ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின மனிதன் அமெரிக்காவில் ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியால் கழுத்து நசுக்கப்பட்டு, பின்னர் இறந்ததையும், அதைத்தொடர்ந்து எழுந்த எதிர் போராட்டங்களால், தொடர் போராட்டங்களால் இந்த உலகமே இன்றளவும் அதிர்ந்து கொண்டிருப்பதையும் அறியாது பீட்டர் நார்மன் உறங்கிக்கொண்டிருக்கிறான். அறிந்தாலும் அது அவனை பாதித்திருக்காது. அவன் அவ்வளவு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறான். ஏனெனில் இந்த உறக்கம் மட்டுமே அவனுக்கு நிம்மதி தருகிறது.
"என்ன மனுசன்யா அவன்?" என நாம் தீர்ப்பெழுத அவசரப்படவேண்டாம். இந்த ஒலிப்பதிவு சொல்லும் அவனது கதையை கேளுங்கள். அதன் பின் எழுதுங்கள், உங்கள் வாழ்வின் பக்கங்களை!
13 நிமிடப்பதிவு. ஒரு இனத்தின், ஒரு வரலாற்றின், ஒரு ஒற்றை மனிதனின் வாழ்வை இதற்கு குறைவாக சுருக்க இயலவில்லை.
சற்றே தனியாகி, அமைதியாய் இறுதிவரை கேளுங்கள். உங்கள் எண்ணங்களை பகிருங்கள். நன்றி.
https://soundcloud.com/babuji-janakarajan/peter-norman-m4a
பின்குறிப்பு: பதிவின் இறுதியில் ஃப்ளாய்ட்டின் முதற்பெயரை ஜான் என்று தவறாய் சொல்லியிருக்கிறேன். Name doesn't matter, actually...
கருத்துகள்
கருத்துரையிடுக