கொரோனா பீதியில் எல்லோரும் முகமூடிகளாய் பதுங்கி வாழ்கிறோம்.
கொரோனாவுக்கு தெரியுமா நம் முகமூடிச்சிக்கல்கள்?!
சர்ஜிகல் மாஸ்க்கு, நான்சர்ஜிகல் மாஸ்க்கு, மூணு லேயரு, நாலு லேயரு, ஆறு லேயரு. பத்து ரூபாய்க்கு ரெண்டு, ஒண்ணு முந்நூறாம் என இடியாப்ப சிக்கல்கள் ஒருபுறம்.
"லுங்கி, பனியன், துப்பட்டா, துண்டு, வேஷ்டி. எதுனா எட்த்து சுத்திகினு போவியா!' , இல்லல்ல, 'சுத்தாம குந்துவியா!' என மறுபுறம்.
ஒரு மாஸ்க்கு 'யூஸ் அண்ட் த்ரோ' ன்னா இன்னொண்ணு முப்பது வாஷ்க்கு வருமாம்!
சிங்கப்பூர் ப்ரைம் மினிஸ்டரு மாஸ்க்கு போடாதேன்னாரு. அப்பால டாக்டருங்கோ மாஸ்க்கு போடுங்கோன்னாங்கோ! மாஸ்க் போட்டு ஓட்ன கபாலி மூச்சு வுட முடியாத...போய்ட்டான்னாங்கோ!!
இத்தன கொளப்பத்தையும் தாண்டி மாஸ்க்கு வாங்கி, நியாபகமா மூக்கை வாய மூடிகிணு போனா...எத்தன தபா தொவைக்கிறது? ஆரு கணக்கு வைக்குறது?
அதெல்லாங்கூட பரவால்ல...நூறு ரூபா ஜட்டியே எலாஸ்டிக் மரிச்சிபோயி லொடலொடன்னு களண்டு உளுவ சொல்லோ அத்தயே மாட்டிகினு இஸ்து இஸ்து வுட்டுகினு அர்ணா கவுத்த இறுக்கி கட்டிகினு வவுத்து பொளப்புக்காவ கோடிக்கணக்கான கபாலிங்க ஓட்ற நாடு இது! மாஸ்க்கயும் அப்படித்தானே பயன்படுத்துவம்!
"ஆதார் கார்டு காட்டினா பேமிலிக்கு மாசத்துக்கு பத்து மாஸ்க்கு ஃப்ரீ! வாங்கோ வாங்கோ" ன்னு நம்ம 'கண்ண இமை மாரி காக்குற' அர்சு தந்தாலும் அத்தயும் வெளி மார்க்கட்ல வித்து காசாக்கிகினு இத்துப்போன மாஸ்க்கு முடிகயிறு போட்டு கட்டிகினு சுத்துற கூட்டமுய்யா நாங்க, அய்யா கொரோனா, ஒன்னோட ரேஞ்சுக்கு பணக்காரனுங்களுக்கு மட்டுமே வர்றமாரி ம்யூட்டேட் ஆய்டுய்யா, எங்கள உட்டுடுய்யா! எங்க புள்ள குட்டிகளெல்லாம் மாஸ்க்க களட்டிப்போட்டு இஸ்கூலுக்கு படிக்க போவும், ஒனக்கும் புண்ணியமாப்போவும்!
Images maybe under copyright. Used from web only for illustration.
கருத்துகள்
கருத்துரையிடுக