும், தானிய களங்களிலும் பல வயது மனிதர்களோடு ஊடாடி வாழ்வு கற்றனர்.
பள்ளிகள் இந்த கூடாரத்திற்குள் ஒட்டகமாய் நுழைந்து, முதலில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே என்று தொடங்கி, நாலு எட்டாகி பன்னிரண்டாகி பதினாறாகி இன்று ஐம்பதிலும் அஞ்சல் வழி / பகுதி நேரம் / முழு நேரம் என கற்பித்துக்கொண்டே இருக்கிறது, இயற்கைக்கு எதிரான வாழ்வியலை...
இன்று உலகெங்கும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மகாமாரி தொடர்ந்தால் மாதக்கணக்கில், வருடக்கணக்கில்கூட பள்ளிகள் மூடப்படலாம். அப்போது நம் சமூகம் என்ன செய்யப்போகிறது?
செயற்கைப்பள்ளிகள் இல்லாத சென்ற நூற்றாண்டுகளில் இயற்கைப்பள்ளி இந்த சிறார்களை வளர்த்தது. இன்றைய நம் வாழ்வில் அத்தகைய வாய்ப்பு???
தேவை இல்லாத ஒன்றிற்கு ஏராளமான 'தேவையை' உண்டாக்கி, அது நமக்கு கிடைத்தே ஆக வேண்டும் என போராடவைத்ததில் அங்கும் வணிகம் வென்றது.
போராளிகளாவே வாழ்ந்து முடிவதும், விழித்துக்கொண்டு மாற்றத்தின் விதைகளாக மாறுவதும் அவரவர் விருப்பம்...
கருத்துகள்
கருத்துரையிடுக