முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீங்களும் ஆகலாம் மந்திரவாதி!


மேஜிக் - மாயாஜாலம், என்பது மூன்று நிலைகளை கொண்டது்:

முதல் நிலை, The Pledge: ஒன்றை மறையவைத்தல்.

இரண்டாம் நிலை: The Turn: மறைத்ததை வேறொன்றாக மாற்றி நம் கண்முன்னே  தோன்றவைத்தல்.

மூன்றாம் நிலை: The Prestige:  முதலில் மறையவைத்ததை மீண்டும் நம் கண்முன்னே தோன்றவைத்தல்.

இவை மூன்றும் நிகழ்ந்தால்தான் மேஜிக் முழுமை பெறும்.

இவை மூன்றையும் நிகழ்த்தி முடித்ததும், வியப்பில் ஆர்ப்பரித்து ஒலிக்கும் காண்பவரின் கைதட்டல், கிடைக்கும் 'வாழ்த்துக்கள்'...

இதுவே எந்த ஒரு மாயாஜால வித்தைக்காரருக்கும் உந்துவிசையாக இருப்பது.

நீங்களும் Magician ஆகலாம், எளிதாய்!

முதல் நிலை: The Pledge: விதை ஒன்றை மண்ணில் மறையவையுங்கள்.

இரண்டாம் நிலை: The Turn: அது மரமாக வளர்ந்து இலை, பூ, காய், கனி என குலுங்கும் வரை நீர் ஊற்றுங்கள்.

Magic இதனுடன் முடிவதில்லை. ஏனெனில் மூன்றாம் நிலையான The Prestige இன்னும் எஞ்சியிருக்கிறதே!

மூன்றாம் நிலை: The Prestige: கனியிலிருந்து விதை(கள்) மீண்டும் வருவது!

இந்த Magic இன்னும் உன்னதமானது. ஏனெனில், நீங்கள் வளர்த்த மர நிழலில் ஒதுங்கி, பழத்தை உண்டு, விதை மீண்டு(ம் )அதனுள் இருந்து தோன்றும் அற்புதத்தை காணும் பல தலைமுறைகளின் கைதட்டல்கள், வாழ்த்துக்கள், உங்கள் தலைமுறை தாண்டியும் உங்கள் சந்ததியினருக்கு சென்று சேரும் அதி உன்னத time travel Prestige, இதில் மட்டுமே சாத்தியம் :-)

The original quote from Christopher Nolan's magical movie about Magic, titled "The Prestige":


Cutter: "Every magic trick consists of three parts, or acts. The first part is called the pledge, the magician shows you something ordinary. The second act is called the turn, the magician takes the ordinary something and makes it into something extraordinary. But you wouldn't clap yet, because making something disappear isn't enough. You have to bring it BACK. Now you're looking for the secret. But you won't find it because of course, you're not really looking. You don't really want to work it out. You want to be fooled."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்